சித்திரைப் பௌர்ணமி பெருவிழா

சித்திரா பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு

மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இந்த ஆண்டு மே மாதம் 12-ம் தேதி பகல் 12 மணி தொடங்கி 13-ம் தேதி பகல் 12 மணி வரை பௌர்ணமி திதி உள்ளதால், இரவு கொண்டுவரும் 12-ம் தேதியன்று பெரும்பாலும் சித்திரா பௌர்ணமி அனுசரிக்கப்படுகிறது.
இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எவ்வளவு புண்ணிய நாட்கள்!
அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள்.

முறைப்படி செய்தால்தான் பலன்….

கலச விளக்கு வேள்விப் பூசைகள் எப்பொது யார் செய்தாலும் மழை வரும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அடிகளார் அனுமதியுடனும், பக்தியுடனும், நான் அருளிய வழிமுறைகளுடனும், முறைப்படியும் செய்தால் தான் பலன் கிடைக்கும்.

அம்மாவின் அருள்வாக்கு.

ஓம் சக்தி.