சப்தங்கள் ஆற்றல் உள்ளவை என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒலிகள் வாயிலாக உலகம் படைக்கப்படுகின்றது; காக்கப்படுகின்றது; அழிக்கப்படுகின்றது. என்கிறார்கள் தத்துவ ஞானிகள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் நாம் கண்ணால் காண்கிறோம். மனத்தால் உணர்கிறோம். மனத்தில் ஓர் எண்ணம் எப்படி உருவாகிறது? சப்தங்களால் தான் உருவாகிறது. நாளைக்கு ஊருக்கு புறப்பட வேண்டும் என்று ஓர் எண்ணம் வருகின்றது. எப்படி வருகின்றது? சொற்கள் மூலமாகவே அந்த எண்ணம் அடிமனத்தில் உருவாகின்றது. அந்தச் சொற்களிலேயே சப்தங்கள் அடங்கியுள்ளன. மிக நுண்ணிய ஒலியலைகளை உண்டாக்குவதன் மூலம் திரவ நிலையில் உள்ள பொருட்களை திடப் பொருளாகவும், வாயுப் பொருளாகவும் மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம். அப்படி உண்டாக்குவதன் மூலம் தண்ணீரில் உள்ள உயிர்களைக் கொல்ல முடியும் என்று கூறப்படுகின்றது. நாம் பேசுகின்ற – உண்டாக்குகின்ற ஒலிகள் அழிவதில்லை.அந்த ஒலியலைகள் ஆகாயத்தில் சஞ்சரிக்கின்றன. நம் காதுக்கு எட்டாத சூட்சும சப்தங்கள் அண்டத்திலும் உண்டு, பிண்டமான இந்த உடம்பிலும் உண்டு. மந்திர_யோகம் – மந்திர_ஜெபம்: ******************************************* எப்போதும் அலைபாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு *#மந்திர_யோகம்* என்கின்ற ஒரு வழி உண்டு. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்தால் சில தெய்வீக சக்திகள் ஒருவனுக்குக் கிடைக்கின்றன. அவன் மனத்தில் படிந்திருக்கும் எண்ணப் படிவங்கள் – பூர்வ ஜென்ம வாசனைகள் மந்திர ஜெபத்தால் தேய்க்கப்படுகின்றன. அதனால் பழைய பாவங்கள் குறைகின்றன. சஞ்சித கர்ம வினை என்ற பாவ மூட்டைகள் குறைகின்றன.மந்திர ஜெபத்தினால் உண்டாகும் ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன. மந்திரத்திற்குரிய அதி தேவதையின் உதவி சாதகனுக்குக் கிடைக்கின்றது. அவன் உடம்பில் உள்ள குண்டலினி சக்தி கிளர்ந்தெழ மந்திர ஜெபம் உதவி செய்கிறது. பூர்வ ஜென்ம வாசனைகளால் அழுக்குப் படிந்த உடம்பும் மனமும், ஆன்மாவும் சுத்தமாகி வருகின்றன. முதலில் உள்ளுடம்பில் சில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலேயே உண்டாகின்றன. உள்ளுடம்பு மந்திர உடம்பாக மாறுகிறது. எப்போது_பலன்? ************************ எவ்வளக்கெவ்வளவு பக்தியும், சிரத்தையும், கட்டுப்பாடும், ஒரு குறிப்பிட்ட கால அளவும் மன ஒருமைப்பாடும் ஒழுங்காக- சீராக அமைகின்றனவோ அந்த அளவு ஒருவனுடைய மந்திரம் பயன்தரத் தொடங்குகிறது. கண் ஒன்று பார்க்க – காதொன்று கேட்க – வாயொன்று கூற – மனமொன்று நினைக்க மந்திர ஜெபம் பண்ணுகிற நமக்கு முழுப் பயனும் கிடைப்பதில்லை. கருமச்சட்டம் ******************* நாமெல்லாம் மன ஒருமைப்பாடோடு மந்திரம் படிக்க முடியவில்லையே என விட்டு விடலாமா? கூடவே கூடாது.நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு; பயனுண்டு/ என்பது பிரபஞ்ச விதி.அரைகுறையாக மந்திர ஜபம் பண்ணினாலும் அதற்குறிய பலன்கள் உண்டு. விஞ்ஞான சோதனைகள் ********************************* மந்திரங்கள் சப்தங்கள்தானே என்று கேட்கிறார்கள். அந்த சப்தங்கள் உண்டாக்குகின்ற ஆற்றல்கள் வலிமை வாய்ந்தவை என்று விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. சத்தங்கள் என்பவை அதிர்வுகள்தான். அவை குறிப்பிட்ட வடிவை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு சப்தமும் ஒவ்வொரு வடிவை உண்டாக்குகின்றன. வெவ்வேறு சப்தக் கலவைகள் சேரும்போது வெவ்வேறு வடிவங்களை உண்டாக்குகின்றன. சில கருவிகளை வைத்து ஒலியெழுப்பி அவற்றின் மூலம் மணலில் பல வரைகணித வடிவங்களை ( geometric figures) உண்டாவதை பரிசோதனை மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நம் நாட்டு சங்கீத நூல்களில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு ராக தேவதை உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது. உதாரணமாக மேக ராகத்தைப் பாடினால் யானை மேல் கம்பீரமாக ஒருவன் அமர்ந்துள்ள வடிவம் அமைகிறது. வசந்த ராகம் பாடினால் மலர் சூடிய இளைஞன் உருவம் உருவாகிறது என்கிறார்கள். இதில் உண்மையுண்டா என ஆராய்ந்து பார்த்தால் Mrs.Waits Hughes என்ற பெண்மணி அதுபற்றி Voice Figures என்ற நூல் எழுதி இருக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேடம் பின்லாங் ( Madam Finlang) கன்னி மேரியைப் புகழ்ந்து பாடிய போது மேரியன்னை ஏசுவை மடியில் தாங்கிய உருவம் வெளிப்பட்டது. வங்காளத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவன் பைரவர் பற்றிப் பாடிய போது பைரவரும் அவர் வாகனமான நாயும் தோற்றம் அளித்தன. மன ஒருமையோடு எவ்வளவுக்கெவ்வளவு இறைவன் புகழைப் பாடுகிறோமோ மந்திர ஜெபம் செய்கிறோமோ இந்த அளவுக்கு அந்த இறைவனின் குறிப்பிட்ட வடிவம் வழிபாட்டில் வெளிப்படுகின்றது. நாம் மன ஒருமைப்பாடோடு மந்திர ஜெபம் செய்வதி்லை. அதுதான் நம்மிடம் உள்ள குறை. அதன் காரணமாகவே அந்த வடிவங்களை நம்மால் காண முடிவதில்லை. எல்லா மந்திரங்களும் அன்னையின் வடிவங்கள்தான் அத்தகைய மந்திரங்களை மன ஒருமையோடு தீவிரமாக ஜெபம் செய்தால் அவளே அந்தந்த மந்திரங்களுக்குரிய வடிவத்தில் கை, கால், ஆயுதங்களோடு முத்திரைகளோடு காட்சி தருகிறாள். ஓங்காரம் **************** இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதில் இருந்துதான் நாத, ரூப, பிரபஞ்சம் முழுக்க வந்தது. நாத சொரூபிணியான அன்னையே ஓங்காரமாகி, அந்தப் பிரணவ மந்திரமுமாகி நிற்கிறாள். அ, உ , ம் என்ற மூன்றும் சேர்ந்ததே ஓங்காரம். இந்த ஓங்காரத்திலிருந்தே சொல்லுலகம் என்ற சொற் பிரபஞ்சம் வந்தது. பொருளுலகம் என்ற பொருட் பிரபஞ்சம் வந்தது. அ – படைத்தல் தொழிலைக் குறிப்பது உ – காத்தல் தொழிலைக் குறிப்பது. ம் – அழித்தல் தொழிலைக் குறிப்பது இவளைப் படிப்றிவால் உணர முடியாது. பதவியால் அறிய முடியாது. ஓமசக்தி மந்திரத்தால் இவள் இருப்பை மட்டுமே உணர முடியும். அதற்கு பூர்வ புண்ணியமும் வேண்டும். சக்தி ஒளி 89 அக்டோபர் “ஓம் சக்தி மந்திரம் தான் உனக்குத் தாரக மந்திரம். “கஷ்டம் வரும்போதெல்லாம் மந்திரநூல் படி! எல்லாவற்றையும் உரு ஏற்று” “ஓய்வு கிடைக்கிறபோதெல்லாம் அம்மா மந்திரம் சொல்லி உருவேற்று” “மந்திரங்களை மனத்திற்குள் படித்தாலும் போதும்”. என்பன அன்னை மந்திரம் பற்றிக் கூறிய அருள்வாக்குகள். ?அன்னையின் அருள்வாக்கு: “””””””””””””””””“”””””””””””””””””””””””””“”””””””””””””””””””””” மகனே! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொடுத்தேன். விபரம் புரிந்தவன் பிடித்துக் கொண்டான். ஆற்றங்கரையிலும், அரசமரத்தடியிலும் உட்கார்ந்து ஜெபம் பண்ணி உருவேற்றினான்.பிரம்மத்தையேவசப்படுத்தினான். மற்றவனெல்லாம் ஆடு, மாடு மேய்ப்பதிலேயே கருத்தாக இருந்தான். நான் என்ன செய்ய முடியும் மகனே! நம்பிக்கையும், பக்தியும், முயற்சியும் இருக்கிறவனுக்குத்தானே தெய்வம் உதவி செய்ய முடியும். இப்போது இந்த மந்திரங்களை உருவேற்றிக் கொடுத்திருக்கிறேன், பற்றிக் கொண்டு கரையேறுவது உங்கள் கைகளில் இருக்கிறது மகனே! அன்னையின் அருள்வாக்கு

 ]]>