ஓம் சக்தியே! மேல் மருவத்தூர் அன்னை அருள்திரு ஆதிபராசக்தியின் ஒவ்வொரு செயலும் மேல் மருவத்தூரில் நடக்கும் அற்புதமாகும். ஆடிப்பூரத்தன்று அன்னையெ தனது கோவிலைச் சுற்றி உடல்வலம் வரும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும். தம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் அற்புத நிகழ்ச்சியாகும். ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் சாதி மத பேதமின்றிப் பல நாட்களில் உடல்வலம் வந்து அவரவர் வினைப்பயன்களை, பாபங்களை இப்புண்ணிய பூமியில் போக்குகின்றார்கள். அலைகள் இப்புண்ணிய மண்ணால் ஈர்க்கப்பட்டு நீக்கப்படுகின்றன. அன்னையின் அருள்வாக்கில் ஆணையிடப்பட்டு உடல்வலம் வந்து அவரவர் வினைப்பயன்களை, பாபங்களை இப்புண்ணிய பூமியில் போக்குகின்றார்கள். அவைகள் இப்புண்ணிய மண்ணால் ஈர்க்கப்பட்டு நீக்கப்படுகின்றன.

அன்னையின் அருள்வாக்கில் ஆணையிடப்பட்டு உடல்வலம் வருவோரின் வினைக்கொடுமைகள் தணித்து நலம் கண்டவர்கள் ஆயிரமாயிரம் பேர்! இப்படி ஈர்க்கப் பெற்ற அவ்வினைப் பயன்களை, பாபங்களை ஆடிப்பூரத் திருநாளில் அன்னை ஆதிபராசக்தியே அருள்திரு பங்காரு அடிகளார் வடிவில் உடல்வலம் வந்து ஏற்று அம்மண்ணையே மேலும் புனிதப்படுத்துகின்றாள். ஆடிப்பூர விழாவே, பூமாதேவியாக வடிவெடுத்திருக்கும் ஆதிபராசக்திக்கு நாம் எடுக்கும் பெருவிழாதானே! இம்மண்ணில் எவ்வளவு பாபமூட்டைகள் விடப்பட்டுள்ளனவோ அதற்கேற்ப அன்னையின் பாலகன் உடல்வலம் வந்தபின் உயிர் துடித்து உயிர் பெறும் நிகழ்ச்சியைக் கண்டவர்களுக்கல்லவா புரியும், நம் கற்பனைக்கும், எப்பெரிய அறிவு ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஆதிபராசக்தியின் ஆடிப்பூர உடல்வலம் வரும் காட்சி மேல்மருவத்தூர் மண்ணில்தானே நடைபெறுகிறது! உலகிலேயே வேறு எங்குக் காண முடியும்?

மெய்ஞ்ஞானத்தால் மட்டுமே அறிய வேண்டிய இச்செயலை அன்னையின் அருளால் விஞ்ஞானத்தாலும் ஆராய முற்படலாமல்லவா? சக்தி இல்லையேல் சிவம் சவம்தான். அதாவது சக்தி இல்லையேல் சிவம் இல்லை. எல்லாப் பொருள்களும் சவம் போல் அழிந்து போகும் பொருள்களாகிவிடும். யாக்கை நிலையாது! ஒவ்வொரு உயிருள்ள பொருளிலும் அல்லது உடலிலும், மின்சக்தி இருக்கிறது, இம்மின்சக்தி உடலில் இல்லையேல் அது சவமாகிறது. இறந்த உடலில் சவத்தில் மின்சக்தி இல்லை. ஆனால் மின்சக்தி உடலில் பாய்சச்ப்பட்டால், உடல் மூலம் மின்சக்தி பூமிக்குப் பாய்கின்றது. உயிர் பிரிகின்றது. மின்னல் மேகங்களில் ஏற்படும்போது, அதிக சக்தி வாய்ந்த அம்மின்சக்தி மிக்குத்தானே பாய்கின்றது! அதுபோல் பாபம் அதிகமாக நம் உடலில் சேரும் போது இப்பூமிதேவி தானே தாங்கிக் கொள்கிறாள். மின்னோட்டத்திற்கு அல்லது மின்னல் பாயும் போது அதற்குத் தடையாக இருக்கும் பொருள்கள் அல்லது தடை செய்யும் பொருள்கள் எரிந்து போனது போல அதிக பாபங்களைச் செய்து பாபமூட்டைகளை நாம் சுமக்கும் போது அதை விரைவில் குறைந்துக் கொள்ளாவிடில் அது உடலில் வியாதியாக மாறுகின்றது. இவ்வியாதிகளைக் கர்ம வியாதிகள் என்று பெரியோர் கூறுவர்.

மின்சாரம் எல்லா இடங்களிலும் விரைவாகப் பாய்வதில்லை. சுளி மண்ணிலும், ஈரமண்ணிலும், ஈரமணலிலும் வெகு விரைவடிகப் பாய்ந்து விடுகின்றது. கருங்கல்லில், பாறையில் பாய்வதில்லை. செப்புக் கம்பியில் பாய்ச்சினால் உடன் நொடிப் பொழுதில் பூமிக்குள் பாய்ந்து விடுகின்றது. அதிக பருமனுள்ள கம்பியில் அதிக அளவில் மின்சாரம் பாய்கின்றது. ஈரமாக இருக்கும் மண்ணில் வெகுவிரைவில் அதிக அளவில் இணைந்து விடுகின்றது.

இதேபோல்தான் நம் உடலில் சேர்க்கப்படும் பாபங்கள் சில புண்ணிய இடங்களில் உள்ள மண்ணில்தான் ஈர்க்கப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட பெரும் புண்ணிய பூமிதான் அம்மேல்மருவத்தூர் மண். அன்னை ஆதிபராசக்தி இருந்து அருள்பாலிக்கும் மண், குளித்த பின்னரே நாம் கோவிலை வலம் வந்து சுற்றுகிறோம். ஈரத்தில் மின்சக்தி விரைவாகப் பாய்ந்து விடுவது போல் நமது பாபங்கள் குளித்த உடலிலிருந்து விரைவாக ஈர்க்கப்படுகின்றனவோ? பாபமெல்லாம் நீக்கப்பட்டவன் அல்லது பாவமே இல்லாத மனிதன் ஞானியாக பூமியின் மேல் படாமல் ஆகாயத்தில் மிதக்க முடிகின்றதோ? தேவர்களின் கால்கள் பூமியில்படாது என்பதன் தத்துவமே இது தானோ?

தமது பாவங்களை ஊழ்வினைப் பயன்களை உடன் அழித்துக் கொள்ளத்தான் அன்னை குளித்த பின் உடல்வலம் வரும்படிக் கூறுகின்றாளோ? காலில் நிற்பதைவிட உடல் பூமியில் படுத்துப்படும்போது பல மடங்கு பரப்ளவில் படுகின்றது. குளித்த ஈர உடம்பில் அதிக பரப்பளவு உள்ள நில இணைப்புக் குழாயில், தண்ணீர் விடப்பட்ட காலங்களில், அல்லது ஈரப்பசை உள்ள மண்ணில், அதிக அளவில் மின்சக்தி வெகு விரைவில் பாய்வதைப் போல், குளித்து உடல்வலம் வரும் போது நமது பாபங்களும் ஊழ்வினைப் பயன்களும் அதிகமாக அதிவிரைவில் ஈர்க்கப்பட்டு நாம் பெரும்பாலான வகையில் விடுதலை பெறுகின்றோமோ?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை நாம் ஒருமுறை மேல் மருவத்தூர் அன்னை அருள்திரு ஆதிபராசக்தி ஆலயத்தை உடல்வலம் வந்தால் அனுபவ பூர்வமாக உணர முடியும்.

ஓம் சக்தி நன்றி: சக்திஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here