சித்தர்களின் இரகஸ்யங்கள்

சுவாமி முக்தானந்தா என்ற சித்தஞானி பம்பாயை அடுத்த கணேஷ்புரியில் இப்பொழுது இருந்து வருகிறார். பிரசித்திபெற்ற பகவான் நித்யானந்த சித்தரின் சீடராவார் சுவாமி முக்தானந்தர். அவர் எழுதிய சித்தர்களின் இரகஸ்யங்கள் என்ற மூல நூலிலிருந்து தொகுக்கப்பெற்றத் தமிழாக்கம் செய்யப் பெற்றவை, மேல்மருவத்தூரில் இருந்து அருள்பாலிக்கும் அன்னை ஆதிபராசக்தியின் உபதேசங்களை அடியொற்றி இருத்தலின் அன்னையின் பக்தர்கட்கு இவை ஏற்புடையதாகும்.

1. சித்தயோகமும், தியானமும் எந்த ஒரு சமயத்திற்கோ, கொள்கைக்கோ, அறநெறிகட்கோ மறுப்பாக எழுந்தவை அல்ல.

2. இந்தத் தியானப் புரட்சி எந்த அரசாங்கத்தின் எந்தச் சட்டத்தையும் புறக்கணிப்பதன்று.

3. எந்த சாதி, சமுதாய நெறி முறைக்கும் மாறுபட்டவை அல்ல.

4. எந்த ஒரு நாட்டின், நற்பண்புகளையோ எடுத்து ஆய்வது இல்லை,

5. இந்தத் தியானப் புரட்சி, மக்கள் தங்களுக்குள் பாராட்டும் வெறுப்புணர்ச்சி, பிறர்மாட்டுக் காட்ட வேண்டிய தயை இல்லாமை அறியாமை, பொய் முதலியவற்றை மட்டுமே எதிர்ப்பதாகும்.

6. சித்தயோகம் என்பது உயர்வு – தாழ்வு, பெரியவர் – சிறியவர், செல்வர் – ஏழை என்ற இரட்டைகளைக் களைய விரும்புகிறது. சமுதாயத்தில் எழுந்துள்ள போட்டி மனப்பான்மை, ஏதோ ஒன்றை வெற்றி அல்லது முன்னேற்றம் என்று கருதிக்கொண்டு அதனை நோக்கிச் செல்லும் கண்மூடி ஓட்டம் என்பதையும் மறுக்கிறது. சித்தயோகம் இந்த உலக வாழ்க்கையில் ஆனந்தத்துடன் ஈடுபடச் செய்கிறது.

11) 7. உலகில் எல்லாப் பகுதியிலும் வாழும் எல்லா மக்களும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதுடன், போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றும் விரும்புவதே சித்தயோகத்தின் குறிக்கோள்.

(‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால் வேறு ஒன்று அறியேன் பராபரமே’ என்ற தாயுமானவ சித்தரின் வாக்கை இதனுடன் ஒப்பிட்டு நோக்குக)

24) 8. சித்தயோகம் என்பது இல்லறத்தைக் கண்டிப்பதில்லை. அளவோடு அனுபவிக்கப்படும் எந்த இன்பத்தையும் அது மறுப்பதில்லை. (மருவத்தூர்ப் பெருமாட்டி துறவை அதிகம் போற்றாமல் இல்லறத்தார்களையே ஏற்றுக்கொள்ளும் தத்துவம் நினைவு கூர்வதற்குரியது)

36)9. எந்த ஒரு மதத்தையும் எள்ளி நகையாடாதே! காரணம் எல்லாச் சமயங்களும் சமமானவை. எந்த ஒருவனையும் வெறுக்காதே. காரணம் இறைவன் அவனுள் இருக்கிறாள். எந்த நிறம் உடையவனையும் புறக்கணிக்காதே. காரணம் பரம்பொருள் எல்லா திறத்திலும் உறைகின்றது. சித்தர்களின் ஞான உபதேசம் இது.

(மருவத்தூர்ப் பெருமாட்டி இஸ்லாமியர், கிறிஸ்துவர், சைனர் முதலிய பிற சமயங்களைச் சேர்ந்தவர்களையும் அன்புடன் ஏற்றுக்கொள்கிறாள். அதே நேரத்தில் அவர்கள் சமய ஒழுக்கங்களை விட்டுவிட வேண்டாம் என்றும் வற்புறுத்துகிறாள். ‘‘கடவுள் இல்லை என்று சொல்பவன் கூடத் தாயை இல்லை என்று கூறமாட்டான். ஆகவே தாயாகிய நான் நல்லவன், தீயவன் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பல முறை அன்னை கூறியுள்ளாள்.)

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 12-13

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here