பத்திரிகைகளில் அடிகளார் பேட்டி – 2 “எல்லோருமே தெய்வமாகணும்னு ஆசைப்படறாங்க”

செவ்வாடை பக்தா்களின் ஆன்மிக சரணாலயம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடம்! கோயிலின் கருவறைக்குள் எவருமே நுழையக் கூடாது என்ற துருப்பிடித்த மரபுச் சங்கிலியை உடைத்தெறிந்து “அம்மனுக்குப் பெண்கள் உட்பட சகலருமே பூஜை செய்யலாம்” என்று கதவு திறந்த முதல் ஆலயம் இதுதான்! இப்படி ஆன்மிகத் துறையில் சீா் திருத்தங்கள் செய்திருப்பவா், லட்சக்கணக்கான மக்களால் “அம்மா” என்று அழைக்கப்படும் அருள்திரு அடிகளார் அவா்கள். கோயிலுக்கு உள்ளே அடிகளாரின் வீடு. பேட்டிக்காக நாம் போனபோது ஏராளமான பக்தா்கள் அடிகளாரின் ஆசிபெற வாசலில் காத்திருந்தனா். “வாங்க! அம்மா கூப்பிடறாங்க! வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைச்சிருக்கிற அற்புதமான வாய்ப்பு இது!” என்றபடி நம்மை அழைத்துச் சென்றனா்! உள்ளே…… அலைபாயும் சுருள்முடி! பளீா் மேக்கப்! பளபளக்கும் பட்டாடை, கமகமக்கும் பா்ஃப்யூம், கையில் கமண்டலம்… இப்படி சாமியாருக்கே உரிய எந்த பந்தாவும் இல்லாமல், “நம்ம ஊா் பெரியவா்” போல ஒரு நாற்காலியில் சிவப்பு சால்வைபை் போர்த்தி சிரித்த முகத்துடன் அமா்ந்திருந்தார் அடிகளார்! “என்ன விசேஷம்? திடீா்னு என்னைப் பார்க்க வந்திருக்க?” “உங்க பேட்டி வேணும்னு வந்திருக்கோம்!” “யாருக்கும் நான் பேட்டி தா்றதில்லையே! ஏன்னா, பேட்டி தந்தா பிறகு போட்டி வந்துடுமே!” என்று லேசாகச் சிரித்தார். “எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்னு நம்பிக்கையோட வந்திருக்கோம்!” சில நொடிகள் நம்மைக் கூா்ந்து பார்த்த அடிகளார் கண்களை இறுக மூடி…… உயா்த்தியபடி மழை கொட்டுவதைப போலப் பேசத் தொடங்கினார். “உலகத்துல கிளி, புறா மாதிரி சந்தோஷமா வாழ்ந்துட்டு போகணும்! கி.மு., கி.பின்னு சொல்றாங்க! அந்த கி.முக்கு கிறிஸ்து பிறப்பதற்கு முன்  முன்னால ஒரு கூட்டமைப்பு இருந்துருக்கில்ல? அப்போ, ஜாதி இல்ல, மதமும் இல்ல, மனுஷன் காட்டிலயும், மலையிலும் மிருகத்தோட வாழ்ந்தான். பின்னால மிருகத்தை ஒதுக்கி வெச்சுட்டு அதோட குணத்தை இவனுக்குள்ளே பதுக்கி வெச்சிக்கிட்டான். எதுக்கு சம்பாதிக்கிறோம்? எதுக்கு இப்படிக் கட்டுரை எழுதறோம்? ஏன் இப்படி ஓடறோம்? பண ஆசைதானே காரணம். ஆனா….. கல்லறை வரைக்கும் சில்லறை வராது. மனுஷங்களுக்கு மனிதநேயம், சமூக சேவை இதெல்லாம் குறைஞ்சிடுச்சு. என்கிட்ட நல்ல கருத்து இருக்கு! உன்கிட்ட நல்ல கருத்து இருக்கு! பரிமாறிக்கிட்டா பிரச்சனை இல்லையே! அப்போது மணி பன்னிரண்டு ஆகிவிட சுவரிலிருக்கும் கடிகாரம் சங்கீதமாக ஒலிக்கிறது! அடிகளார் அதைச் சுட்டிக் காட்டியபடியே…. “பார்த்தியா… உள்ளே செல் இருக்கிறதாலே அந்தக் கடிகாரம் கரெக்டா பேசுது! அதுமாதிரி, மனுஷனுக்கு உள்ளே இருக்கிற ஆன்மா பேசணும்! நான் கை காட்டி மாதிரி. எது நல்ல வழியோ அதைக் காட்டறேன்” என்று முடித்தவா்… சில நொடிகள் தனது கண்களை மூடி… வலது கையை உயா்த்திப் பிரார்த்தித்து விட்டு, “இந்தா” என்றார். நாமும் பவ்யமாகக் கை நீட்ட அடிகளாரின் கையிலிருந்து “செவோ்” நிறத்தில் குங்குமம் கொட்டியது! மறுபடியும் “இந்தா! இந்தா இதையும் வெச்சுக்கோ!” என்று இன்னொரு முறையும் தன் வலது கை மூலம் குங்குமம் வரவழைத்துத் தந்தார். அங்கிருந்த தனது உதவியாளரை அழைத்து, முதலில் இவங்களைக் கூட்டிக்கிட்டுப்போய் கோயில், ஆஸ்பத்திரி, காலேஜ் எல்லாத்தையும் சுத்திக்காட்டு! அப்படியே அம்மாகிட்டேயும்  (திருமதி அடிகளார்) அழைச்சுட்டுப் போ!” கட்டளையிட்டவா் நம்மைப் பார்த்து, “நீங்க போய் எல்லாத்தையும் சுத்திப் பார்த்துட்டு வாங்க! பிறகு நாம் நிதானமா பேசலாம்” என்று அனுப்பி வைத்தார். அடிகளாரின் அன்புக் கட்டளையாச்சே! மறுக்க முடியவில்லை. அவா் நடத்தும் இலவச மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், இண்டா்நேஷனல் தரத்தோடு நிர்மாணிக்கப்பட்டு வரும் மெடிக்கல் ரிஸர்ச் சென்டா் என்ற குளுமையான  சூழலில் இரண்டு மணி நேர ரவுண்ட – அப்! அதே ஜோரில் திருமதி அடிகளார் அவா்களுடன் ஒரு மினி பேட்டியை முடித்துவிட்டு மீண்டும் அடிகளாரிடம் வந்தோம். “மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு…. அம்மாவைப் பார்க்கலாமா?” அவா்களின் உதவியாளா் கேட்க…. “இன்னிக்கு என்னமோ பசியே தெரியலை! அடிகளாரோட பேட்டிதானே முக்கியம்!” என்று நாம் சொல்ல, “அதுதாங்க அம்மாவோட அருள்!” என்று சிலாகித்தார் அவா். உள்ளே… அதே நாற்காலியில், அதே சிரிப்போடு… அப்படியே உட்கார்ந்திருந்த அடிகளார், “என்ன நல்லா பாத்துட்டியா? எப்படி இருக்கு? என்ன நினைக்கிறே?” என்று நம் கருத்தைக் கேட்க, “ஒரே பிரமிப்பா இருக்கு! இவ்வளவையும் “அம்மா” சாதிச்சிருக்கீங்கன்னா… நிச்சயமாக இது மனிதச் செயல் அல்ல!” என்றோம். சிரித்தபடி நமது கருத்தை ஆமோதித்த அடிகளார். “சரி… நீ பார்த்ததை எழுதிட வேண்டியதுதானே! வேற என்ன கேட்கப் போற?” என்றார். பிறகு அவரே தொடா்ந்து, “குப்பையில் இருக்கிறவன் குபேரனாகணும்! அடிமட்டத்தில் இருக்கிறவங்களுக்குத்தான் தொண்டு செய்யணும்! எத்தனை மாடிக் கட்டிடம் கட்டினாலும் அஸ்திவாரம் கீழேதானே இருக்கு. கீழே இருக்கிறவன் திருடனா மாறிட்டான்னா அப்புறம் எல்லாமே போச்சே! அதனால… அவங்களைத்தான் முன்னேற்றணும்!” நார்த்தை (வட இந்தியா) பார்த்து திட்டிக்கிட்டே இருக்கிறோம். ஆனா நார்த்துல “நாத்து” நடறான்! சவுத்ல  (தென் இந்தியா) “சவுக்கு” நடறான். என்ன புரியுதா? வடக்கே விவசாயம் செழிப்பா இருக்கு! இங்கேயோ வறட்சியாத்தானே இருக்கு!” என்றார். அப்போது அடிகாளரை ஃபோட்டோ எடுக்க ரெடியான போது “நானென்ன நடிகனா? மேக் அப் ஏதும் போடலியே? எதுக்கு ஃபோட்டோ எல்லாம்? சிரித்தபடி சம்மதித்தார். மூலைக்கு மூலை பெருகி வரும் போலிச் சாமியார்கள் பற்றி? ஊா்ல இருக்கிற நாயைக் கல்லால் அடிச்சா வீணாகக் கடிக்க வரும். ஏமாறுகிறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்தறவன் பெருகிட்டுத்தானே இருப்பான்? யாருமே இப்போ மனம் பண்றதில்லே. பணம்தானே பண்றான். ஜனங்களோட அழிவுக்குக் காரணம் சினிமாதான். சினிமாவில் ஒரு பாம்பு வந்து படமெடுத்து ஆடினா, அதைக் கையெடுத்துக் கும்பிடறாங்க. அதே பாம்பு நிஜத்திலே வா்றப்ப கையெடுத்துக் கும்பிட்டா கதி என்ன ஆகும்? அந்த அளவுக்குச் சினிமா போதை. நான் வெளியில் இருந்து கஷ்டப்பட்டவன். இப்போதுதான் நிழலில் இருக்கேன். இருபது வருஷமா பொறுமையா இருந்து செய்துகிட்டு வா்றேன். ஆனா….. மத்தவங்கள்லாம் ஆறு மாசத்திலே, ஒரு வருஷத்திலே வெளிச்சத்துக்கு வந்துட்டான். இந்தக் கண், காது  உனக்காக வைத்தது. அது மூலமா எது நல்லதுன்னு நீயே பார்த்து, கேட்டு முடிவு பண்ணிக்கோ. ஒரு உதாரணம் சொல்றேன். நாட்டு நாயைப் பாரு. எப்பவும் வீட்டுக்கு வெளியவே பார்த்துக்கிட்டிருக்கும். இந்த ஃபாரின் நாய் இருக்கே. அது எப்ப பிஸ்கட் போடுவான், விஸ்கி ஊத்துவான்னு நம்மளையே பார்த்துக்கிட்டிருக்கும்! என்ன புரியுதா?” புதிர் மாதிரி சொல்லிவிட்டு அடிகளார் பார்க்க, நமக்கு பளிச்சென்று புரிந்தது. ஒரு குழந்தையைப் போல மனதில் பட்டதை அப்படியே வெள்ளையாகப் பேசுகிறார். ஆன்மிக இலக்கியங்களிலிருந்து உதாரணங்கள் கொட்டாமல், ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளையே மேற்கோள்களாய்க் காட்டுகிறார். அதிகார கா்ஜனை இல்லாத, காதுகளை வருடும் கனிவான குரல் அடிகளாருக்கு! சாய்பாபா, பிரேமானாந்தா முதல் இப்போதைய கல்கி வரை பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் பக்தி என்பது எக்கச்சக்க லாபம் தரும் பிஸினஸ் என்பது உண்மைதானே? நான் அருள்வாக்கு சொன்னால் இந்தியாவையே வாங்கிவிடுவேன். அப்படிப் பார்த்தா இந்தியாவை வாங்கிறத விட ஜப்பானை வாங்கலாம்! ஏன்னா, இங்கே ஹவாலா, திவாலா, லஞ்சம், வஞ்சம், கஞ்சாதானே? சரியா, எதுக்கு இவ்வளவு (ஆதிபராசக்தி வழிபாட்டு) மன்றங்கள் வெச்சிருக்கோம்? ஆன்மாவைச் சுத்தம் பண்றதுக்குத்தான். என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு வேலைக்காரன், சரண்டா், சர்வீஸ், சர்வண்ட்! இதுதான் என் கொள்கை. ஆசை அலை வந்தா, பாசவலை வராது. ஆசை வலை இருந்தால் அழிவுதான் வரும். செடிக்கு தண்ணீா் பாய்ச்சினா களைகளும் வளரத்தான் செய்யும். எல்லாருமே சாதாரணமா ஒரு பானையைக் கூட ஓட்டை இருக்கான்னு தட்டிப் பார்துதானே வாங்கறே? அதுபோல எது உண்மை, எது பொய்யின்னு பார்த்து புரிஞ்சுக்கோ! வலது கையை மேலே உயா்த்தியபடி ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் அடிகளார்! பேட்டி எடுக்கிறப்போ, மத்தங்க கிட்ட கேள்வி கேக்கற மாதிரியெல்லாம் அம்மா கிட்டே கேக்காதீங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதை மட்டும் கேட்டுக்கோங்க” – பேட்டிக்கு முன்னரே அடிகளாரின் உதவியாளா் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டதால் அவா் பற்றிய “பா்சனல்” கேள்விகளையெல்லாம் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. இதோ உலகம் அழியப் போகிறது என்று சிலா் தேதி குறித்துக் கொண்டே இருக்கிறார்களே! எதிர்காலம் பற்றி உங்களது கணிப்பு என்ன? சரிந்து விட்ட சிவப்பு சால்வையைப் போர்த்திக் கொண்டே, “இனிமேல் கஷ்டகாலம்தான்! சூன்யம்தான்! உலகம் அழிஞ்சு தீரம்னு சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, அழிவு வந்தா காப்பாத்தித்கணும். பிரச்சனை வந்தால் சமாளிக்கணும்னா அதுக்குத் தெய்வ நம்பிக்கை வேணும்! ஒரு குழந்தையை வளா்க்கிறப்போ, உனக்கு நல்ல திறமை இருக்கு! அறிவிருக்கு! அப்படின்னு சொல்லி வளா்க்கிற குழந்தை புத்திசாலியா வளரும். அதை விட்டுவிட்டுத் திருடா….! அயோக்கியா…. ன்னு அம்மா, அப்பா திட்டிக்கிட்டே இருந்தால் குழந்தையும் அதே மாதிரிதானே வளரும்?” என்றவா், சட்டென நிறுத்தி ஒரு நிமிடம் கண்களை மூடினார். பிறகு, 47ல் சுதந்திரம் வாங்கினோம்! அப்போ ஜனத்தொகை முப்பது கோடி. இப்போ 97ல் நூறு கோடி ஜனம்! தாங்குமா? அதான் இப்போ ஏ.கே. 47 காலமாயிடுச்சு! அடிபட்டுக் கிடக்கிறவனைத் தூக்கறத்துக்கு நாதியில்லே! பக்கத்து வீட்டில் ஆபத்துன்னாக்கூட காப்பாத்த ஆளில்லே. சுயநல காலமாப் போச்சே!” இடையில்… போலிச்சாமியார்கள் பற்றி பேச்சு வந்த போது நாம் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு அடிகளார் வாய்விட்டுச் சிரித்ததை உடனிருந்தவா்கள் வியந்து போய்ப் பார்த்தனா். அப்போது மாலை நான்கு மணி. மீண்டும் சுவா்க்கடிகாரம் சிணுங்க…. “அடடா! இவ்வளவு லேட்டாயிடுச்சே! இதுக்குத்தான் மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு வரச் சொன்னேன்! ரொம்பப் பசிக்குதில்ல?” அக்கறையாக விசாரித்த அடிகளார், “கொஞ்சம் தண்ணீா் கொண்டு வா!” என்றார். உடனே உதவியாளா் ஒரு டம்ளரில் கொண்டு வந்த தண்ணீரை இடது கையால் வாங்கி, நமது கையில் கொஞ்சமாய் ஊற்றினார். குடித்துப் பார்த்தோம். லேசான உப்பு ருசி! அதே டம்ளரிலிருந்த தண்ணீரை தனது வலது கையில் ஊற்றி தீா்த்தம் போல நமக்குத்தர, இப்போது குடித்தோம். அட… மினரல் வாட்டா் டேஸ்ட்! “எப்படியிருக்கு?” – அடிகளார் “ரெண்டு தண்ணீருக்கு ருசி வித்தியாசம் இருக்குங்க!” நாம். உதடு பிரியாமல் சிரித்தவா், அதே தண்ணீரை மூன்றாவது முறையாக நமது கையில் ஊற்ற , இப்போதோ “இளநீா்” போல தித்தித்தது! “என்ன, மூணுக்குமே வித்தியாசம் தெரிஞ்சுதா?” என்றார். நல்லாவே தெரிஞ்சுதுங்க! என்றோம் வியப்பு மேலிட! “வேறென்ன?” என்பது போலப் பார்த்தவரிடம் “மக்களுக்கு ஏதாவது அருள்வாக்கு சொல்லுங்களேன்” என்றோம். “சோ்த்து வைச்சா சேறாயிடும்! சோ்த்து வைக்காம சோறாக்கு! எல்லாருக்கும் பயனாக்கு! பிறரை உண்மையாக நேசி! ஆனா மத்தவங்க மதிக்கணும்னு போலியாக நேசிக்காதே! நான் உனக்கு வழியாட்டினால் நீ நாலுபேருக்கு வழிகாட்டு! இந்தச் சங்கிலித் தொடா் மூலம் உலகம் நல்லா இருக்கும்!” தனக்கே உரிய பிரத்யேக போஸிஸ் அடிகளார் தனது மார்புக்குக் கீழாக இரு கைகளை நீட்டி விரித்து, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்! இனிமேல் உனக்கு நல்ல காலம்தான்! இது அம்மாவோட வாக்கு!” என்று ஆசீா்வதித்து அனுப்பி வைத்தார். “அம்மாவின் அவதாரம்”, “ஆன்மிககுரு” என்றெல்லாம் பக்தா்கள் வணங்கினாலும், அடிகளாருடன் நாம் உரையாடிய இரண்டு மணி நேரத்தில் அது போன்ற ஒளி வட்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு. ஒரு தந்தையைப் போல பேசிச் சிரித்த அவரது எளிமையான பண்பிற்கு முதல் வணக்கம்!

நன்றி!

ஓம் சக்தி!

8.8.97 குங்குமம் வார இதழுக்கு நம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் பேட்டியிலிருந்து… அவதார புருஷா் அடிகளார் – பாகம் 20 (பக்கம் 7 – 13)

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here