வயிற்று நோய்கள்
 
ஜீரண சக்திக்கு
இஞ்சி, கொத்துமல்லி, புதினாச்சாறு பிழிந்து குடித்து வந்தால் ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
 
வயிற்று உபாதைகளுக்கு
கொழுந்து வேப்பிலை, கொழுந்து துளசி, மிளகு, பூண்டு இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுத் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.
 
குடல் புண்
ஆட்டுப்பால் 200 மில்லியுடன் ஒற்றைப்படையில் வேப்பிலையைச் சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும்.
 
வயிற்று வலி, வயிற்று எரிச்சல்
வெறும் வயிற்றில் , வேப்பிலை, துளசி, வில்பம் இம் மூன்று இலைகளையும் பறித்து எல்லாவற்றிலும் சிறிது எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
 
தினமும் இரவு படுக்கும் முன் வெள்ளாட்டுப்பாலைக் காய்ச்சி ஆடையை நீக்கி அதனுடன் சிறிது மிளகுத் தூளைச் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.
 
வயிறு சுத்தமாக
வாரம் ஒரு முறை ஓர் ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு சின்ன வெங்காயம், ஒரு பூண்டு ஆகியவற்றை மென்று சாப்பிட வேண்டும்.
 
பசி நன்றாக எடுக்க
ஒரு வேப்பிலை, ஒரு துளசி, ஒரு கரு வேப்பிலை, ஒரு கொத்துமல்லித் தழை, சிறிது புதினா, ஒரு பூண்டு, ஒரு மிளகு ஆகியவற்றை அரைத்துச் சாப்பிடவேண்டும்.
 
வயிற்றுப் போக்கு
சாதிக்காயைக் காயவைத்துத் தூளாக்கி வாழைப் பழத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்று விடும். சாதாரண வயிற்றுப் போக்கிற்கு சிறிதளவு தேனை உட்கொள்வது நல்லது.
 
குழந்தைகளுக்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து
வேக வைத்த புழுங்கல் அரிசிச்சோறு அல்லது பச்சரிசிச் சோற்றுடன் வெண்ணெய், பருப்புக் கலந்து கொடுப்பது குழந்தைகளுகு ஊட்டச்சத்தாக அமையும்.
 
வயிற்றில் தலைமுடி சென்று விட்டால்
குழந்தைகளின் வயிற்றில் தலைமுடி சென்று விட்டால் வெண்ணெயைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தலைமுடி வெளியேறும்.
 
சளித்தொல்லைகளுக்கு
துளசி வேப்பிலை ஒன்று முதல் மூன்று வரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
 
ஆஸ்த்துமா, சளி தொல்லைகள் ஆஸ்த்துமா 
நாட்டுக் கோழி முட்டையை உடைத்து அதில் சிறிது மிளகுத்தூளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
எந்தவித சோப்பும் போட்டுக் குளிக்கக்கூடாது.
 
சீயக்காய், எலுமிச்சம்பழத்தோல், பச்சைப்பயிறு, கஸ்தூரி, மஞ்சள் சேர்த்து அரைத்து, அதைக் குளிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
அல்லது 
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் பொடி செய்து காலையும், இரவும் உண்விற்குப் பின் சிறிது சாப்பிட வேண்டும். ஆட்டுப்பாலை சுண்டக்காய்ச்சிக் குடித்து வர வேண்டும். உப்பு, உவர்ப்பு, காரம் மூன்றையும் சாப்பாட்டில் குறைத்துக் கொள்ள வேண்டும்.புதினா, துவையல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். சோளக்களி சாப்பிட வேண்டும்.
 
அல்லது
மஞ்சள் கரிசலாங்கண்ணி, வேப்பிலை, துளசி புதினா, ஒரு மிளகு, ஒரு பூண்டு, சிறிது மஞ்சள் தூள், சித்தரத்தை சிறிய துண்டு ஆகியவற்றை அரைத்துத் தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
ஆட்டுப்பாலும், அத்திப்பழமும் சாப்பிட்டால் ஆஸ்துமா குணம் அடையும். சுக்கு, மிளகு திப்பிலி, புதினா, துளசிச் சாறு, இஞ்சிச்சாறு இவற்றை தயாரித்து அதில் சிறிது மஞ்சள் தூளைப் போட்டுக் குடித்து வர வேண்டும்
 
தீராத தலைவலிக்கு
தினமும் காலையில் சிறிது சுக்கு, மிளகு திப்பிலியை தூள் செய்து பசும்பால் அல்லது ஆட்டுப்பாலுடன் கலந்து சாப்பிடவும்.
பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை வேப்பெண்ணையை தலையில் சேர்த்து சீயக்காய்த்தூள் உபயோகித்து குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி புகை போட்டு தலையைக் காய வைக்க வேண்டும்.பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கழுத்திற்கு வேப்பெண்ணையைத் தடவி தவிடு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
 
அல்லது
காலையில் துளசி இலை ஜந்து, வேப்பிலைக் கொழுந்து ஜந்து, மிளகு ஒன்று இவற்றைச் சேர்த்து சாப்பிடவும்.
வெந்நீர் ஒரு டம்ளர் காய வைத்து, அது ஆறிய பின் ஒரு எலுமிச்சம்பழச்சாறு, ஒரு ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றிக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 
ஆட்டுப்பால், அவல், கொடிவேர்க்கடலை மூன்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.
கழுத்தின் பின்பகுதி மற்றும் உடல் முழுக்க வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், ஒரு நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றைக் கலந்து தேய்த்து வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும். அதன்பின் எலுமிச்சம்பழத்துடன் பாசிப்பருப்புப் பொடியைச் சேர்த்து தேய்த்துக் குளிக்க வேண்டும்.
 
நன்றி
(அன்னை ஆதிபராசக்தி அருளிய அற்புத மருந்துகள்)
 
]]>

1 COMMENT

  1. பயனுள்ள மருத்துவ குறிப்புகளைக் கொடுத்த அம்மாவின் திருவடி சரணடைகிறோம் ஓம் சக்தி ஓம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here