உணவில் சேர்க்க வேண்டியவை:

  • உணவில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கோவைக்காய்க்கு உணவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • பாகற்காய், சுண்டைக்காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கசப்புச் சுவை புற்று நோயைக் கூட குணப்படுத்தும்
  • புடலங்காய், பீட்ரூட், வெங்காயம், மிளகு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • நெல்லிக்கனி, அத்திப்பழ்ம், பேரிச்சம்பழம், பேரிக்காய் ஆகியவை உடலுக்கு நன்மை தருவன.
  • வாரத்திற்கு ஒரு நாள் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பூண்டு, கொடிவேர்க்கடலை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நல்லெண்ணையில் கொழுப்புச் சக்தி குறைவு, சமையலில் அதனைப் பயன்படுத்த வேண்டும்.
  • தண்ணீரைச் சுடவைத்து மூன்று முறை வடிகட்டி புதுப்பானையில் ஊற்றிக் குடிக்க வேண்டும்.
  • உப்பில்லாமல் கஞ்சியை வாரம் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.
  • பாகற்காய், கோவைக்காய், பூண்டு, மிளகு இவற்றை ஜீஸாகவோ அல்லது கசாயமாகவோ வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது.
  • துளசி, வேப்பிலை, எலுமிச்சம்பழம், பாகற்காய் இவற்றை எந்த அளவுக்குச் சேர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உடலுக்கு நல்லது.
  • கண்டங்கத்திரிக்காய், முருங்கைக்காய், முருங்கைக் கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சோளக்களி, வரகுச்சோறு, கேழ்வரகுக்களி இவற்றைச் சாப்பிட்டால் நோய்கள் வராது.
  • சர்க்கரையைத் தவிர்த்து அதற்குப் பதிலாகப் பனைவெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • புதினா, கொத்தமல்லி, வேப்பிலை, துளசி ஆகியவற்றைக் காயவைத்துக் கக்ஷாயம் வைத்துச் சாப்பிட வேண்டும்
  நன்றி, அன்னை ஆதிபராசக்தி அருளிய மருந்துகள்  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here