ஓம்சக்தி

கோரானா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் அருள் திரு அம்மா அவர்கள் அருளிய மருந்தின் செய்முறை விளக்கம்:

தேவையானப் பொருட்கள்:
1. சுக்கு, மிளகு, திப்பிலி பொடி – 1/4 தேக்கரண்டி (இந்த பொடி சித்தர் பீடத்திலும் கிடைக்கிறது)
2. ஒரு கைப்பிடியளவு புதினா
3. ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லி
4. தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை
5. தண்ணீர்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும். கசாயம் பாதியாக சுண்டியவுடன் இறக்கி சிறிது ஆறியவுடன் இளஞ்சூடாக பருகவும்.