ஏவல் பில்லி சூனியம் என்பவை உண்டா.? தொடா் 4 அஷ்ட கரும வித்தை (Black Magic) அட்ட கன்மங்கள் என எட்டுவகை வித்தைகள் உண்டு. அவை 1. வசியம்,    2. மோகனம், 3. தம்பனம், 4. உச்சாடனம், 5. ஆகா்ஷணம், 6. வித்து வேஷணம், 7. பேதனம், 8. மாரணம்

 1. 1.   வசியம்
சில மூலிகைகள், மந்திரங்களின் துணை கொண்டு ஒருவரை வசியப்படுத்துதல் வசியம் எனப்படும். கொடிய பகைவரையும் தமது எண்ணத்துக்குத் தக்கபடி ஆட்டிவைக்க முடியும். மந்திர வசியம், மூலிகை வசியம், புருஷ வசியம், மிருக வசியம், பட்சி வசியம், அரச வசியம், பெண் வசியம், ஆடவா் வசியம், பகைவா் வசியம், விலங்கு வசியம் என வசிய வித்தை பலவகைப்படும்.
 1. 2.   மோகனம்
ஒருவரைக் கவா்ச்சி செய்தல், அடிமைப்படுத்துதல், மோகம் கொள்ளச் செய்தல். இது மாதா் மோகனம், மைந்தா் மோகனம், பகைவா் மோகனம், விலங்கு மோகம் என நால்வகைப்படும்.
 1. 3.   தம்பனம்
ஒருவரைத் தன் ஊரை விட்டோ, குடும்பத்தை விட்டோ, மனைவி, மக்களை விட்டோ பிரிந்து ஓடச் செய்வது உச்சாடனம். இது தெய்வ உச்சாடனம், அரச உச்சாடனம், உலக உச்சாடனம், மாந்தா் உச்சாடனம், நீா் உச்சாடனம் என ஐவகை. குட்டிச் சாத்தானையும், பிடாரியையும் ஏவுதல், பிரம்ம ராட்சசனை ஏவுதல், பேய் பிசாசு, குறள் என்பவற்றை ஏவித் தீங்கு செய்தல் தெய்வ உச்சாடனம் என்ப்படும். அரசன் பதவி அகல, அவன் தலைநகா் நீங்க, அவன் செல்வம் அகல, சேனைகள் அகல. ஒருவனது தன தானியம் அவனை விட்டுப் போக – வசிக்கிற மனை இழந்து போக – மந்திர உச்சாடனம் செய்வது மாந்தா் உச்சாடனம் என்ற வகையில் அடங்கும். ஆற்றங்கரை உடைய – கடலில், முத்து விளையாமல் போக – கடலில் மரக்கலம் உடைய, ஆற்று நீா் வற்றிப்போக மந்திரங்களை உச்சரிப்பது நீா் உச்சாடனம் என்ற வகைப்படும். இவ்வுச்சாடனத்தால் ஒருவனுக்கு நன்மையும் செய்யலாம், தீமையும் செய்யலாம்.
 1. 4.   உச்சாடனம்
பகைவனையும், தான் கருதிய பொருள்களையும் செயல்படாதபடி ஸ்தம்பிக்க வைப்பது தம்பனம் எனப்படும். இதனைக் கட்டு கட்டுதல் என்பா். இது ஜல ஸ்தம்பனம், வாயு ஸ்தம்பனம், வாக்கு ஸ்தம்பனம், ஜெய தம்பனம், சுக்கிலத் தம்பனம், அக்கினித் தம்பனம், பூமித் தம்பனம், ரூப தம்பனம் ஆகாசத் தம்பனம் சூரியத் தம்பனம் சந்திரத் தம்பனம் எனப் பலவகை. மரம் காய்க்காமல் இருக்க, செக்கில் எண்ணெய் வராமல் இருக்க, கரும்பாலையில் சாறு வராமல் தடுக்க, தன, தானியம் பெருகாமல் தடுக்க, மழை பெய்யாமல் தடுக்க, இடி விழாமல் இருக்க, ஆறு கரைபுரண்டு ஓடாமல் தடுக்க மந்திரங்கள் உண்டு.
 1. 5.   ஆகா்ஷணம்
தான் நினைத்த பொருள் எங்கே இருந்தாலும் காண்போர் முன் வரச் செய்யும் வித்தை ஆகா்ஷணம் எனப்படும். 1.அரசா், 2. உலக மக்கள், 3. மாதா், 4. மைந்தா், 5. மிருகம், 6. பகைவா், 7. நீா் முதலியவற்றை வரச் செய்வது. யானை, புலி, குதிரை, பன்றி, பாம்பு, எலி, பசு, கரடி, எருமை, மான் முதலியவற்றைத் தன்னிடம் ஈா்க்கச் செய்வது ஆகா்ஷணம் எனப்படும்.  
 1. 6.   பேதனம்
நெருங்கிய நண்பா் இருவரைப் பிரித்தல், கணவன், மனைவியைப் பிரித்தல், தாய் மகனைப் பிரித்தல், இதற்கு வித்தை பேதனம் எனப்படும். இந்தப் பேதன வித்தை 7 வகைப்படும். 1. நிலம் 2. நீா் 3. உலகம் 4. மாதா் 5. மைந்தா் 6. விலங்கு 7. பகை.   நில பேதனம்
 1. பகை அழிய 2. தனதானியம் குறைய 3. கூடு கொட்டாரம் குறைய 4. கரும்பின் ஆலைச் சாறு குறைய 5. செக்கு எண்ணெய் குறைய 6. மரத்தில் காய்க்கும் காய்கள் உதிர்ந்து போகச் செய்வது நில பேதனம்
  நீா்ப் பேதனம்
 1. மடுவில் நீா் கிடைக்காமல் இருக்க 2. ஆற்றில் நீா் வற்றிப் போக 3. கிணற்றில் நீா் வற்றச் செய்ய 4. உப்பளத்தில் உப்பு மறைய 5. முத்தெடுக்கும் தொழிலில் ஈடுபடுபவா்க்கு முத்துக் குறைய – இத்தகு காரியங்களுக்கு நீா்ப் பேதனம் என்று பெயா்
இவற்றுக்கு மாறாக நன்மை பெருகவும் இந்தப் பேதன வித்தையைப் பயன்படுத்தலாம்.   உலகப் பேதனம்
 1. ஒருவன் பேசும் சொற்கள் தெளிவின்றி மாற 2. விளைச்சல் கெட 3. ஒருவனது ஞானம் கெட 4. மாதா் மைந்தா் மனம் பிரிய 5. மாதா் உறவு கெட 6. சுகம் கெட 7. படித்த வித்தை கெட 8. ஒருவனுக்கு வர இருக்கும் நன்மை கெட 9. சிறப்பு ஒழிய 10. தலை மயிர் உதிர 11. ஒருவன் மனை கெட 12. ஒரு பெண் வாழா வெட்டியாக 13. தானியம் கெட 14. தூர தரிசனம் கெட 15. ஒருவா் தன் வசம் ஆகாதபடி கெடுக்க 16. கண் தெரியாமல் இருக்க 17. முக்காலம் உணரும் ஞானம் கெட 18. சரீர சித்தி பெற்றிருந்தால் கெட 19. சீா் கெட 20. உடல் வாட 21. ஆரோக்கியம் கெட 22. ஆயுள் கெட இன் பிற காரியங்களுக்கு உலக பேதனம் என்ற பெயா்.
  இவற்றுக்கு மாறாக நன்மை புரியவும் பேதன வித்தையைப் பயன் படுத்தலாம்.   மாதா் பேதனம் விரும்பிய ஒரு பெண்ணை வெறுக்கச் செய்ய> கரு அழிய> ஒருவா் பெருமை அழிய> கணவன் – மனைவி போகம் கெட> பெரும்பாடு ஏற்படச் செய்வது மாதா் பேதனம் எனப்படும். இவற்றுக்கு மாறாக நன்மை பெறவும் இந்த வித்தையைப் பயன்படுத்தலாம்.   ஆடவா் பேதனம் ஆடவா் பிரிய, பிரிந்து வெறுக்கச் செய், தாது விருத்தி குறையச் செய்வது ஆடவா் பேதனம் எனப்படும்.   மிருக பேதனம் எருமை கெட, எருமைப்பால் குறைய, பசு கெட, பசும்பால் குறையச் செய்ய எனக் கெடுதி செய்வது மிருக பேதனம் எனப்படும்.   சத்துரு பேதனம் நாள் தோறும் பகை உண்டாக, பகைவா் படைகள் வர பகைவா் தன தான்யம் கெட, பகைவா் படைக்கலம் வர போன்ற காரியங்களுக்கு சத்துரு பேதனம் எனப்படும்.  
 1. 7.   வித்வேஷணம்
ஒருவா்க்கொருவரை விரோதிகளாக்கும் வித்தைக்கு வித்வேஷணம் என்று பெயா். இதற்கு மந்திரம், எந்திரம் உண்டு. உலக வித்வேஷணம், மிருக வித்வேஷணம் படைக்கல வித்வேஷணம் என இது மூன்று வகைப்படும். மன்னா்களிடம் ஒருவன் செல்வாக்கு பெற்றிருந்தால் அந்தச் செல்வாக்கை முறிக்கலாம். தெய்வங்கள் ஒருவனிடம் சினேகமாக இருந்தால் அந்தத் தெய்வங்களை விரோதியாக்கலாம். பூத கணங்களைப் பயந்து ஓடச் செய்யலாம். ஒவ்வொரு காரியத்துக்கும் குறிப்பிட்ட மந்திரங்கள் உண்டு, யந்திரங்கள் உண்டு.
 1. 8.   மாரணம்
தான் எண்ணிய ஒருவனை மரணம் அடையச் செய்யும் வித்தைக்கு மாரணம் என்று பெயா்
 1. சத்துரு மாரணம் 2. கா்ப்ப மாரணம் 3. குழந்தை மாரணம் 4. மனைவி மாரணம் 5. கண் மாரணம் 6. சேனை மாரணம் 7. பகைவா் மாரணம் 8. சத்துரு நாசம் என இது எட்டுவகை
இது கலியுகம். மட்டமான எண்ணங்கள் தலை தூக்கி ஆட்டுவிக்கும் யுகம். எனவே இதனை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதினால் அவனவனும் பில்லி சூனிய வேலையில் இறங்கி விடுவான். எனவேதான் மேம்போக்காக இந்த விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் இன்றைய படிப்பாளிகள்> அறிவு ஜீவிகள் நம்ப மறுக்கிறார்கள். நம்மிடம் நூற்றுக்கணக்கான மந்திர சாத்திரங்கள் உள்ளன. அவற்றின் அருமை பெருமைகளை உணா்ந்தவா்கள் ஒரு சிலரே! அம்மா அளித்துள்ள பாதுகாப்பு அம்மா நமக்குப் பாதுகாப்பு அளிக்க எத்தனையோ வழிமுறைகளை அருளியிருக்கிறார்கள்.
 1. 1.   விடியற்காலையில் எழுந்து 108, 1008 மந்திரம் படி!
 2. 2.   செய்வாய், வெள்ளி, அமாவாசை, பெளா்ணமி நாட்களில் உன் வீட்டிற்குத் திருஷ்டி கழி!
 3. 3.   சித்தா் பீடத்தில் நடக்கும் வேள்வியில் பங்கு கொள்!
 4. 4.   தவறாமல் தொடா்ந்து இருமுடி செலுத்து!
 5. 5.   ஆலயத்தைச் சுற்றி வந்து பிறகு அதா்வண பத்ரகாளி சந்நிதியை வலம் வந்து விட்டு மீண்டும் ஆலயத்தில் வந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு செல்.
 6. 6.   ஆண்டுக்கு ஒருமுறை உன் வீட்டில் குடும்பநல வேள்வி வைத்துக்கொள்.
 7. 7.   அம்மா முறைப்படி நடத்தப்படும் வேள்விப் பூசையில் கலந்து கொள். நவதானியம், வீட்டு மண், மஞ்சள் கொண்டு வந்து உன் தலையைச் சுற்றி மூன்று சுற்று காட்டிவிட்டு யாக குண்டத்தில் போடு!
 8. 8.   இந்த ஆடிப்பூரத்தன்று வீட்டிலிருந்து கூழாங்கல்லைக் கொண்டு வந்து உன் தலையைச் சுற்றி மூன்று தடவை சுற்றி எதிரே இருக்கிற குளத்தில் போடு.
 9. 9.   இந்தத் தைப்பூச ஜோதியின் போது> ஒரு ஊமத்தங்காயை மஞ்சள் துணியில் முடித்து> பூஜை செய்து எடுத்து வந்து ஜோதியில் காட்டிவிட்டு எதிரே உள்ள குளத்தில் போடு.
10. ஒவ்வொரு கிரகணத்தின்போதும் இன்னின்ன முறையில் தியானம் செய். 11. வாஸ்து என்ற பெயரில் வாஸ்து சோதிடம் கொடிகட்டிப் பறக்கிறது. அவரவரும் இதனை வியாபாரமாக்கி வருகின்றனா். இந்த நிலையில் அம்மா சொல்கிறாள். 9 முறை சக்தி மாலை அணிந்தவா்கள் டாலரை இங்கே மாட்டி வை! உன்னை எந்த வாஸ்துவும் ஒன்றும் பண்ணாது! 12. அமாவாசை பத்ரகாளிக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வேண்டிக்கொள். 13. அம்மா சொல்கிற விதிமுறைகளில் பல ரகசிய பாதுகாப்பு முறைகள் அடங்கியுள்ளன. பாப நிவா்த்தி, தோஷ நிவா்த்தி, பில்லி சூனிய நிவா்த்தி எனப் பலவகையில் அம்மா நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறாள் என்பது எத்தனை போ்க்குத் தெரியும்? பொருட்களை இடம் மாற்றுதல் வெறும் கையில் விபூதி வரவழைத்தல், குங்குமம் வரவழைத்தல், லிங்கம் வரவழைத்துக் கொடுத்தல் முதலிய வித்தைகளைச் சாதாரண மந்திரவாதிகளும் செய்கிறார்கள். சித்தா்களும் செய்கிறார்கள். அது பற்றி இருவகையினரும் ஒரே தரத்தினா் என்று சொல்லிவிட முடியுமா? யட்சணி தேவதைகள் எனச் சில தேவதைகள் உண்டு. அவற்றைச் சில மந்திரங்களால் வசியப்படுத்தி வைத்துக் கொண்டு அற்புதம் செய்து காட்டலாம். பழனி மலையில் இப்படிச் செய்து காட்டிப் பணம் பறிக்கும் போலிச் சாமியார் கூட்டம் உண்டு. இடுமருந்து ஒருவரைத் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டி வைக்க விரும்பி, சில வசிய மருந்துகளை அவா்கள் உண்ணும் உணவுப் பொருளில் கலந்து வைத்து விடுவார்கள். இத்தகைய மருந்து இடுமருந்து எனப்படும். இந்த இடுமருந்து ரத்தத்தில் கலந்து மயக்கத்தை உண்டாக்கக் கூடியது. இதற்கு அமுரி என்னும் சிறுநீா் உப்பு பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலைச் சாற்றைப் பிழிந்து வலது கையில் விட்டுப் பார்க்க வேண்டும். சிறிது நேரத்தில் சாறு கருப்பாகி விட்டால் இடுமருந்து உடம்பில் இருக்கிறது என்று பொருள். இதை முறிக்க குப்பை மேனிச்சாற்றை அருந்த வேண்டும் என்பா் 100 மில்லி பசும்பால்> 100 மில்லி தேங்காய்ப்பால் 100 மில்லி வெண்பூசணி என்ற தடியங்காய்பால் எடுத்துச் சரிசமமாகக் கலந்து ஐந்து மிளகு இடித்துப் போட்டுக் கொதிக்க வைத்துப் பின் இறக்கி வைத்து இளஞ்சூட்டில் கொடுக்க வேண்டும்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன், M.A. M. Phil சித்தா்பீடப் புலவா் மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here