பத்திரிகை நிருபா் ஒருவா், ஒரு சமயம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்களைச் சந்திக்க மேல்மருவத்தூர் வந்திருந்தார். சந்திப்பதற்காக! தரிசனத்திற்காக அல்ல.

ஏதோ சில பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்கு வந்தவா் போல நம் குருநாதரைச் சில கேள்விகள் கேட்டார்.

“அது சரி! அம்மன் அருள்வந்து நீங்கள் வாக்குச் சொல்வதாக எல்லோரும் சொல்கிறார்களே? அந்த அருள் உங்களுக்கு எப்படி வருகிறது? எப்போது வருகிறது? என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

அவருடைய பரிபக்குவம் என்ன என்பதை உணா்ந்த நம் குருநாதா், “அந்த அருள் எப்போது வரும்? எப்படி வரும்? என்பதெல்லாம் சொல்வதற்கில்லை” என்று
மட்டுமே கூறினார்.

இறையருள் தொடா்பான சில விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்கக் கூடாது என்பது ஆன்மிகத் துறையில் விபரம் தெரிந்தவா்களுக்கு மட்டுமே புரியும்.

இறையருளால் எப்படி இன்னொரு மாம்பழம் வந்தது? அப்படியானால் இன்னொரு மாம்பழத்தை வரவழைத்துக் கொடு! பார்க்கலாம் என்று கணவன் கேட்டபோது, காரைக்காலம்மையார் தத்தளித்தாராம், ஏன்? திருவருள் செய்திகளை விளக்கமாகச் சொல்லி உணா்த்தக் கூடாது. அப்படிச் சொல்லவும் முடியாது.

அன்னை இங்கே அடிகளாரை வயப்படுத்திக் கொண்டு அருள்வாக்கு சொல்கிறாள்.

அடிகளார் நீராடிவிட்டுச் சித்தா்பீடத்தை வலம் வருவார். புற்று மண்டபத்தின் உள்ளே நிற்பார். வெளியிலிருந்து தொண்டா்கள் “மின்னும் புவிக்கெல்லாம்” என்ற வேண்டுதற்கூறு பாடல்களைப் பாடுவர். அடிகளார் திருமேனியில் அப்போது ஓா் அசைவு தெரியும். அடிகளாரின் குதிகால்கள் சற்று மேலெழும்பியவுடனே அருள்நிலை வந்து விட்டது என்பதற்கு அது அடையாளம்.

அதன்பின் தன் திருக்கரங்களைக் குறுக்காக வைத்துக்கொண்டு, வேப்பிலையோடு ஒயிலாக மெல்ல நடந்து வெளிப்படுவாள் அன்னை. இவையே நாம் இதுவரை கண்டது”

புற்று மண்டபத்தில் அடிகளார் நிற்கிற போது அம்மா எப்படி அந்தத் திருமேனியை ஆட்கொள்கிறாள் என்று நாமெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. சில சைகைகளைப் பார்த்து, அம்மா வந்து விட்டாள் என்ற அளவில்தான் நாம் புரிந்து கொள்கிறோம்.

அடிகளார் திருமேனியை எப்படி அம்மா ஆட்கொள்கிறாள் என்பதை அன்னை, கோவையைச் சோ்ந்த ஒரு சிறுவனுக்கு மட்டுமே உணா்த்தினாள்.

01.01.90 அன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். வழக்கமாக அன்று பெரும்பாலான பக்தா்கள் அன்னையைத் தரிசிக்க வந்து விடுவார்கள்.
நம் குருபிரானைத் தரிசித்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அன்று அம்மா ஆண்டு பலன்களைச் சொல்வாள். இதுதான் வழக்கம்.

01.01.90 ஆங்கிலப் புத்தாண்டு தினம். வழக்கப்படி அடிகளார் நீராடிவிட்டுக் கோயிலை வலம் வந்தார். புற்று மண்டபத்திலே நுழைந்தார். “மின்னும் புவிக்கெலாம்” என்று தொடங்கும் வேண்டுதற்கூறு பாடப்பட்டது. எல்லாமே வழக்கப்படி நடந்தன.

அன்று அடிகளார் திருமேனியில் அம்மா இறங்குவதை ஒரு சிறுவன் கண்களுக்கு மட்டுமே காட்டினாள். அவன் கோவையில் உள்ள டாக்டா் தம்பதியினரின் மகன். 14 வயது. 9 ஆம் வகுப்பு படிக்கிறவன். அவனுக்கு அன்னை காட்டிய அற்புதம் இது.

அடிகளார் புற்று மண்டபத்தில் நின்ற வேளையில் அவா் கழுத்துப் பகுதியில் மின்னல் போன்ற ஒரு ஒளிக்கீற்று! அந்த ஒளிக்கீற்று அப்படியே கீழே இறங்கியதாம். பளிச்! பளிச்! என்ற மத்தாப்பு சிதறுவது போலப் பாதங்களை நோக்கிச் சென்றதாம். முழங்கால் வரை பரவி அப்படியே மறைந்து போனதாம்.

நூற்றுக்கணக்கான போ் புற்று மண்டபத்தின் எதிரே நின்றபடி இருந்தனா். ஆயிரக்கணக்கானோர் வெளியில் நின்றபடியும், அமா்ந்தபடியும் இருந்தனா்.

அன்னை தான் சோதியாக அடிகளார் திருமேனியில் இறங்குவதை அன்று அந்தச் சிறுவனுக்கு மட்டுமே உணா்த்தினாள்.

நன்றி!

ஓம் சக்தி!

வேம்பு

அவதார புருஷா் அடிகளார் பாகம் 12, பக்கம் (12 -13)

4 COMMENTS

  1. அம்மா தாயே எங்களையும் ஆட்கொண்டு அருள்வாய்

  2. ராஜேஸ்வரி அன்புசெழியன் அக்கா ,அம்மா அருளால் நலமுடனும் ,மன மகிழ்வுடனும் ,நீண்ட ஆயுளுடனும் இருக்க அருள் செய் ஆதிபராசக்தி!!!!

  3. நான் ஒரு அம்பாள் பக்தை . ஆரம்பத்தில் நான் அம்மாவை வணங்கவில்லை . காலப்போக்கில்  அம்மா வேறு அம்பாள் வேறு அல்ல என்பதை நன்றாக  உணர்ந்தேன் . எனது வாழ்வில் அம்மா செய்த அற்புதங்களை சக்தி ஒளி யில் எழுதவேண்டும் என்பதே என் பிரார்த்தனை .
    என் மகள் 2009 ல் உருவானபோது என் தங்கையும் அம்மாவும் மேல்மருவதுரில் தொட்டில் கட்டி வேண்டியிருந்தார்கள். அவள் பிறந்த ஒரு மாதத்தில் அவளது மல வாயில் காயமாக இருந்தது. டாக்டர்களிடம் போயும் ஒரு பலனும் இல்லை. நாம் இருவரும் டாக்டர் ஆக இருந்தும்  எந்த சுகமும் கிட்டவில்லை. ஏதேதோ கிரிம்களும் மருந்துகளும் பலனளிகவில்லை. 
    ஒருநாள் இரவு அம்மாவை நினைத்து அம்பாளின் முக்கூட்டு எண்ணை யை  தடவி அம்பாளிடம் வேண்டினேன். யாரும் நம்ப மாட்டீர்கள்!! மறுநாளே காயம் கொஞ்சம் ஆறி இருந்தது . படிப்படியாக ஒரு கிழமையில் மாறியே போனது.
    கிறிஸ்துவரான என் கணவர் அரைமனதோடு ஏற்றும் கொண்டார். 
    அது மட்டும் அல்ல. என் கஷ்டங்களில் எல்லாம் அம்மா அருகில் இருப்பதாக பாவனை செய்துகொள்வேன். அம்மா அருகிலிருந்து வழிநடத்துவதாகவே எண்ணிகொள்வேன் . இம்முறை சென்றமாதம் ஒரு பரிட்சைக்கு தோற்றிஇருந்தேன். எழுதும்போதே அம்மா அருகிலிருந்தார். நூறு பேரில் அறுபது பேரே தேறினர் . அறத்து பேரில் ஒருவராய்  என்னையும் தேறுவித்த அம்மாவுக்கு கோடி நன்றிகள்.!!

    இன்றும் என்றும் என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தும் அன்னை பராசக்திக்கு ஸ்தோத்திரம் . 

    ஒம் சக்தி! 

    சக்தி பொன்மகிழ் . 
    இலங்கை 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here