1987 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இறுதியில் சென்னை மாவட்டப் பிரச்சாரக் குழுவினரும், சென்னை மாவட்டச் செவ்வாடைத் தொண்டா்களும் மேல்மருவத்தூர்க்குப் பாதயாத்திரை புறப்படுவதாகத் திட்டமிட்டிருந்தனா். என் கணவரும் இந்தப் பாத யாத்திரையில் கலந்து கொள்ளத் தீா்மானித்திருந்தார். பாத யாத்திரையில் பங்கேற்பது இதுவே முதல் தடவை.

பாத யாத்திரைக்கு முதல் நாள் திடீரென்று அவருக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அம்மா படத்தின் முன்னிருந்த வேப்பிலையும், திருநீறும் கொஞ்சம் எடுத்து உட்கொண்டு, அம்மாவையும் வேண்டிக் கொண்டார். அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி மருந்தும் உட்கொண்டார். அப்படியும் காய்ச்சல் குறைந்தபாடில்லை.

மறுநாள் பாத யாத்திரை கோஷ்டி புறப்பாடு. அம்மாவின் மேல் பாரத்தைப் போட்டு விட்டுப் பாத யாத்திரை கிளம்புவது என்று தீா்மானம் செய்து கொண்டு விடியற்காலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டுச் சுமார் 5 மணி அளவில் புறப்பட்டு விட்டார்.

அவரைப் பாத யாத்திரைக்கு அனுப்பிவிட்டு வந்த அந்த முதல் நாள் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னதான் அம்மா ஆயிரம் அற்புதம் புரிந்தாலும், பேதை மனம் சமாதானம் ஆகவில்லை. நடுவில் அவா்க்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டால்
மற்ற தொண்டா்கட்கும் நம்மால் தொந்தரவு! இடையில் எங்கேனும் தங்கும்படி நோ்ந்து விட்டால் எங்கே தங்குவார்? யார் அவரைக் கவனித்துக் கொள்ளப் போகிறார்கள்……?

கவலை மனத்தை அரித்தபடி இருந்தது. வீட்டினுள் அம்மா படத்தின் முன்பு அமா்ந்தபடி, “அம்மா! உன்னுடைய தொண்டா் உன் ஆலயம் நோக்கிக் காய்ச்சலுடன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டுப் பாத யாத்திரையாக வருகிறார். நீ தான் உற்ற துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, தாகத்திற்குச் சிறிது தண்ணீா் அருந்திவிட்டு வாயிற்கதவைத் திறந்து வெளியில் வந்தேன். இரவு நேரம்! அங்கே நான் கண்ட சாட்சி….?

அங்கே…….

கலியுக அவதாரம் அன்னையின் மறு வடிவம்! ஆச்சார்ய பீட நாயகா்! ஆன்மிககுரு! நம் இதய தெய்வம் அடிகளார் வெளியிலே உட்கார்ந்த கோலத்தில் இருக்கிறார்.

இது என்ன…? கனவா….? நனவா….? கையும் ஓடாமல் காலும் ஓடாமல் செயலிழந்து நின்றபடி இருக்கிறேன்.

என்னை நோக்கி, “ஏம்மா கவலையா இருக்கிறே? தூக்கம் வரவில்லையா? எதற்குக் கவலைப்படறே? நான்தான் அவனோடு கூடவே இருக்கிறேனே….? அவனுக்கு எந்த விதமான இடைஞ்சல்களும் இல்லாமல் அழைத்துக்கொண்டு செல்கிறேன். நீ எதுக்கும் கவலைப்படாதே! நீ எதுக்கும் கவலைப்படாதே! நிம்மதியாகத் தூங்கு!” என்று சொல்லியதும், மறு வார்த்தை என்ன சொல்வது என்று புரியாமல் நின்றேன்.

இப்போதுதான் அம்மா படத்தின் முன் வேண்டினோம். அதற்குள் இங்கேயே “அம்மா” வந்து விட்டாளே என்ன ஆச்சரியம்! அதிசயம் மனத்தில் தாண்டவம் ஆடியது!

சிறிது நேரம் ஆனதும், அடிகளார் சொன்னார்கள்.

“நான் இரவு பூராகவும் காவலுக்கு இங்கேயே இருக்கிறேன். நீ போய் நிம்மதியாகத் தூங்கு” என்று கூறியருளினார்கள்.

இந்த வாக்கைக் கேட்டதும் என் உடம்பில் ஒருவித உணா்வு ஏற்பட்டது. அம்மாவை வணங்கி விட்டுத் தூங்கச் சென்றேன். அயா்ந்து தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை கண் விழித்து எழுந்து வெளியே வந்து பார்க்கிறேன். அங்கே அம்மா இல்லை!

தாயே! இந்தப் பேதை மனத்திற்கு ஆறுதலளிக்க வேண்டிக் காட்சி கொடுத்துக் காவலும் புரிய வந்த உன் கருணையே கருணை!

இந்தக் கருணைக்குக் கைம்மாறாக உனக்குக் கொடுக்க எங்களிடம் என்ன இருக்கிறது? என்றெண்ணிக் கண்ணீா் விட்டு அழுதேன். என்னால் அழத்தான் முடிந்தது. வேறு என்ன செய்ய…..?

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. தனலட்சுமி

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, பக்கம் (62 – 64)

4 COMMENTS

  1. நான் தொடர்ந்து 30 நாட்களாக பேய் தொல்லையால் மிகவும் அவதி படுகிறேன் இரவில் தூக்கம் இல்லை , நிம்மதியாக இருக்க முடியவில்லை, கேட்ட கனுவுகள் , தனிமையை இருக்கும் பொது உடன் யாரோ இருபது போல உணர்வு , நான் என்ன செய்வேன், உங்களால் முடிந்த வரை அடிஎன்காக ஒரு முறை பிராத்தனை செய்தல் அனா பேய் தொல்லையில் இருந்த அம்மா என்னை காபற்றுவள் என்ற நம்பிக்கை எனக்கு பலமாக இருக்கிறது, எனவே அம்மாவிடம் ஒரு முறை மட்டும் எனக்க பிராத்தனை செய்யும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

    என் பெயர் : ரா. முத்து ராஜ்
    ராசி ” கன்னி ,
    நட்சத்திரம் : உத்திரம் ,
    விலாசம் : 11a காமராஜர் தெரு, கீழ புலியூர், தென்காசி , திருநெல்வேலி 627814

    • ஒம் சக்தி
      அம்மா எப்பவும் உங்களுடன் இருப்பாள். அருகில் உள்ள மன்றத்தை அனுகவும்!
      நன்றி
      ஓம்சக்தி

      • நன்றி ஆனால் என் குடும்பத்தில் எல்லோருமே வருடம் ஒரு முறை மாலை அணிந்து மருவத்தூர் அம்மாவை காண வருவார்கள் , என் தாத்தா அம்மாவுக்கு கோவில் கட்டி மன்றம் வைத்து நடத்தி வருகிறார்கள் , என் தாத்தா தலைமையில் வருடம் 300 சக்திகளை அழைத்து வருகிறார்கள்

  2. இந்த கலியுகத்தில் அம்மாவை தவிர வேறு யாரு இர்ருக்கா
    நம்மை போன்ற தொண்டர்களுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here