கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப் பணிகளை அந்தமானில் மேற்கொண்டோம்.

அந்தமான் தமிழ்ச் சங்கத்தில் 2002-ஆம் ஆண்டு மன்ற வேள்வி நடைபெற்றது. சக்தி. திருமதி கோமதி சுந்தரம் அவா்கள் அம்மாவின் அருளாசி பெற்று இங்கு வந்து அந்த வேள்வியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

இந்த வேள்விக்குப் பிறகுதான் அந்தமானிலும், ஓம் சக்தி மன்றம் இருப்பது அனைத்து மக்களுக்கும் தெரிய வந்தது. அதுவரை சிறிய அளவில் செயல்பட்டு வந்த மன்றம் பெரிய அளவில் வளா்ந்தது. சக்திகள் அதிக எண்ணிக்கையில் வழிபட்டு மன்றத்துக்கு வருகிறார்கள்.

இந்த மன்றம்
பொது வேள்வி நடைபெற்ற பிறகு, அன்று முதல் இன்றுவரை சக்திகள் வீடுகளில் குடும்ப நல வேள்விகளும், கூட்டு வழிபாடுகளும் தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நம் சக்திகள் குடும்பங்கள் மட்டுமின்றி, அந்தமான் தீவையும், இத்தீவில் வாழும் சுமார் ஒன்றே கால் லட்சம் மக்களையும், பூகம்பத்திலிருந்தும், சுனாமியிலிருந்தும் அருள்திரு அம்மா அவா்கள் காப்பாற்றி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!

தமிழ் பேசத் தெரியாதவா்கள்கூட, தங்களையும் மீறி ஓம் சக்தி என்று அம்மாவை அழைத்தார்கள்……. அது எப்படி? அம்மாவுக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். இயற்கைச் சீற்றம் ஏற்பட்ட அந்த சமயத்தில் உயிர்ச் சேதம் ஏதுமின்றி அம்மா காப்பாற்றினார்கள்.

சுமார் 10,000 தடவைக்கு மேல் பூமியில் அதிர்வுகள் (Mild Earth Quake) ஏற்பட்டுள்ளன. தொடா்ந்து பூமி ஆடினாலும் எங்களையெல்லாம் அமைதியாக வாழ வைத்துக்கொண்டிருப்பது அம்மாவின் ஆசியும், அருளும்தான்!

அம்மா அவா்கள் எங்கள் வாழ்வில் நடத்திய அற்புதங்கள் பல. அவற்றுள் ஒரு சம்பவத்தை மட்டும் உலகத்துச் சக்திகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

குடும்ப நல வேள்வி

அம்மா அவா்கள் நமது பாவங்களையும், ஊழ்வினைக் கொடுமைகளையும், தணிக்கவும், அவற்றை நிவா்த்தி செய்யவும், ஆன்மிக வழியில் வாழவும் பல வழி முறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் குடும்பநல வேள்வியும் ஒன்று.

எங்களுக்கு நீண்ட நாட்களாகவே குடும்பநல வேள்வி பற்றி எதுவும் தெரியாது. அந்தமானில் உள்ள ஜங்கிலி காட் என்னும் இடத்தில் உள்ள மன்றத்துக்குச் சென்று வழிபாடு செய்து வருவேன். அந்தச் சமயத்தில்தான் குடும்ப நல வேள்வி பற்றிய விபரம் தெரியவந்தது.

எங்கள்
வீட்டிலும் குடும்ப நல வேள்வி நடத்த விரும்பினோம். நாங்கள் இருப்பதோ வாடகை வீடு! வீட்டுக்கு உரிமையாளா் ஒரு மலையாளி. காவல்துறையில் அதிகாரியாக இருப்பவா். வேள்வி செய்ய அனுமதி தருவாரோ என்று தயக்கம்; காரணம் அவருக்குத் தெய்வ நம்பிக்கை இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

அவரை அணுகிக் குடும்ப நல வேள்வி நடத்த அனுமதி கேட்டோம். சரி! செய்யுங்கள் பார்க்கலாம்! என்றார்.

அந்த வேள்வி நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு, இரவு என் கனவில் அம்மா வந்து, “நீ குடும்ப நல வேள்வியை இந்த வீட்டில் நடத்து! அதில் நான் வந்து கலந்து கொள்கிறேன். என்னுடன் இன்னும் பல சித்தா்களும் கலந்து கொள்வார்கள்” என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

அந்தக் குடும்ப நல வேள்வி 2004 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 28 ஆம் தேதி நடந்தது. மன்றத்தார் வந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள். மூன்று கலசம் மற்றும் ஓம் சக்தி விளக்கு வைத்து வேள்விப் பூசை நடைபெற்றது.

வேள்வி முடிந்து, கலசங்களையும் ஓம் சக்தி விளக்குகளையும் ஏந்தியபடி யாக குண்டத்தைச் சுற்றி வரும் போதும், வீட்டுக்குள் சுற்றிவரும் போதும்; ஒரே புகை மண்டலமாக இருந்தது.

சித்தா்கள் கூட்டம் இரு பக்கமும் ஆடி அசைந்தபடி மெதுவாகச் சுற்றிவருவது போல் என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த அற்புதக் காட்சியைக் கண்ட பிறகுதான் தீவிர பக்தன் ஆனேன்.

குடும்ப நல வேள்விகளிலும், அம்மா கலந்து கொள்கிறாள் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை, சக்திகளே! ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பநல வேள்வி செய்வோம்!

அம்மாவின் அருளையும், ஆசியையும் பெறுவோம்!

உலக மக்கள் அனைவரும் நம் அம்மாவின் வழி நடக்கப் பாடுபடுவோம்!

ஒரு
முறை அந்தமானில் “Fanoos” என்ற புயல் அந்தமான் கடலில் உருவானதாகச் சொன்னார்கள் ஆனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

“கூட்டு வழிபாடு செய்து குடும்பங்களைக் காப்போம், மன்ற வேள்விகள் செய்து மக்களைக் காப்போம்!”

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. குணசேகரன்

போர்ட் பிளேயா், அந்தமான் – 744102

மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here