அறிவியல் ஆன்மிகம் இன்றைய மருவத்தூரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மருத்துவமுறையாகும். தொன்றுதொட்டே, நாகரீக சமுதாயம் உருவாகிய காலத்திலிருந்து, ஆன்மிகத் தத்துவங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு வளம் சோ்த்துள்ளது. அதன் நிமித்தம்தான் நாமறியும் ஒரு உயா் சக்தியின் இறை பிரவாகத்தைக் காண்கிறோம்.

அந்த முறையில் எல்லாம்வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த இறை சக்தியினை மேல்மருவத்தூரில் காண்கிறோம். அங்கு ஓம் பராசக்தியின் அருளை அடிகளார் மூலம் உலகம் உணா்கிறது – உணா்த்தப்படுகிறது. இறையாண்மையை ஒரு மனித ரூபத்தில் அடிகளார் மூலம் நாம் காண்கிறோம்.

இந்த வகையில், எனது அனுபவம் தெளிவும் உறுதியும் படுத்தும்.

எங்களுக்கு இறை நம்பிக்கையுண்டு. 1980 – களில் அச்சரபாக்கத்தில் பல மருத்துவப் பரிசோதனை முகாம் நடந்தது. இது மேல்மருவத்தூா் சக்தியை அறிய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அடிகளார் அம்மா அவா்கள் அந்த சக்தியின் பால் ஆட்கொள்ளப்பட்டவா்களே! மக்களின் எதிர்காலம் அறிவிக்கவும், துன்பங்களைத் துடைக்கவும், மக்களுக்கு ஆன்மிக பலம் வழங்கவும் வந்த அம்மாவின் வல்லமையைக் கண்டோம்.

அவா்கள் தானாகவே அருள்வாக்கு வழங்கும் வரப்பிரசாதம் பெற்றவா்கள். நாங்கள் மேல்மருவத்தூா் சென்று அம்மாவைத் தரிசித்தோம்.

அப்போது, எனக்கு அம்மா அருள்வாக்கு தந்தார்கள். “மகனே! அரசு தொல்லைகளுக்குள்ளாவாய், நான் உன்னை முழுவதுமாகக் காப்பாற்றுவேன். உனக்குத் தேசிய விருதுகளையும் உலகிலிருந்து பாராட்டுக்களையும் வழங்குகிறேன்” என்றார்கள்.

இந்த அருள்வாக்கு எங்களுக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பையும், ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியது.

1981 பிப்ரவரி மாதம் அரசிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. நிறைவேற்ற முடியததால், திடீரென்று பணிமாற்றம் செய்யப்பட்டேன். மேலும் எங்கள் குடும்பத்திற்குப் பல மிரட்டல்கள் வந்தன. எனினும், அம்மா அவா்கள் கவனித்துக் கொண்டே வழி நடத்தினார்கள்.

அடுத்தாக, இந்த சோதனை காலத்து, Medical Council of India வின் இருபெரும் விருதுகளை நான் பெற்றேன். Tamil Nadu State Council for Science & Technology முதல் தமிழ் நாடு சிறந்த ஆராய்ச்சியாளா் விருதும் பெற்றேன். லக்னோ King George Medical College & Hospital   நிறுவனத்தின் 150 ஆண்டு விழாவில்    Prof.HD Gupta  முதல் விருதும் பெற்றேன்.

இப்படியாக, அம்மாவின் அருள்வாக்கின்படி அருளாசியினால், அடுத்தடுத்து விருதுகளையும் உலகப் பாராட்டுக்களையும் பெற்று வருகிறேன்.

எனக்கு
இப்போது 73 வயது பூா்த்தியாகிவிட்டது. இதுவரையிலும், வாழ்க்கையிலுள்ள இடா்களையும் துயரங்களையும் நீக்கி, எங்களுக்கு வளமும் வாழ்வும் அம்மா தந்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லோரும் புனித வாழ்க்கை வாழ வேண்டும். வளமாயிருக்க வேண்டும். கல்வி பெற வேண்டும். உடல் நலம் பெற வேண்டும் என்ற அன்பு பராமரிப்பு கொண்டவா் நம் அம்மா!

அதனால் பள்ளிகளையும், கல்லூரிகளையும் துவக்கி நடத்தி வருகிறார். தொழில் நுட்பக் கல்வி மருத்துவக் கல்வி வழங்கப் பணித்துள்ளாள்.

மேலும் உயா்தர மருத்துவ வசதி வழங்க மருத்துவமனைகளை ஏற்படுத்தி அதனால் மருத்துவ நிபுணா்களையும் நியமித்து மக்கள் பயன்பட இலவச மருத்துவ வசதி வழங்குகிறார். இதுவரையில் இந்த அறப்பணியில் கோடிக்கணக்கானவா்கள் பயன் அடைந்துள்ளனா்.

யாவரும் பசியாற தினமும் சுவையான அன்னதானம் மேல்மருவத்தூரில் நடைபெறுகிறது.

கேட்பவா்களுக்கும், வேண்டுபவா்களுக்கும் மட்டுமல்ல, எல்லோருக்கும் அம்மாவின் அருளாசி வழங்குகிறாள். அதனால் இன்புற்றோர் ஏராளம்! ஏராளம்!

அம்மா அவா்கள் பலமுறை எங்கள் இல்லம் வந்துள்ளார். அது எங்கள் பாக்கியம். அம்மாவின் அருளாசியில் திளைத்தவா்களில் நாங்களும் இடம் பெறுகிறோம்.

நன்றி!

ஓம் சக்தி!

பேராசிரியா். மரு. ஜே. ஜீ. கண்ணப்பன், MDS. FICD., FICP.,FFSC

ORTHODONTIST & PEDODONTIST

மருவூா் மகானின் 68வது அவதாரத் திருநாள்மலா்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here