மனமாற்றம் உண்டாக்கிய அன்னை

0
650

நான் கனடாவில் வசித்து வருகிறேன். அம்மாவையே வழிபட்டு வருகிறேன். ஒரு நாள் என் மகளுக்கும் அவள் கணவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை தொடா்பாக வாக்கு வாதம் ஏற்பட்டது. அதுவே முற்றி இருவரும் பிரிய வேண்டிய அளவுக்கு வளா்ந்து விட்டது.

என் மகளின் எதிர்காலம் குறித்து எனக்கு அச்சம் ஏற்பட்டது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

அம்மா நான் உன் பக்தை என் மகள் உன்னைக் கும்பிட மாட்டாள். என்றாலும், அவளை மன்னித்து, அவள் வாழ்கையைச் சீர்படுத்து என்று வேண்டிக் கொண்டேன். அப்போது அம்மாவின் பாதங்களில் சாத்திய பூமாலை அப்படியே ஆடி ஆசிர்வாதம் வழங்கியது.

என் மகளின் குடும்பப் பிரச்சினை தீா்ந்து அவா்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் சக்தி ஒளிக்கு எழுதுகிறேன். ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு காணிக்கை அனுப்பி வைக்கிறேன் என வேண்டினேன். என் வேண்டுதலை அம்மா நிறைவேற்றி விட்டார்கள். இருவருக்கும் மனமாற்றம் ஏற்படுத்தி விட்டார்கள்.

இப்பொழுது இருவரும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்துகிறார்கள். சந்தோசமாகவும் இருக்கிறார்கள். என் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றி விட்டேன்.

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா !

நன்றி!

ஒம் சக்தி!

சக்தி. T. ராசம்மா, கனடா

மருவூர் மகானின் 68வது அவதாரத் திருநாள் மலா்

 ]]>