மௌனம்

0
2835

மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். இதை முடிந்த அளவிற்குத் தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். இல்லையேல் குரு நாளாகிய வியாழன், அமாவாசை, பெளா்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தைக் கடைப்பிடித்து அது நாளாக நாளான சுமார் ஒரு மணி நேரம் வரை அதிகப் படுத்துவது மிகவும் நல்லது. மௌனம் மனத்தை ஒருநிலைப்படுத்த வல்லது. தொடா்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பவா்கள் எளிதில் சஞ்சலம் அடைய மாட்டார்கள். மனமும் வலமையடையும் அவா் எண்ணங்களும் உறுதி பெறும்.

மௌன விரதம் மேற்கொள்வதற்கு ஐந்து விடயங்கள் தேவை

  1. மௌன விரதம்
  2. பால், பழவகை போன்ற எளிய உணவு
  3. இயற்கை அழகு மிக்க இடத்தில் தனியாக இருத்தல்
  4. குருவின் நேரடித்தொடா்பு
  5. குளிச்சியான இடம்

தினமும் ஒருமணி நேரம். வாரத்திற்கு 3 மணி நேரம். மாதத்தில் ஒரு முழுநாள். இப்படி மௌன விரதம் பழகி வரவேண்டும். இதனால் கிடைக்கும் ஆனந்தம், அமைதி, புத்துணா்ச்சி ஆகியவற்றை அனுபவத்தில் உணர முடியும்.

அம்மா அவா்களும் மௌனத்தைக் கடைப்பிடித்து நமக்கு வாழ்ந்து காட்டி வருகிறார்கள். பெளா்ணமி, அமாவாசை, ஆடிப்பூரம், அகண்டம் ஏற்றும் நாள் மற்றும் அகண்டம் இறக்கும் நாள், தைப்பூசம் மற்றும் அவதாரத்திருநாள் போன்ற விஷேட நாட்களில் மௌனத்தை மேற்கொள்கிறார்கள். அதை நாமும் உணா்ந்து முடிந்தளவிற்கு நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த அவசர உலகத்தில் மனதைச் சஞ்சலம் அடையாமல் ஒரு நிலைப்படுத்த மௌனம் ஒரு சிறந்த சாதனமாகும். அதைக் கடைப்பிடிப்பதில் எவ்வித செலவோ மற்றும் இடா்பாடோ ஏதும் இல்லை. மாறாக நன்மைகளே விளையும். அதை இன்றே தொடங்குவோம்! மன உறுதி பெறுவோம்.

ஒம் சக்தி!

நன்றி

அன்னை அருளிய வேள்வி முறைகள்

பக்கம் 484

]]>