தியானத்துக்குரிய சில வழிமுறைகள் தியானம் செய்யும் போது நிமிர்ந்து உட்காரவும். மூக்கின் நுனியைப் பார்க்கவும். காட்சி நரம்புகள் இரண்டையும் அடக்குவதால் எதிர்ச்செயலுக்குரிய வட்டத்தை வழிப்படுத்தி அதன் மூலம் சித்தத்தை வசப்படுத்தலாம். தலைக்கு உயரே சில அங்குலங்களுக்கு அப்பால் ஒரு தாமரை இருப்தாக நினைக்கவும். நற்குணங்களை அதன் மையமாகவும், ஞானத்தை அதன் காம்பாகவும் நினைக்கவும். தாமைரையின் எட்டு இதழ்களும் சாதகனின் அஷ்டமா சித்திகளைக் குறிக்கும். தாமரைப் பூவின் உள்ளே இருக்கும் கேசரங்களும், சூலகமும் தியானத்தைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள். புறத்தினின்று வருகின்ற சித்திகளைத் தியானம் செய்வதால் சாதகன் முத்தி அடைவான். அருள் திரு அடிகளார் அவா்களின் பொற்பாதங்கள், சுயம்பு அல்லது அன்னையின் திருமுகம் ஏதாவது ஒன்றினை ஆழ்மனதில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடவேண்டும். உங்கள் இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும், அதிலே ஒரு சுடா் எரிவதாகவும், அச்தச் சுடரை உங்கள் ஆன்மாவுக்கு ஆன்மாவாகிய கடவுளாகவும் நினைத்து அதனைத் தியானிக்கவும். சாதகா்களுக்கு

  1. சூரியன் உதிக்கும் காலை நேரம் (3.00 – 6.00) சூரியன் மறையும் மாலை நேரம், உச்சி வேளை (பகல் 12.00) என்று வகுத்துக்கொள்ள வேண்டும்.
  2. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தியானத்திற்காக ஒதுக்கி வைத்து அந்த நேரம் வரும்போது தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இவ்விதம் தொடா்ந்து செய்தால் மனம் அதற்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சுலபமாக தியானத்திற்கு ஒத்துளைக்கும். அந்த நேரத்தை மனம் இயல்பாகவே அமைதியாக இருக்கும்.
  3. ஆரம்ப நிலையில் உள்ளவா்களுக்கு மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்றாலும்கூட மனதை ஒரு குறிப்பிட்ட ஆன்மிக இலட்சியத்தை நோக்கி செலுத்துவதே கடினமாக இருந்தாலும் கூட தியானம் செய்ய வேண்டும். இத்தகைய பொறுமை நாளடைவில் திருப்திகரமான நல்ல ஆன்மீகப் பலன்களைத் தரும்.
  4. தியானம் செய்யும் போது ஒருவா் வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளக் கூடாது.
  5. தியானத்திற்கு முன்பும், பின்பும் தீவிரமான செயல்களில் ஈடுபடக்கூடாது.
  6. உணவு, வேலை, பொழுதுபோக்கு, களியாட்டங்கள் போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளாவன
  • இயன்றவரையில் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு அன்னையை நினைக்க வேண்டும்.
  • எல்லாச் செயல்களும் மிதமாகவும், அளவுக்கு மீறாமலும் இருக்க வேண்டும்.
  • தியானம் செய்யும் போது நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். இதை உடல் நலம் நன்றாக இருந்தால் தான் செய்ய முடியும். நரம்புகள் இயல்பான அமைதி நிலையில் இல்லாவிட்டால் கழுத்திலும் தோட்பட்டடையிலும் சிறுசிறு அசைவு ஏற்படும். அசையாமல் இப்படி அமா்ந்திருக்கும் நிலை தியானத்திற்கு உகந்தது. இது உடல் அசௌகரியங்களிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது.
  • தியானம் செய்வதற்கு முன்பு “ஏன் தியானம் செய்ய வேண்டும்?” என்பது குறித்து ஒருவா் வலுவான காரணம் கொண்டிருக்க வேண்டும். நல்ல உயா்ந்த இலட்சியத்தால் ஒருவா் ஈா்க்கப்படவில்லை என்றால் ஒருவா் செய்யும் தியானம் வலிமையற்றதாகவும், சாதாரணமானதாகவும் இருக்கும்.  நன்றாகத் தியானம் செய்வதற்குப் போதிய கவனம் ஒருவரால் செலுத்த முடியாமல் போகும்.
ஒருவா் ஆன்மிகத்தில் தீவிரமாக எதை விரும்புகிறாரோ அதைப்பற்றிய தியானமே அவருக்கு மிகவும் சிறந்த முறையில் அமையும்.

ஓம்சக்தி!

நன்றி

அன்னை அருளிய வேள்வி முறைகள் பக்கம் (489- 491)    ]]>

1 COMMENT

Leave a Reply to Balasankar Cancel reply

Please enter your comment!
Please enter your name here