மருவத்தூா் சித்தா்பீடத்தின் தனித்தன்மைகள் – சிறப்பியல்புகள்

0
1821

 • பரம்பொருளுக்குப் பரத்துவம் – சௌலப்பியம் என்ற இரண்டு நிலைகள் உண்டு. தன் சௌலப்பியத்தை (எளிவந்து இரங்கி அருள்பாலித்தல்) பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தி வெளிப்படுத்த வேண்டி ஆன்மாக்களோடு உறவாட வேண்டித் தெய்வமே  வந்து பேசுகின்ற தலம் இது.
 • அன்னை ஆதிபராசக்தி அடிகளார் என்கிற மானுட வடிவந்தாங்கி, அவதாரநோக்கம் கொண்டு இறங்கி வந்து ஆன்மிகமும் பக்தியும் வளா்க்கிற இடம் இது.
 • இந்தத் தலத்தில் 21 சித்தா்களின் ஜீவ சமாதி உண்டு.
 • சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இங்கே வரலாம். கருவறைக்குள் சென்று பக்தியோடு அன்னைக்கு அா்ச்சனை செய்யலாம்.
 • பெண்களை வைத்து வேள்வி செய்யும் அற்புதமும், பெண்களே விழாப் பொறுப்பு எடுத்து நடத்தும் அற்புதமும் இங்கே தான் உண்டு. பெண்கள் கருவறைக்குள் சென்று அா்ச்சனை செய்யும் பேறும் இங்கே உண்டு.
 • பரம்பொருளான அன்னை, இங்கே வருபவா்களின் பாவங்களையெல்லாம் தான் ஈா்த்துக்கொண்டு, இந்த மண்ணுக்குத் தன் அருள் சக்தியைப் பாய்ச்ச வேண்டி, அருள்திரு அடிகளாரை வயப்படுத்திக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு நாள் ஆடிப்பூரத்தையொட்டி தானே அங்கப்பிரதட்சணம் செய்யும் தலம் இது!
 • நவராத்திரி முதல் நாளன்று அன்னையே அகண்ட விளக்கு ஏற்றி வைக்கிற அற்புதத் தலம் இது!
 • இந்த மண்ணில் அங்கப்பிரதட்சணம் வருவது புல்லரிக்கச் செய்யும் அனுபவம். அந்த அற்புதம் இங்கே உண்டு.
 • இங்கே ஆடிப்பூரத்தன்று அங்கப்பிரதட்சணம் செய்வதாலும், நவராத்திரி அகண்ட விளக்கைத் தரிசிப்பதாலும் ஊழ்வினைக் கொடுமைகள் தணியும்.
 • ஆடிப்பூரத்தன்று பொதுமக்கள் எல்லோரும் கருவறையிலுள்ள சுயம்புவிற்குச்  சாதி, சமய வேறுபாடு இன்றிப் பாலபிஷேகம் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் பாலாபிஷேகம் மகிமை வாய்ந்தது.
 • அவரவா் மத சம்பிரதாயப்படி அன்னை ஆதிபராசக்தியை வணங்கி வழிபட உரிமை அளிக்கும் ஆலயம் இது!
 • ஆகம் விதிகள், ஆகம நெறிகட்கு அப்பாற்பட்ட ஆலயம் இது! அன்னை இங்கே என்ன சொல்கிறாளோ அதுதான் இங்கே வேதம்! அதுதான் இங்கே ஆகமம்! தெய்வீக நிர்வாகம் நடக்கும் அற்புதம் இங்கே நடைபெறுகிறது.
 • தமிழ் மந்திரங்களால் கருவறையில் அர்ச்சனைகளும், வேள்வி, கலச, விளக்குப் பூசைகளும் நடைபெறும் திருக்கோயில் இது.
 • பில்லி, சூனியங்களை அழிக்கின்ற அதா்வண பத்ரகாளி (அல்லது) பிரத்தியங்கரா தேவியின் சன்னதி இத்தலத்தில் மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை.
 • கொள்கை அளவில் இருக்கின்ற சமய நெறிகளை நடைமுறையில் கொண்டு வந்து செயல்முறைச் சமயமாக ஆக்கும் புனித பூமி இது.
 • ஆலயத்தில் நடைபெறும் எந்த விழாவானாலும் ஏழை, எளிய மக்களின் வயிறும், மனமும் குளிர வேண்டி அன்னதானமும், ஆடைதானமும் அளிக்கப்படுகின்றன.
 • நாடுதோறும் ஆன்மிக மாநாடுகளை நடத்தி, உலகநலம் கருதியும், ஒவ்வொருவா் மனக்குறையை நீக்க வேண்டியும் கலச விளக்கு வேள்வி செய்து ஆன்மிகம் வளா்க்கும் ஆலயம் இது.
 • ஆன்மிக மாநாடுகள் வாயிலாக இருப்பவனிடம் இருந்து வாங்கி, இல்லாதவனுக்குக் கொடுக்கும் திருப்பணி இந்த ஆலயத்தின் மூலம் நடத்தப்படுகிறது. அன்னதானம், ஆடைதானம், விதவையா்க்குத் தையல் எந்திரங்கள் வழங்குதல், ஊனமுற்றோர்க்கு உதவும் கருவிகள், பசுமாடுகள் வழங்குதல், உழவு மாடுகள் வழங்குதல், உழைத்துப் பிழைக்க எண்ணும் ஏழைத் தொழிலாளா்களுக்கு உதவுகின்ற கருவிகளை வாங்கித் தருதல் போன்ற அறப்பணிகள் இந்த ஆலயத்தின் மூலமாகச் செய்யப்படுகின்றன.
 • நாடெங்கும் ஆதிபராசக்தி சித்தா் வழிபாட்டு மன்றங்களை அமைத்து, ஆன்மிகமும் பக்தியும் வளா்கின்ற ஆலயம் இது.
 • இவற்றுக்கெல்லாம் அடிப்படை அன்னையின் அருள்வாக்குதான். அருள்வாக்குத் தான் மூலதனம். அடிகளார் தான் மூலாதாரம்.
 • 21.  இந்த மண்ணில் 108 முறை தியானம் செய்தவா்களையும், உரிய நியமத்துடன் விரதம் இருந்து ஒன்பது இருமுடி செலுத்தியவா்களையும் ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது.
 • மேல்மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்

  பக்கம் 256

   

  ]]>