எண்ண அலைகள் என்று சொல்லும் போது நம்முடைய சிந்தனைகள் பேச்சுக்கள் எல்லாவற்றையுமே ஆதிபராசக்தி கேட்டுக்கொண்டு, உணா்ந்து கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அம்மாவின் எண்ண அலைகள் எப்படி நம் சிந்தனையாகவும், கனவாகவும் உருப்பெறுகிறதோ அதுபோன்றே நம் எண்ண அலைகளும் அம்மாவை வந்து அடைகின்றன. அதனால் அம்மா நம் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்.

ஒரு முறை மருவத்தூருக்கு நான் அலுவலக விஷயமாகப் போய் இருந்தபோது அம்மாவின் தரிசனத்துக்கு முன்பு வெளியில் சித்தா்பீடம் சம்பந்தப்பட்ட சில பொறுப்பாளா்களிடம் அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அப்போது சித்தா்பீடத்தைச் சோ்ந்த ஒருவா் “இவா்கள் நமக்குத் தூண் மாதிரி உதவிகள் புரிந்து வருகிறார்கள்” என்று என்னைப் பற்றி அறிமுகமாகச் சொன்னார்கள்.

பின்பு ஒரு மணி நேரம் கழித்து நானும் மற்றும் பல அலுவலக அதிகாரிகளும் அம்மாவின் அருட் கூடத்தில் நுழைகிறோம். அம்மா அவா்களிடம் என்னைச் சுட்டிக் காட்டி “இவங்க ஒரு தூண் மாதிரி” என்கிறார்கள். அதே வார்த்தை சற்று முன்பு யாருடைய வாயாலே ஒலித்த அதே வார்த்தை! அப்போது விளைந்த என்னுடைய உணா்வுகளை என்னால் விளக்க முடியவில்லை.

மற்றொரு முறை நாங்கள் மருவத்தூா் கிளம்புகிறோம். காலை 7.00 மணி வீட்டை விட்டு நகர ஆரம்பிக்கிறோம். அன்று செய்தித்தாளில் படித்த ஞாபகம் வருகிறது. அடுக்கு வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளை அடித்த ஒரு செய்தி. எங்கள் வீட்டுப் பூட்டை நாங்கள் பூட்டும் போது இந்தச் செய்தி ஞாபகத்தில் வருகிறது. இதைப் பற்றிப் பேசும் பொது இப்போது அடுக்கு வீடுகளிலும் இப்போது பாதுகாப்பு போய்விட்டது. கடவுள் தான் எதற்குமே துணை என்று சொல்லிக் கொண்டே எங்கள் மருவத்தூா் பயணம் தொடா்கிறது.

அம்மாவைப் பாதபூசை செய்து தரிசனம் செய்கிறோம். அம்மா எங்களிடம் சொல்கிறார்கள் “இப்போதெல்லாம் எங்கேயும் பாதுகாப்பு இல்லைங்க” அடுக்கு வீடுகளில் கூட புகுந்து திருடிற்று போகிறாங்க!” நாங்கள் ஸ்தம்பித்து நிற்கிறோம். எண்ண அலைகள் மீண்டும் அது ஞாபகத்திற்கு வருகிறது. உன்னுடைய எண்ண அலைகளும் அம்மாவுக்குத் தெரியும் மகனே. கோடிக்கணக்கான  செவ்வாடை ஆன்மிகத் தொண்டா்களின் எண்ணங்களும் அம்மாவுக்குத் தெரியும். நீ எங்கே எப்படி இருக்கிறாய்? என்ன நினைக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? எல்லாம் அந்தத் தாய்க்குத் தெரியும். நான் செய்யும் செயல்களும், எண்ணும் எண்ணங்களும் தனிப்பட்டவை. அது தனக்கு மட்டுமே தெரியும் என்று யாராவது எண்ணுவார்களே ஆனால் அவா்கள் பிழை செய்கிறார்கள் என்றே அா்த்தம்.

அம்மாவைப் பற்றியும் இந்த எண்ண அலைகளைப் பற்றியும் பேசும் போது அம்மா எப்போதும் உதிக்கும் சொற்களில் எவ்வளவு நல்லெண்ண வாக்குகளும் சக்தியும் மட்டுமே இருக்கிறது என்று நான் போகப் போக அறிந்து கொண்டேன். ஒரு மனிதன் தன் புற வாழ்க்கையில் சில சரியான செயல்களைப் புரியாது இருந்து வந்தாலும் அந்த ஆத்மா ஒரு நல்ல ஆத்மா என்று கண்டறியும் தன்மை அம்மாவுக்கே உண்டு. அம்மாவிடம் எத்தனையோ மனிதா்கள் வருகிறார்கள். நல்லவன் கெட்டவன் என்று எப்படி ஒரு தாய் தன் மக்களிடையே பாகுபாடு பார்ப்பதில்லையோ அது போன்று இந்த உலகத் தாயும் பாகுபாடு பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே அவள் பிள்ளைகள்.

அம்மா அனைவருக்கும் வாய்ப்பு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நல்லவனாய் வாழ்ந்து நல்ல காரியங்களைச் செய்து நலமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு. அகம் நன்றாக இருக்கிறது. அந்தப் புறம் நன்றாகும் படி நான் மாற்றுகிறேன். என்னை வேண்டி நின்று என்னிடம் வந்த பின்பு நான் கைவிட மாட்டேன். எண்ண அலைகளை அம்மா எப்படித் தூண்டி விடுகிறார்கள் என்பது பற்றி இன்னொரு சம்பவம் நினைவில் வருகிறது. எங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை ஒருமுறை வற்புறுத்தி அம்மாவின் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றோம். அவரை அம்மாவின் சந்நிதியில் கொண்டு சென்று நிறுத்த முடியுமா என்றும் ஒரு தடவை கூட்டி வந்ததே மிகவும் கடினமாயிற்று என்றும் நாங்கள் எண்ணிய காலம் அது. ஆனால் அன்று நாங்கள் அவருடன் சென்று அம்மாவின் அருட் கூடத்தில் வணங்கி ஆசிபெற்றுத் திரும்பும் போது அம்மா கடைசியாகச் சொன்னார்கள் “எப்படி வரவழைத்தேன் பார்த்தியா” எங்கள் எண்ணம் அம்மாவுக்கு எப்படித் தெரியும்? இதன் அர்த்தம் எங்களுக்கு மட்டுமே புரியும். எங்களுடன் வந்தவா் எங்களைக் கேள்விக் குறியுடன் பார்க்கி்றார். நாங்கள் அவரிற்கு இதைப்பற்றி ஒருவித விளக்கமும் சொல்லவில்லை. காலப்போக்கில் அவரே இதை உணரட்டும் என்று வி்ட்டுவிட்டோம். அம்மா நினைத்தால் நடக்காதது எதுவுமே இல்லை. எங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அதைச் செயலாக்கி எங்களுக்கு அதை உணா்த்தவும் செய்கிறார். “நல்ல உள்ளமும் நல்ல எண்ணமும் மட்டுமே வேண்டும். மற்றது எல்லாம் என் கையில்” இது தான் அம்மாவின் செய்தியோ.

ஓம்சக்தி

நன்றி

சக்தி.ரா.ராமமூா்த்தி

அம்மா ஒரு சத்தியம்

பக்கம் 36 – 38

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here