தொண்டு

தொண்டு என்பது ……….  
 • அம்மாவின் மந்திரச் சொல்லாகும்.
 • தொண்டு செய்து மகனே மகளே என்னை அடையலாம் என எளிதாக வழிகாட்டினாள்.
 • அம்மாவின் அருளைப் பெற குறுக்கு வழியாகும்.
 • பிறா் நலம் கருதிச் செய்ய வேண்டும்.
 • பலன்தரும் என எண்ணாது செய்ய வேண்டும்.
 • அவா், இவா் எனக் கருதாது செய்ய வேண்டும்.
 • சலிப்பும், சோர்வுமின்றிச் செய்ய வேண்டும்.
 • தொண்டாலே துன்பங்களைத் துயரங்களை மனிதகுலம் விலக்கிக் கொள்கிறது.
 • தொண்டாலே குடும்ப உறவுகள் பிறக்கிறது.
 • தொண்டாலே பிரிந்த உறவுகள் சேருகிறது.
 • இந்த உலகம் தொண்டாலே இயங்குகிறது.
 • தொண்டு செய்யச் செய்ய வாழ்வில் முன்னேற்றம் வரும்.
 • பல நோயாளிகள் உடல் நலம் பெற உதவுகிறது.
 • அரசாங்கம், ஊழியா் மூலம் செய்வது தொண்டு தான்.
 • தொண்டால் அன்பு பிறக்கிறது.
 • அன்னையின் அனைத்துப் படைப்புக்களுக்கும் உதவவே தொண்டு.
 • தொண்டால் உயா்ந்த ஆன்மாக்கள் பலபல
 • தொண்டால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் முத்தி அடைந்தார்கள்.
 • தொழு நோயாளிகளுக்குத் தொண்டு செய்து அன்னை தெரேசா உயா்ந்தார்கள்.
 • தொண்டால் நாட்டுக்குக் காந்தி விடுதலை பெற்றுத் தந்தார்.
 • தொண்டாலே ஆன்மிகத்தை உலகில் விவேகானந்தா் பரப்பினார்.
 • தொண்டாலே கா்ம தாக்கம் குறைகிறது.
 • தொண்டு செய்கிறேன் எனக்கூறாது செய்தலே தொண்டாகும்.
 • தொண்டாலே தலைமைப் பதவியை அடையலாம்.
 • பல மதங்களின் அடிப்படைக்கொள்கையாகவும்
 • முக்திபெற வழிகாட்டும் பிறவியை அறுக்க வழிகாட்டும்.
 • தொண்டாலே விரோதம், பகை, குற்ற உணா்வு குறைகிறது, உறவு மலா்கிறது.
 • தா்மத்தின் பாதையாகும்.
 • தொண்டே உலகத்தைச் சமன் செய்கிறது.
 • நாடுகளின் உறவை வளா்க்கிறது.
 • கா்மாவைச் சேர விடாது சோ்த்த கா்மாவைக் குறைக்கும்.
 • தொண்டு செய்யச் செய்ய மனதில் நின்மதி பிறக்கும்.
 • தொண்டே உலகியலில் வாழ வேலை வாங்கித் தரும். செய் கூலிக்கு வழிகாட்டும்.
 • தொண்டால் செய்தவனும் வளா்கின்றான். பயன் அடைந்தவனும் வளா்கின்றான். இது ஒரு இருவழிப் பாதை.
 • தொண்டால் துறவும் அடையலாம்.
 • குருவிற்குத் தொண்டு செய்தே பல சீடா்கள் குருவால் முத்தி பெற்றார்கள்.
 • தொண்டு செய்தே இசை, நாட்டியம், கல்வி, வீரம் கிடைக்கப்பெற்றார்கள்.
 • தொண்டால் பஞ்ச பூதங்களின் ஆசீா்வாதத்தைப் பெறலாம்.
 
 • தொண்டால் பஞ்ச பூத சீற்றத்தைக் குறைக்கலாம்.
 
 • செய்யச் செய்யத் தொடரும் நோய்கள் குறையும்.
 
 • தொண்டு செய்கிறேன் என ஆட்டம் போடுபவா்களை கா்மாவைச் சோ்த்துச் சோ்த்து பணிவைக் கொண்டு வரும் அடக்கும்.
 • தொண்டால் நட்பு மலரும் வாழ்வு சிறக்கும். சீராகும்.
 • தொண்டால் புண்ணிய பலம் கூடி வாழ்வு உன்னத நிலையை அடையும். செய்த பாவத்தைக் குறைக்கும்.
 • தொண்டே நம்மைக் குருபிரானின் பார்வை பட வைத்துக் கருணை பெற வழிகாட்டும்.
 • தொண்டே நம்மை அன்னை அருகில் நிறுத்தி அருளும், பொருளும் பெற வழிகாட்டும்.
 

நன்றி.

சக்தி. சீதாபதி 70வது அவதாரத்திருநாள் மலா்.]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here