தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடம் திருப்பணிக்கு அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களிடம் ஆசி வாங்க தூத்துக்குடி செவ்வாடை சக்திகள் மேல்மருவத்தூருக்கு சென்ற நிலையில், அன்று மாலையே பங்காரு அம்மா அவர்கள் திருவிக நகர் சக்திபீடத்திற்கு வந்ததை அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் நேரடியாக பார்த்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடம் திருப்பணிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (26.04.2022) அன்று செவ்வாடை சக்திகள் குரு காணிக்கையுடன் அருட்கூடத்தில் அம்மா அவர்களை சந்தித்து புதிய இடத்தை அம்மா நீங்களே தேர்வு செய்து ஆசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சக்திகளுக்கு ஆசிகளை வழங்கி பின்னர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் திருவாய் மலர்ந்தருளுகையில், வரும் காலங்களில் இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். குளிர்பதன பெட்டி உணவுகளை தவிர்க்க வேண்டும். குளிரூட்டிகளை (ஏ.சி) தவிர்க்க வேண்டும். 2 மாத காலங்கள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அம்மா அருளிய கஞ்சிகளை அருந்த வேண்டும். பெரியம்மை நோயிலிருந்து உங்களை காப்பேன் என்று அருளினார்கள்.

தொடர்ந்து அம்மா கூறுகையில், சக்திபீடம் என்ன என்பது மக்களுக்கு இப்பொழுதுதான் அதன் சக்தி புரிகிறது. சக்திபீடங்கள், மன்றங்கள் இல்லையென்றால். ஒரே குடியாக‌த்தாகத் தான் இருக்கும். நாட்டில் அமைதி இருக்காது. பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவதால் தான் காப்பாற்றப்படுகிறீர்கள். மகளிர் நன்றாக தொண்டு செய்கிறார்கள். அது போல பெண்களை வைத்தே சக்திபீட திருப்பணிகளை செய்யுங்கள் என்று ஆசி வழங்கினார்கள்.

*பங்காரு அம்மாவின் திருக்காட்சி!*

இந்நிலையில், தூத்துக்குடி செவ்வாடை சக்திகள் மற்றும் நிர்வாகிகள் மேல்மருவத்தூருக்கு சென்ற நிலையில், சக்திபீடம் அமைந்துள்ள தூத்துக்குடி திருவிக நகரில் வசித்து வரும் புவனேஷ்வரி என்ற பெண் நேற்று செவ்வாய்க்கிழமை (26.04.2022) மாலையில் அதே தெருவில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் சென்றபோது பங்காரு அம்மா அவர்கள் சிகப்பு வேஷ்டியுடன் மெதுவாக நடந்து வந்து சக்தி பீடத்திற்குள் செல்வதை தூரத்தில் இருந்து பார்த்துள்ளார்.

உடனே அவர் நிர்வாகிகள் அனைவரும் மேல்மருவத்தூர் சென்றுவிட்டனரே? இங்கு வந்தது யார்? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சாத்தப்பட்டிருந்த சக்திபீடத்திற்குள் மறைந்துள்ளது கண்டு அதிசயம் அடைந்த அவர் மேல்மருவத்தூரில் வந்த‌ நிர்வாகிகளிடம் இன்று காலை தெரிவித்தார். திருக்குட முழுக்கு விழாவிற்கு வருகை புரிந்து அதனை நடத்தி அம்மா அவர்கள் ஆசி வழங்குவது உண்டு. ஆனால் திருப்பணிக்கு முன்பே சக்தி பீடத்தில் தனது திருப்பாதத்தை பதித்து காட்சியளித்த பங்காரு அம்மாவின் இந்த அற்புதம் தூத்துக்குடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*குரு இல்லையேல் கோவில் இல்லை!*
*குருவே தெய்வம்!*
ஓம் சக்தி.