சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி யோசனை கூறி அனுப்பி வைத்தார்.

நினைவு திரும்பியவுடன் அந்தப் பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்படடார். மறுநாள் அவரது இடதுகையும், வலது காலும் செயலற்றுப் போய்விட்டன. அங்கே அவரது மூளையைப் படம் பிடித்துப் பார்த்தாள். மூளையில் இரத்தக்குழாயில் இரத்தம் உறைந்திருப்தாகச் சொல்லி அதற்குரிய மருத்துவம் செய்தார்கள். ஒருவாரம் கழித்து இடதுகை மட்டும் அசைந்தது.

14 நாட்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டபின் இடது கைக்கும் இடது காலுக்கும் பயிற்சி அளித்தால் சரியாகிவிடும் என்றும், ஒரு நீண்ட மருந்துப்பட்டியல் கொடுத்து, பத்திய உணவு சாப்பிடச் சொல்லி, மாதம் ஒருமுறை வந்து பரிசோதித்துக் கொண்டு செல்லும்படியும் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

ஏப்ரல் 1984 வரை மருந்து சாப்பிட்டும், உடற்பயிற்சி செய்துகொண்டும் வந்தார் திருமலைசாமி. உடற்பயிற்சிக்கு மட்டும் ஒருநாள் செலவு இருபது ரூபாய். அப்படியும் நிலைமை சீராகாமல் அதிகமாகிக் கொண்டு வந்தது. வருமானம் அதிகமில்லை. மகன்களுக்கும் அதிக வருவாய் இல்லை. எப்படியோ கடன் வாங்கிச் சமளித்து வந்தார் எனினும் உடல் குணமாகவில்லை.

ஒரு நரம்பியல் நிபுணரிடம் சென்று யோசனை கேட்டார். அவர் பரிசோதனை செய்து ” இந்த நோய் குணமாவதற்குக் காலதமாகும் ” எனச்சொல்லி ஒரு மருத்துப்படியல் எழுதிக் கொடுத்து மாதம் ஒரு முறை குறிப்பிட்ட நாளில் வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி யோசனை கூறினார்.

இந்த நிலையில் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கேள்விப்பட்டு மேல்மருவத்தூர் வந்தார். இருவர் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டிருக்க அந்த நிலையிலேயே நின்றபடி தான் அருள்வாக்கு கேட்க முடிந்தது.

அன்னை ஆதிபராசக்தி அருள்வாக்கில் ” வேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து, முருங்கைப்பட்டையில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து வாரம் மூன்று நாள் உடம்பில் தேய்த்துக் குளி செவ்வாய், வெள்ளி இரண்டு நாட்களும் விரதம் இரு ! என்றாள்.

அன்னை ஆதிபராசக்தி கூறியடியே செய்தார். குணமடைந்தார். அவரை சோதித்த மருத்துவர், ” நல்ல குணம் ஏற்பட்டிருப்பதாகவும், ஆயிரத்தில் ஒருவருக்கு தான் இதுபோலக் குணமடையும்” என்றும் தெரிவித்தார்.

பக்கம்: 275.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1.