1987 முதல் அம்மா அவர்களைச் சரண் அடைந்தவள் நான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இடது கண்ணில் வெள்ளை விழியில் கருவிழிக்கு அருகில் ஒரு சிறிய சதைக்கட்டி ஒன்று ஏற்பட்டது.அதனால் கண் எரிச்சல், நமைச்சலுடன் கூடிய வலி ஏற்பட்டுத் தொல்லை கொடுத்து வந்தது.வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் நீர் வடிந்து கொண்டே இருக்கும்.மிகவும் அவதியுற்றேன்.

கண் மருத்துவர்களிடம் காட்டினேன்.சொட்டு மருந்து எழுதிக் கொடுத்தார்கள்.அந்த மருந்து போட்டால், அப்பொழுது மட்டும் எரிச்சல், உறுத்தல் நிற்கும்.அதன்பின் வலி வந்து பாடாய்ப்படுத்தும்.என் கண் நோய் குணமாக அம்மா அவர்களை வேண்டிக் கொண்டேன்.

அம்மா அவர்களின் மணிவிழா வந்தது. அந்த விழாவின்போது வேள்வித் தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்தது.

வேள்விப் புகையால் கூட கண் எரிச்சல் வரும் என்று என் தம்பி எச்சரித்தான் எதையும் பொருட்படுத்தாமல் வேள்ளித் தொண்டு செய்து கொண்டிருந்தேன்.

அப்போது…

கருவறையின் முன்பு நின்று கொண்டிருந்த நம் குருபகவான் அவர்கள் தம் கடைக்கண் பார்வையால் என்னையே உற்று நோக்குவதைச் தற்செயலாக ஒரு கணம் உணர்ந்தேன்.அந்த மகிழ்ச்சியில் மீண்டும் அதிகமாகத் தொண்டில் ஈடுபட்டேன்.

மணிவிழா முடிந்து வீட்டிற்கு வந்து அடுத்த நாள் காலை நான் கண்ணாடியில் பார்த்த பொழுது என்ன ஆச்சரியம்…!

என் கண்ணில் இருந்த சதைக்கட்டி இருந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டது.

வலியும் எரிச்சலும் இல்லை …!அன்று முதல் நிம்மதியாக உறங்கினேன்.

அம்மா பார்த்த அந்தக் கடைக்கண் பார்வைக்கு எவ்வளவு சக்தி என்பதை அன்றுதான் அனுபவத்தில் உணர்ந்தேன்.

ஓம்சக்தி !
சக்தி.பா.கலா,
பெரியதத்தூர், பெரம்பலூர் மாவட்டம்.
பக்கம் -20.
சக்திஒளி -அக்டோபர் 2005,