சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மஞ்சுளா தாயாருக்கு கழுத்தில் தொண்டை பகுதியில் ஒரு கட்டி.டாக்டர் அறுவை சிக்கிசை என்றனர். தாயருக்கு அச்சம்.

மருவூரில் அருள்வாக்கில் குடும்பத்ததுக்கு கூற வேண்டியதை கூறிவிட்டு “வேறு என்ன வேண்டும் மகளே!” என்றார்கள் பங்காருஅம்மா.

சக்தியின் தாயார் “எனக்கு கழுத்தில் கட்டி இருக்கிறதம்மா” என கூற,பங்காருஅம்மா உடனே எங்கே”கட்டியா? எங்கே மகளே? எங்கே? என்று கேட்டபடி தங்களுடைய கழுத்தையே தடவினார்கள். பின்பு எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்கள்.

பங்காரு அம்மா கூறிய அடுத்த சில தினங்களில் அந்த கட்டி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து மறைந்து விட்டது.

பிறகு மருத்துவ பரிசோதனை செய்த போது மருத்துவர்களுக்கே ஆச்சரியம்.