மறுபிறவி தந்த மருவூர் அரசி

0
1803

அன்னை ஆதிபராசக்தியால் அருள் பெற்று வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பம் ஒன்று.விருதுநகர் மாவட்டம்
ஆலங்குளம் அரசு மன்றத்தில்
18 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்தேன்.
தற்சமயம் எனது சொந்த ஊரான விருதுநகருக்கு குடி வந்து விட்டோம்.எனது மகனுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு இருதய
அறுவை சிகிச்சை செய்திருந்தோம். .
28.12.15 தேதி பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் சென்றோம். அச்சமயம் இரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது.அதனை நீக்க
மறுபடியும் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்
கூறி விட்டார்கள்.
எங்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்வோம் என்று முடிவெடுத்தோம்.
08.01.06 அன்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்தோம். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என் மகனைப் பார்த்து நீ கவலைப்படாதே வீட்டிற்கு போ நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்கள்.
நான் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களிடம் மறுபடியும் மருத்துவமனைக்கு சென்றுபரிசோதனை செய்தால் என் மகனுக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்று கூற வேண்டும் என்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின்
பாதங்களில் வணங்கி அழுதேன்.
அதற்கு பரம்பொருள் பங்காரு
அம்மா அவர்கள் ‘ நீ போ நான் மறுபடியும் அறுவை சிகிச்சை இல்லாமல் பார்த்துக்
கொள்கிறேன் ‘ என்று கூறினார்கள்.
அதுபோலவே 25.01.16 அன்று மருத்துவமனைக்கு சென்றோம் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு அறுவை சிகிச்சை தேவையில்லை
என்று கூறிவிட்டார்கள்.
பரம்பொருள் பங்காரு அம்மா
அவர்களிடம் செல்வதற்கு முன் சக்தி ஒளிக்கு கடிதம் எழுதுகிறேன் என்றும் வேண்டிக் கொண்டு சென்றேன்.
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என் மகனுக்கு மறுபிறவி கொடுத்து மீட்டுத் தந்தார்கள்.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.என் குடும்பத்திற்கு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தி தந்திருக்கிறார்கள்.
ஓம் சக்தி
சக்தி.இரா.இராஜேஸ்வரி, விருதுநகர்.
பக்கம்:36.
சக்தி ஒளி, மே-2016