எங்கிருந்தாலும் காக்கும் பரம்பொருள் பங்காருஅம்மா!

0
1238

நான் என் சிறு வயதிலிருந்து மேல்மருவத்தூர் வரும் 34 வயதுப் பெண். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உண்மையான பக்தர் என்னும் நிலையை இன்னும் அடையவில்லை. ஆனால் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை நினைத்தால் ஒருவித பாசம் என்னுள் எப்பொழுதும் இருக்கிறது.
” பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் எப்போதும் எனக்குக் துனையாக இருப்பாங்க ! “என்ற நம்பிக்கை உண்டு. 2014 ஆம் ஆண்டு நானும் எனது கணவரும் மற்றும் 5 வயது பெண் குழந்தையோடு சென்னையிலிருந்து அபுதாபிக்கு குடிபெயர்ந்தோம்.
இங்கு வந்து 1 வருடம் கடந்த பின்பு
தான் அபுதாபியில் ஓம் சக்தி மன்றம் இருக்கிறது என்பதை அறிந்தேன்.மிகவும் மிகழ்ச்சி அடைந்தேன். வியாழக்கிழமை தோறும் மன்றம் செல்லும் ஒரு பழக்கம் ஏற்பட்டது.
இதற்கு முன் வாரா வாரம் மன்றத்திற்குச் செல்லும் அனுபவம் என்பது இல்லை. அமீரகத்தில் அதுவும் கோயில்கள் இல்லாத ஒரு இடத்தில் வெகு சிறப்பாக வியாழக்கிழமை தோறும் மன்றம் நடத்தி வரும் சக்திகளுக்கு என் போன்றவர்கள் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு விழாவின் போதும் அவ்வளவு நேர்த்தியான அலங்காரங்கள், வழிபாடு என்று மன்றத்தின் மகிமையை உணர்த்தினார்கள் அபுதாபி மன்ற சக்திகள். இது போன்ற வெளிநாடுகளில் தான் மன்றத்தின் அவசியம் தெரிகின்றது.
என் அனுபவம்
செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு என் 7 வயதுப் பெண் குழந்தை பூங்காவில் விளையாட்டும் போது கீழே விழுந்து அவளது இடது கை உடைந்து விட்டது.
மருத்துவமனை சென்று 20 நிமிடங்களில் ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் சென்று விட்டார்.மருத்துவர் கைமுட்டிக்கு 1 அங்குலத்திற்கு மேல் முழுமையாக எலும்பு உடைந்ததுள்ளது.அதனால் ஆபரேஷன் செய்து பிளேட் வைக்க வேண்டும் என்றார்.
நான் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் மனதார வேண்டிக் கொண்டேன். ஆபரேஷன் தியேட்டரில் மூன்று மணி நேரம் கழித்து பிளேட் வைக்குமுன் ரொட்டேட் செய்து பார்த்தோம். வழக்கமாக இதுபோன்ற முறிவுக்கு செய்யமாட்டோம்.ஆனால் ஏதோ செய்து பார்த்தோம். எலும்பு திரும்பிக் கொண்டது. அதனால் பிளேட் வைக்க அவசியம் ஏற்படவில்லை.” இந்த மாதிரி எலும்பு முறிவுக்கு இதுபோல் எப்போதும் நடக்காது” என்றார்.
அந்த 3 மணிநேரமும் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை
நினைத்துக் கொண்டே இருந்தேன். அபுதாபியில் நானும் எனது
கணவர் மட்டும் தான் வேறு
சொந்தங்கள் யாரும் இல்லை.
ஆனால் பரம்பொருள்
பங்காரு அம்மா அவர்கள்
” உறவுக்கும் உறவானவளே
போற்றி ஓம்” என்ற நிலையில்
எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
ஆபரேஷன் இல்லாமல் இருந்தால்
சக்தி ஒளிக்கு எழுதுவதாக
வேண்டிக் கொண்டேன்.என்
பெற்றோர்பரம்பொருள்
பங்காருஅம்மா அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களின் தாய் உள்ளமும்
மட்டுமே என் குழந்தையைக் காப்பாற்றியது.
அதன் பின் கடந்த 6 மாதங்களாக பிசியோதெரபி எடுத்து இந்த
மாதம் அவளால் கையை பழையபடி நேராக நீட்டி மடக்கமுடிகின்றது.
எங்கிருந்தாலும் பரம்பொருள்
பங்காரு அம்மா அவர்கள் நம்முடன் இருப்பாங்க.நம்மைக் காப்பாத்துங்க என்பதை உணர்ந்தேன்.
ஓம் சக்தி
சக்தி ஸ்ரீதேவி அபுதாபி.
பக்கம்: 42-43.
சக்தி ஒளி, செப்டம்பர்-2017.