பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி நிழலில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகள் சென்ற வருடம் 9 ம் வகுப்பு படிக்கும் பொழுது டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். அதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருளால் எனது மகள் உயிர் பிழைத்தாள்.
ஒன்பதாம் வகுப்பில் சரியாக பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. இந்நிலையில் 10ம் வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்றாள். பத்தாம் வகுப்பிலும் சரியாக பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. பள்ளியில் நடந்து சிறப்பு வகுப்பு எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனது மகளுக்கு வந்த டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்பு இருந்து வந்தது.
மருத்துவர்கள் அவளால் முடிந்தால் மட்டும் பள்ளிக்கு அனுப்புங்கள். வற்புறுத்த வேண்டாம் என்று கூறினார்கள். இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு 10ஆம்
வகுப்பு பள்ளிக்கு அடிக்கடி
விடுமுறை எடுத்தால் தேர்வில்
தேர்ச்சி அடைவதே சிரமம்
என்று கூறினார்கள்.
என் மகளை அழைத்துக் கொண்டு பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்தோம். மகளின் நிலையை பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் கூறி வேதனைப்பட்டோம்.
அப்பொழுது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்எனது மகளுக்கு டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உடல் பாதிப்பிற்கு மருந்து சொன்னார்கள். அதே சமயம் எனது மகளைப் பார்த்து, “பள்ளிக்கு ஒழுங்காக செல். நீ நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்கள்.
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் கூறிய மருந்துகளைத் தொடர்ந்து கொடுத்தோம். எனது மகளுக்கு டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட நோயும் குணமானது.
அதே சமயம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வந்தது. தேர்வு எழுதி முடித்தாள். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் கருணையால்…. எனது மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி செய்தால் போதும் என்று எங்கள் குடும்பத்தினரும், பள்ளி ஆசிரியர்களும் நினைத்தோம்.
மே 19ம் தேதி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது.
423 மதிப்பெண் எனது மகள் வாங்கியிருந்தாள். இந்த மதிப்பெண்ணைப் பார்த்து
அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
அனைத்தும் பரம்பொருள்
பங்காருஅம்மா அவர்களின்
அருள் தான் காரணம் என்று பரிபூரணமாக உணர்ந்தோம்.
தேர்ச்சி செய்தாலே பெரிய
விஷயம் என்று நினைத்தோம்.
ஆனால் பரம்பொருள் பங்காரு
அம்மா அவர்களின் அருளால் 423
மதிப்பெண்கள் எடுத்ததற்கு
எங்கள் நன்றியை பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறோம்.
எனது மகளின் நோயையும்
பரம்பொருள் பங்காரு அம்மா
அவர்கள்குணப்படுத்தினார்கள்.
பத்தாம் வகுப்புத் தேர்விலும்
யாரும் எதிர்பார்க்காத நல்ல
மதிப்பெண்ணையும் எடுக்க வைத்தார்கள்.பரம்பொருள்
பங்காருஅம்மா அவர்களின்
கருணையே கருணை!
ஓம்சக்தி!
சக்தி எஸ். மாதேஸ்வரன், ஈரோடு.
பக்கம் 58 – 59.
சக்தி ஒளி செப்டம்பர் 2017 .