எந்தக் கடவுள் செய்த அதிசயம் இது?

0
1266

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி!

“ஓம்சக்தி என்றால் ஓடோடி வருவாள்!பராசக்திஎன்றால் பறந்தோடி வருவாள்!” என்பதைப் பலமுறை என் வாழ்வில் உணர்த்தி இருக்கிறாள்.

சமீபத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை நான் கூற விரும்புகிறேன்.

கடந்த 11.9.2012 அன்று எனது அத்தைக்கு ஐந்து நாட்களாகச் சிறுநீர் பிரியாமல், வயிறு வீங்கிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

டாக்டர் இரத்தப் பரிசோதனை செய்து விட்டு இரத்தத்தில் உள்ள உப்பின் அளவு அதிகரித்துச் சிறுநீரகப்பை செயலிழந்து விட்டதாகக் கூறி உடனே கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கவும் பரிந்துரைத்தார்.

கோவை அரசு பொது மருத்துவமனையில் பரிசோதித்த
டாக்டர், இரத்தத்தில் சராசரியாக 40மி.கி. அளவு இருக்க வேண்டிய உப்பின் அளவு 122 மி.கி உள்ளதாகக் கூறினார். மேலும் சிறுநீரகப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்றார்.

பரிசோதனைக்கு அழைத்து செல்லும் போது அங்கிருந்த மருத்துவர் சில மருத்துவக் காரணங்கள் கூறி இரண்டு நாட்கள் கழித்து இரத்தம் எடுத்துப் பரிசோதிக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.

இந்நிலையில் எனது அம்மாவும், நானும் எங்கள் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில்,13.9.12 அன்று வழிபாடு செய்து குங்குமம், தீர்த்தம், பிரசாதம் பெற்றுக் கொண்டு, மன்றத்தில்16.9.12. அன்று நடைபெற் உள்ள ஆடிப்பூர கஞ்சிக் கலய விழாவில் எங்கள் குடும்பத்தார் அனைவரும் கஞ்சிக் கலயம் எடுப்பதாகவும், எங்கள் அத்தைக்கு சிறுநீரகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் காப்பாற்று தாயே! எனவும் மனமுருகி வேண்டிக்கொண்டு பிரசாதம் கொண்டு சென்றோம்.

அதுவரை பரிசோதனைக்குக் கூட
சிறுநீர் வராமல் இருந்த நிலை மாறி,
என் அத்தையின் நெற்றியில்
ஆன்மிககரு அருள்திரு அம்மா அவர்களின் குங்குமத்தை இட்டும், ஆன்மிக குருஅருள்திரு அம்மாஅவர்களை நினைத்து
வாயில் குங்குமம் போட்டதும்
அன்றிரவே நான்கு முறை சிறுநீர் கழித்தார்.

அதுமட்டுமா….? எதையும் சாப்பிடாமலும்,அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டும் இருந்த அவர் 16.9.12 அன்று நடந்த ஆடிப்பூர கஞ்சி கலய விழாவில், சுமந்து வந்த கஞ்சியில் கொஞ்சம் கொடுத்தவுடன் மடமட என்று குடித்தார்கள். வாந்தியும் நின்று விட்டது.

17.9.2012 அன்று பரிசோசித்த டாக்டர் அரிந்து போனார்’எந்த கடவுள் செய்த அதிசயம் இது? உப்பின் அளவு 122 மி.கி இருந்தும் இந்தம்மாவின் கிட்னி பாதிக்காமல் இருக்கிறதே….என்றார்.

‘அது எந்தச் சாமியும் செய்த அதிசயம் அல்ல! எங்கள் நடமாடும் தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளால் நடந்த அதிசயம்! அவளால் தான் இவர் கிட்னி பாதிக்காமல் இருக்கிறது!’ என்றோம்.

அது மட்டுமா….?

மேலும் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தாக வேண்டும் எனக் கூறிய டாக்டர் 5 நாட்களில் இவர் வீடு செல்லாம் என்றார்.

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் கருனை ஒன்று மட்டும் இருந்தால் போதும்! எத்தனை துன்பம் வந்தாலும் அவள் காப்பாற்றி விடுவாள் என்பது சத்தியம்.

நம் வீடுகளிலெல்லாம் தினமும்1008,108 மந்திரங்கள் ஒலிக்கட்டும்!என்று அவள் பாதம் பணிவோம்! அவள் திருவடிகளே நமக்குக் கதி!

ஓம்சக்தி

சக்தி. சுதா சித்ரா, அவினாசி.

பக்கம்: 26-27.

சக்தி ஒளி. ஆகஸ்ட் 2013.