ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருட் காட்சி

0
840

நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை – குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு
மன்றத்துக்குச் சென்று தொண்டு
செய்து வருவேன்.என் வாழ்வில் அம்மா அவர்கள் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று.

24.11.2000 அன்று வெள்ளிக்கிழமை, அம்மா அவர்களுக்கு அலங்காரம் செய்து திருக்ஷ்டி கழித்து வழிபாட்டை ஆரம்பித்தோம். 1008 மந்திரம் படிப்பவர்கட்குத் தீபாராதனை செய்து திருக்ஷ்டி கழிக்கப்பட்டது. நான் அம்மா அவர்களுக்கு மலர் அர்ச்சனை செய்வதற்காக நின்றேன். மேல்மருவத்தூரில் ஆன்மிக குருஅருள்திரு அம்மா அவர்கள்எப்படி அருள் நிலையில் வருகிறார்களோ, அந்தக் காட்சியை மானசீகமாக நினைத்துக் கொண்டு மலர் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது கண்ணீர் மல்க பின் வருமாறு சங்கல்பம் சொல்லியபடி மலர் அர்ச்சனை செய்தேன். அம்மா அவர்கள் ஏழை மக்களைப் பசியில்லாமல் நீ காப்பாற்ற வேண்டும். பிளாட்பாரத்தில் அவதிப்படும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். கைக்கால் இல்லாத ஊனமுற்றவர்களை, கண்களை இழந்தவர்களை, அநாதைகளைக் காப்பாற்ற வேண்டும். வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். என வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்தபோது படத்தில் ஓர் அற்புதம் நடைபெற்றது. அது………..

படத்தில் அம்மா அவர்களின் மூடியிருந்த இரண்டு கண்களும் திறந்தபடி என்னைப் பார்த்தாள். கருவிழி, வெள்ளை விழி இப்படியும் அப்படியும் அசைவதை நன்றாகப் பார்த்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கைகால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.

அம்மா அவர்களின்முகம் தோள் பட்டையுடன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. 1008 மந்திரம் ஆரம்பம் முதல் முடியும்வரை ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்களின் முகமும், கண்களும் காட்சி கொடுத்தபடியே இருந்தன. வழிபாடு முடிந்து கற்பூரம் காட்டிய பிறகுதான் அந்தக் காட்சி மறைந்தது.

நன்றி,

சக்தி. ஆர். கெளரி, மந்தவெளி.

பக்கம் : 10.
சக்தி ஒளி ஜனவரி 2009.