ஓ…! அம்மா…..!

அன்றைக்கு சக்தி வீரராகவன் புதுமனை புகுவிழாவில் அந்தத் தாம்பரம் தொண்டர் வேள்வி செய்ய வந்தாராம். வேள்வி முடிந்தபிறகு நீ அவரை அழைத்தாயாம்! “உனக்காகத்தானடா இன்றைக்கு நான் இங்கே வந்தேன்….” என்றாயாம்!

அவரை எதிரே நிற்க வைத்து “என் புருவ மத்தியைப் பாரடா….! என்றாயாம்.” என்ன தெரிகிறது…?” என்றாயாம்!

” தாயே…. திருப்பதி தெரிகிறது…” என்றாராம் அவர்.
“இப்போது பாரடா….! என்றாயாம்!
“தாயே! இப்போது பழனிமலை தெரிகிறது…!” என்றாராம்.
“இப்போது பாரடா….! என்றாயாம்!
“அம்மா இப்போது சபரிமலை தெரிகிறது…. ” என்றாராம்.
“இப்போது…? என்றாயாம்!
“தாயே! சுயம்பு தெரிகிறது….!” என்றாராம்.

“எல்லாமாக நானே இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளடா….!” என்றாயாம்!

மூலப் பரம்பொருளே இப்படிக் குருவடிவில் உலாவி வருகிறது என்கிற ஞானம் ஏன் எங்களில் பலருக்கு உரைக்க மாட்டேன் என்கிறது…!

உன் மாயை காரணமா…? எங்கள் கர்ம வினை காரணமா….??