இங்கு காணும் உலகியல் சார்ந்த அனைத்துமே உனக்கு உதவாதே! எந்நிகழ்வையும் இங்கு பொழுது போக்காய்க் கொண்டு பரமன் மருவூரான் காரியத்தை உன் லட்சியமாய் கொண்டு விடு!

எத்தொழிலில் நீ ஈடுபட்டு வந்தாலும், உன் மனமெல்லாம் மருவூரானையே நாடி இருக்கட்டும்! உன் மனதிலே எந்நாளும் மருவூரானையே துதித்திருந்தால் நீ செய்யும் அனைத்தையும் மருவூரார் விழி நடத்திச்செல்லுமே!?

மருவூரான் இறைவனையே நம்பித் தொண்டு புரிவார்க்கு எந்நாளுமொரு அபாயமும் இல்லையே!

அவனியிலே அம்மாவின் தொண்டனெனும் நிலை அடைதலோ அரிதிலுமரிதான நிலை! முற்கால பல பிறவிகளிலே பரமனை நோக்கி நினைந்து தவமாற்றி இருந்ததாலே இங்கு இக்கணம் மானுடமாய் உருவம் பெற்றதே உன் ஆன்மாவும்!????

பொன்னான இத்தருணத்தையும் விட்டு விட்டு பின்னாளிலே புலம்ப வேண்டாமே!