ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்வது,

தன்னைத்தானே புரிந்து கொள்வது,

தன்னைத்தானே உணர்ந்து கொள்வது,

நம்முள் இருக்கும் ஆன்மாவை உணர முடியாமல் தடுப்பது எது?மாயை,

மாயை 2. வகை ,அவை வித்யா மாயை, அவித்யா மாயை,

வித்யா மாயையைச் சார்ந்தால் சந்தோஷம், ஞானம், பக்தி, பிரேமை / வைராக்கியம், இவையெல்லாம் உண்டாகின்றன,

அவித்யா மாயை என்பது பஞ்ச பூதங்களும், புலன்களில் சுகபோகங் களுக்கு காரணமான உருவம், சுவை,மணம், ஸ்பரிசம், ஒசை, என் பவை ஆகும்,

புலன்களின் இன்பத்திற்குக் காரணமான அனைத்தும் நாம் இறைவனை மறக்கும் படிச் செய்கின்றன,

ஒரு பக்கம் மனதைக் கட்டுப்படுத்தினால் மறுபக்கம் அவிழ்த்துக் கொள்ளும் இயல்புடையது மனம் – தியானத்தால் அதை அடக்க வேண்டும்,

தியானம் செய்யத் தொடங்கும் போது மனம் குதிரை போல, மான் போல ஓடும், மனம் தளர்ந்து விடக் கூடாது பிறகு ஒரு நிலைக்கு மனம் வரும்,

தியானம் ஐம்புலன்களையும் அடக்க உதவும்,

தியானம் நிதானத்திற்கு வழிகாட்டும் ,

தியானத்தால் தெய்வீக ரகசிங்களை அறியலாம்,

தியானத்தால் குண்டலினி சக்தி மேலேறும்

தியானத்தால் அவரவர் மனசாட்சி தெரியும்