அன்னை ஆதிபராசக்தியிடம் அடிக்கடி வந்தால் தான் அருள்செய்வள் என்பதில்லை. முதன்முறையாக வருகிறவர்களுக்குக்கும் அன்னையின் அருள் உண்டு.

கடவுள் மறுப்புக்கொள்கையைப் பரப்பி வந்த பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் சீடர் ஒருவர். பழுத்த நாத்திகவாதி. நண்பர் ஒருவரின் வற்புறுத்தாலால் அன்னையின் சித்தர் பீடத்திற்க்கு வந்தார். அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்வாக்கு கேட்டார்.

அவர் வாழ்வில் நடந்தவை; குடும்ப நிலை; அவர் பிரச்சனைகள் அனைத்தையும் அன்னை கூறினாள்.

அவ்வளவையும் கேட்டு விட்டு “தாயே நீ சொல்லுவது எல்லாமே ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது .எப்படி உன்னால் இவ்வளவும் சொல்ல முடிகிறது…? என்று எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. ஆனாலும் உன் இருப்பை ஏற்றுக்கொள்ள முடியாதபடி என் பகுத்தறிவு தடுக்கிறது” என்று அஞ்சாமல் கூறினார்.

அதுகேட்ட அன்னை, மிகவும் மகிழ்ந்து ” மகனே ! என்னை நம்புவதாகப் பறைசாற்றிக் கொண்டு, பலமான குரலில் மந்திரம் படிக்கிறார்கள். பூஜை செய்கிறார்கள். உள்ளத்தில் வஞ்சகம் முதலிய எல்லாப் பாவங்களையும் சுமந்துகொண்டு வெளிவேடம் போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். அத்தகையவர்களை விட உன் மனதில் பட்டதை ஒளிக்காமல் பேசுகிற உன்னை வரவேற்கிறேன். நீ என்ன நம்ப வேண்டாம் ! உன்னைப் பெற்ற தாய் ஒருத்தி உண்டு என்று நம்புகிறாய் அல்லவா? அவளையாவது தெய்வாகக் கருதி போற்றி வணங்கு” என்று சொல்லி ” இந்தா இதை வைத்துக்கொள்” என்று வேப்பிலை ஒன்றை அவரது கையில் போட்டாள் . அது ஒரு கற்பூரக் கட்டியாக மாறியது. நீ பலருக்கும் உபகாரம் செய்திருக்கிறாய் அதனால் நீ உடல் நலத்துடன் வாழ வகை செய்கிறேன்” என்றாள்.

வெளியே வந்த அவர், அந்தக் கட்டி கற்பூரத்தை தம் நண்பர் ஒருவரிடம் காட்டி” என் வீட்டில் பூஜை அறையோ, எந்தத் தெய்வப் படங்களோ இல்லையே… இதை என்ன செய்வது ?” என்று கேட்டார்.

அவர் நண்பர், “உங்கள் வீட்டில் பெரியார் படம் இருக்கும் அல்லவா?அதன் அடியில் வைத்து வணங்குங்கள்” என்றார் வேடிக்கையாக.

பக்கம்:385.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தல வரலாறு. பாகம் -1.