அன்னை ஆதிபராசக்தியின்(ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) கருனை வெள்ளத்தில் மூழ்கி அருள் மழையில் நனைந்த அனந்த கோடி பக்தர்களில் நானும் ஒருவன்.

நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தேன். ஆனால் படித்தால் அதற்குரிய நன்மை என்ன என்று நன்கு உணர்ந்த போதிலும் அதில் கவனம் செலுத்த என்னால் இயலவில்லை. நம் அம்மா(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்) அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தேன்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது முழு ஆண்டுத் தேர்வில் இரு பாடங்களிலும் தோல்வி அடைந்தேன். அப்போது அம்மாஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) அவர்களை மனதார வேண்டினேன். மறுதேர்வில் முறையே 90,70 மதிப்பெண்கள் பெற்று இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன்.

ஒவ்வொரு முறையும் படிப்பில் மட்டுமல்லாது பிற நிகழ்ச்சிகளிலும் எனக்கு உறுதுணையாக அம்மா அவர்கள் இருந்தார்கள். அதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் 12 படிக்கும் போது கணக்குப் பாடம் எல்லா மாணவர்களுக்குமே மிகவும் கடினமான வினாத்தாளாக அமைந்தது. எனக்காக என் வீட்டில் லட்சார்சனை நடந்தது. நான் கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெற்றேன். அதும் அம்மா அவர்களின் அருளால் மட்டுமே.

அதன் பிறகு கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல்(B.sc. Computer science) எடுத்துப் படித்தேன். பிறருடன் சம அளவில் கூட என்னால் படிக்க இயலவில்லை. சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலாமல் 36 பாடங்களில் தோல்வியே அடைந்தேன். இதனால் வீண் அலைச்சல், மனவேதனை வீட்டில் பிரச்சினைகள்,குழப்பங்கள் என ஏகப்பட்ட வலியில் இருந்தேன். ஆனாலும் அம்மா அவர்கள் மீது நம்பிக்கையை மட்டுமே விடவில்லை.

என் பெற்றோர்கள் நான்கு வருடத்திற்குப் பிறகு என்னை எந்த வேலைக்கும் போகும்படி கூறாமல் 36 பாடங்களையும் மறுபடி எழுத ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அகிலமெல்லாம் ஆட்டுவிக்கும் அன்னை ஆதிபராசக்தியிடம் தஞ்சமடைந்தேன்.(வேண்டினேன்).

இம்முறை நான் 36 பாடங்களிலும் பாதிப் பாடங்கள் தேர்வு பெற்றால் தான் பிற்பாதி பாடங்கள் படிக்க மனம் விருப்பும். அதனால் “அம்மா” (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்) என்னை மனம் தளராமல் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் என வேண்டினேன். என்னால் எப்போதும் போல் முழு மனதுடன் படிக்க முடியவில்லை.

ஆனால் நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி பக்கத்தை நிரப்பி விட்டேன். அம்மா அவர்களின் அருளால் முதலில் 17 பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றேன். அடுத்த முறை12 பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றேன். அடுத்து இரண்டுபாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றேன். இப்போது மீதியுள்ள 5பாடங்களிலும் அம்மா அவர்கள் கருனையால், அருளால் தேர்ச்சிப் பெற்றேன்.

நான் இவ்வளவு தூரம் வருவேன் என என் பெற்றோர்களும் சரி, மற்றவர்களும் சரி; ஏன் நான் கூட நினைக்கவில்லை. இதை நினைத்து அம்மா அவர்களை மனதில் நினைத்து உருகத் தொடங்கினேன்.

அம்மா (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்)அவர்களை வேண்டுங்கள் படிக்க இயலவில்லை என்றால் தனக்கு படிக்க விருப்பம் தரும்படி கேளுங்கள். ஏன் ! படிப்பு வேண்டும் என்று அம்மா அவர்களிடம் மனமுருகி வேண்டி முழுமையாக சரணடையுங்கள். அம்மா அவர்களின் அற்புதம் உங்களுக்கும் புரியும்.

நன்றி

சக்தி. பிரசாந்த்பாண்டியன்,
மதுரை-17.

பக்கம்:54-55.
சக்தி ஓளி, ஜூலை-2016.