சக்திகளே பாருங்கள்.. 20.06.19 சென்னையில் பெரிய மழை…

“சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாதங்களாக வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் ஒரு பக்கம்.. இன்றோ அதிசயதக்க விதமாக சென்னையில் மழை..”

அதுவும் தொடர்ந்து 5நாட்கள் தொடரும் என்று அறிவிப்பு வேறு..

இது அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது..

கடந்த 4 நாட்களாக சென்னை மாநகர சக்திகள் ஒன்றிணைந்து சேர்ந்து “ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களை இன்றைய தினம் 20.06.19 பாதபூஜை செய்து ஆன்மிககுரு அருள்திரு (பங்காரு அடிகளார் அவர்கள்)அம்மாவிடம் மழை வளம் வேண்டும் சென்னைக்கு என்று ஒற்றுமையாக வேண்டினார்கள்..”

“அன்னைஆதிபராசக்தியும் மனமிறங்கி திருவாய் மலர்ந்து மழை வளம் தருகிறேன்.” என்றாள்…

“ஒற்றுமையாக ஒன்றிணைந்து…”
(கவனிக்க)

“அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக மழை வேண்டல் படித்து அம்மாவிடம் வேண்டுங்கள்..” தருகிறேன் என ஆசிர்வாதம் செய்து அனுப்பியுள்ளாள்..”

“ஓம் மழை வளம் தருவாய் போற்றி ஓம்..”

“ஓம் மக்கள் குறை தீர்ப்பாய் போற்றிஓம்.”

“பரம்பொருளே திருவாய் மலர்ந்து மழை வளம் தருகிறேன் என்றால் பஞ்சம் பூதங்களும் அவளுக்கு கட்டுப்பட்டு அவள் ஆணையை நிறைவேற்றுகின்றன.”.

“நாம்தான் நம்முள் இருக்கும் வேற்றுமைகளை களைந்து அம்மாவிடம் சென்று வேண்டுதல் வைக்க வேண்டும்..”

அழுதால் கிடைக்கும்:

“குழந்தை அழுதால் பசி ஆறுகிறது. கன்று அழுதால் பால்
குடிக்கிறது.

இயற்கை அழுதால் வளம் கிடைக்கிறது.

அதுபோல தெவய்வத்திடம் நீ அழுவதால் அதற்குரிய நல்ல பலன்கள் உனக்குக்
கிடைக்கின்றன.”

அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு

நீ, நான் பேதமின்றி..

தமிழகத்தின் மற்ற மாவட்ட சக்திகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நீ, நான் என்ற பேதமின்றி அனைவரும் சேர்ந்து ஊர், மாநில, உலக நலனுக்காக மழை வளம் வேண்டி அம்மாவிடம் பாதபூஜையில் வேண்டுங்கள்…

மனமிறங்குவாள்… உண்மையான வேண்டுதலுக்கு…