அகிலம் முழுவதும் தன் அருளாட்சியைப் பரப்பி அனைத்து மக்களையும் தன்பால் ஈர்த்து நம்பிக்கைஎன்ற ஒரு கை கொண்டு, தொழுதாலே தன் ஆயிரங்கரங்களால் தன் அருளை வாரி வழங்கும் அன்னை ஆதிபராசக்தி யின் அற்புதங்கள் ஒன்றல்ல – இரண்டல்ல – ஆயிரங்கள்,

அனைத்து உயிர்களும் அவன் படைப்பே படைப்பவளும் அவளே கொடுப்பவளும் அவளே அவளுக்கு இணை அவளே ,அனைவருக்கும் துணையும் அவளே, அவள் தன் மக்கள் எதைக் கேப்பினும் காலமறிந்து அளிக்கும் சித்தர் தலைவியும் அவளே,

சினம் அடங்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்கல்லார்க்கு மறுபிறவி வந்திடுமே,

குதிரையை அடக்க கடிவாளம் உண்டு,
சொல் கேட்காப்பிள்ளையை அடக்க பிரம்பு உண்டு,
நாயாய் அலைந்திடும் மனதை அடக்க வழிகாணேன்,
ஆதிபராசக்தி அன்னையின் பெருங்கருணையால் சீலமிகு மருவூரில் பாயும் திருவருளால் மனம் அடங்குமே,

நினைத்தல் என்பது மனதின் செயல் நினைத்தலை கட்டுப்படுத்தி அன்னை உருவத்தை ஒருமுகமாய் முனைந்து கருத்தில் நிறுத்தி வைப்பது தான் தியானம்,
ஒரே தெய்வம்,
ஒரே மந்திரம்,
ஒரே இடம்,
ஒரே காலம்,

ஆன்மீகத்தாலும் ஆதிபராசக்தி இயக்கத்தாலுந்தான், உலகத்தில் நல்ல வழி ஏற்படும்,

எப்போது மனிதன் உப்புபுளியைக்கண்டுபிடித்தானோ அப்பொழுதியிலிருந்தே மருந்தும் மாத்திரையும் தேவைப்படுகின்றன,

மனிதனை மனிதனாகவும் பெண்களை பெண்களாகவும் ,சக்தியை சக்தியாகவும், நினைத்தால் பிரச்சனை வராது,

அன்னையின் அருட்கொடைகளைச் சிந்திப்பவன் சித்தியடைவான்,
ஆன்மாவுக்கும் அறிவுக்கும் உடலுக்கும் பலவீனத்தை உண்டாக்கிற எந்த விசயத்தையும் உன் கால் கட்டை விராலால் கூட தீண்டாதே