நானும் என் நண்பன் பார்த்தசாரதியும் இணைபிரியா நண்பர்கள். என் நண்பனுக்கு இளமையிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்கின்ற நிலை. தடீரென்று அவன் தந்தை காலமாகிவிட்டார். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி,தாய் குடும்பத்தைப் பார்ப்பதா? கல்லூரிப் படிப்பைத் தொடர்வதா எனக் குழப்பம் வந்தது. என்னால் ஆன உதவிகளைச் செய்தேன்.கல்லூரியை முடித்து வெளியேறியபின் காலம் எங்களைப் பிரித்தது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அவனைப் பழனியில் சந்தித்தேன். 3.3.88 அன்று குருபிரான் அவதாரத் திருநாள் தரிசனம் முடித்துவிட்டுத் திரும்பும்போது அவனைச் சந்தித்தேன்.

அந்தக் காட்சி கண்டு இரத்தக் கண்ணீர் வடித்தேன்.கண்ணீருடன் விசாரித்தேன்.

கொடுமையான வியாதிகளோடு போராடிக் கொண்டிருந்தான். ஒன்றா…இரண்டா… நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, கொழுப்பு சத்து உடலில் மிகுந்து வியாதி, பேசவே முடியாமல் படுக்கையில் கிடந்தான்.

அவன் தங்கைகளும்,தாயும் சோகக் கதைகளைச் சொன்னார்கள்.

ஐந்து வருடத்துக்கு முன் மதுரைக்கு அருகில் கிராம அதிகாரியாக அரசாங்க வேலை கிடைத்தது. மூன்று தங்கைகளுக்கு மணம் முடித்தான்.

திடீரென அனைத்து நோய்களும் படையெடுத்தன. சிகிச்சை பலனளிக்கவில்லை. இருந்த நிலம், வீடு எல்லாம் விற்றாகிவிட்டது. குடும்பமே உருக்குலைந்து போய்விட்டதடா தம்பி ! எங்கள் மனமும் உடைந்து விட்டது. எத்தனையோ கோயில்களுக்குப் போனோம் எந்தத் தெய்வமும் கண் திறக்கவில்லை.

சோதிடர்களைச் சந்தித்தோம். உங்களுக்கு நேரம் சரியில்லை என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.இவன் இன்றோ, நாளையோ என்று கிடக்கிறான். இவனும் எங்களை விட்டுப் போய்விட்டால் நாங்கள் நாதியத்து நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்று அவன் தாய் கூறிய வார்த்தைகளைக் கேட்டு மனம் குமுறிக் குமுறி அழுதது.

மருவத்தூரிலிருந்து சென்றதால் கையில் *#சக்திஒளி* புத்தகம் இருந்தது. #அம்மாவின் #பிரசாதம் இருந்தது. அதைக் கொடுத்து ஆறுதல் கூறினேன்.

அம்மா! நீங்கள் எப்படியாவது ஒரு முறை அந்த மருவத்தூர் மண்ணை மிதித்து விட வேண்டும். குடும்பத்தோடு செல்ல வேண்டும். அந்த மண்ணின் மகிமையை சொல்வதை விட அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

நீங்கள் பல கோயில்களுக்கு போயிருக்கலாம். மருவத்தூர் அப்படிப்பட்டது அல்ல.
*#ஆதிபராசக்தி_அம்மாவே_அங்கே #அவதாரமாகி_வந்திருக்கிறாள்.* கலியுகத்தின் குறை தீர்க்க வந்திருக்கிறாள்.

அவள் மனம் வைத்தால் நடக்காதது எதுவும் இல்லை. அம்மாவின் மகிமை,அடிகளார் மகிமை, மண்ணின் மகிமை பற்றி நான்கு மணிநேரம் எனக்குத் தெரிந்த அனுபவங்களைக் கூறினேன்.

எதற்கும் ஒரு நல்ல நாள் பார்த்துப் புறப்படுங்கள் என்று சொல்லி விடை பெற்றேன்.

நான் ஊர் திரும்பிய அந்த நாள் இரவு என் நண்பன் சக்திஒளியை வரி விடாமல் படித்திருக்கிறான்.

அன்று இரவு….அவன் கனவில் அடிகளார் அம்மா தோன்றி இருக்கிறார்கள்.

*மகனே! நீ தொடர்ந்து சக்திஒளி படித்துக் கொண்டு வா. அதன்மூலம் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நிம்மதி கொடுத்து உங்கள் குறைகளைப் போக்கி வருவேன். சக்தி ஒளியால் ஒரு பெரிய மாற்றத்தை நான் உண்டுபண்ணிக் கொண்டு வருகிறேன்.எங்கெங்கே சக்திஒளி இருக்கிறதோ அங்கெல்லாம் நான் அருள்பாலிப்பேன்.* என்று சொல்லி மறைந்திருக்கிறார்கள்.

மறுநாள் கண்விழித்த நண்பன் மனத்தில் ஏதோ ஒரு தைரியம் வர ஆரம்பித்தது. உடனே நடந்தவற்றை தபாலில் எழுதி பழைய சக்திஒளி புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வா என எழுதி இருந்தான்.

நானும் சந்தோஷத்துடன் போய் கொடுத்தேன்.

என் உடம்பில் ஏதோ ஒரு பளு குறைந்துள்ளது எனச் சொன்னான்.

அதன்பின் என் நண்பன் *சக்திஒளி* படித்துக் கொண்டு வர வர தன் உடலில் மாற்றம் உண்டாவதை உணர்ந்தான்.குடும்பத்தில் படிப்படியாக நிம்மதி ஏற்பட்டு வருவதை உணர்ந்தான்.

அன்றாடம் பக்கத்து வீட்டைக்காரர்கள் அனைவரையும் அழைத்து உட்கார வைத்து சக்திஒளியில் வந்த அனுபவங்களை வாசித்து வந்தான். இதுவும் ஒருவகைப் பிரச்சாரப் பணி அல்லவா?

ஓராண்டிற்குப் பிறகு தடைபட்ட அவன் தங்கைகள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

அவன் உடலில் இருந்த வியாதிகள் அனைத்தும் நீங்கி குணமடைந்தான். அன்னையின் கருணையை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் சொல்லி மாளாது என்பது அவன் கருத்து.

சக்திகளே! அனைவரும் சக்திஒளி சந்தாதாரர் ஆகுங்கள்! அவற்றைப் படித்து படித்து அன்னையின் கருணையில் நம் ஆன்மா மூழ்கட்டும்.

மனம் சஞ்சலம் அடையும் போதெல்லாம் சக்திஒளி படித்து மனத்தை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

*ஒவ்வொரு வீட்டிலும் சக்திஒளி இருக்கவேண்டும்.* *சக்திஒளி இருக்கிற இடத்திலேயும்* *நானிருக்கிறேன். அது வெறும் வியாபாரப் பொருளல்ல! அது ஒரு தெய்வீகப் பொருள்!* என்பது அன்னையின் அருள்வாக்கு

அன்னையின் 108 சித்தாடல்கள் நூலிலிருந்து….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here