ஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்

0
92

தன் குடும்பம் தன் பிள்ளை என்று நினைப்பதுபோல மற்றவர்களையும் நினை,நாடு செழிக்கும் அடுத்தவன் உனக்கு என்ன செய்தான் என்று பார்க்காதே, அடுத்தவனுக்கு நீ என்ன செய்தாய் என்று பார்,

குடத்தில் உதித்த அகத்தியரின் உருவம் சிறியதுஆனால் கடல் முழுவதையும் குடித்துவிட்டார் அவர் புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது, சூரியனை பார்த்தால் சிறியதாக தோன்றுகிறது ஆனால் அது உதயமானதும் உலகத்து இருள் அனைத்தையும் ஒட்டி விடுகிறது ,மந்திரம் சிறிய துதான் ஆனால் அதன் ஆற்றல் பிரம்மா, விஸ்ணு, சிவன் மூவரையும் வசப்படுத்தி விடுகிறது,

தேவலோகம் உன்உள்ளே இருக்கிறது பேரறிவு என்பது வெளியில் தேடிப்பெறுவது அல்ல, அது நம் உள்ளத்தைக் கடைந்து இறையருள்ளால் பெறுவது இதனைத் தான் மெய்யறிவு, என்பர்,

உங்களுக்காகவே இயற்கையைப் படைத்து கொடுத்துள்ளேன் இயற்கை தனக்காக வாழ்வதில்லை, மனிதன் மட்டுமே தனக்காக வாழ்கிறான்,

பக்தியினால் பூகம்பமும் தணியும் ,இயற்கை சக்தி வாய்ந்தது, செயற்கை சேறு போன்றது,

ஒவ்வொரு உயிரிலும் ஆன்மாவாக உறைபவள் அன்னை என்பதை அறிவது வேறு ,அனுபவத்தால் உணர்வது வேறு, அனுபவத்தால் உணர்வதே ஞானம்,

உடம்பு செயலற்று கிடக்கப் பண்ணுதல், வாய் செயலிழக்கப் பண்ணுதல், நமது முயற்சியால் நலம் பெற வேண்டியன,
மனதை செயலிழக்கப் பண்ணுவது அன்னையின் திருவருளால் மட்டுமே முடியும்,

எல்லோர்க்கும் அருள்பாலிக்கவே, அவள் எண்ணுகிறாள் ஆனாலும் அவனவன் கரும வினை என்னிடம் வந்து ஒட்ட மாட்டேன் என்கிறான் அந்த கரும வினை அவன் கண்ணை மறைக்கிறது,

ஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல் அது மேல்மருவத்தூரில் மட்டுமே