நீ தெய்வமோ சித்தரோ

அம்மா...! நீ_தெய்வமோ.. சித்தரோ...!! எனக்கு_தெரியாது...!! தெளிவானேன் உன்னாலே...!! அதை சொல்லமுடியாது....!!! பயம்.. படபடப்பு நடுக்கம்.. மனகலக்கம்.. எல்லாம் போய் வந்தது... தனி இலக்கம்....!! அவதாரம்....!! பரம்பொருள்_நீ #என்றார்கள்..!! அம்மா_என்று #உன்னிடம்_வந்தேன்....!! அனைவரும் மதித்து வந்தார்கள்....!!! எனக்கென்று முகவரி தந்தார்கள்...!! 'வாங்க சக்தி' கைகூப்பி வணங்குகிறார் உன்னாலே....!!! மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது தன்னாலே....!! பதராகி_போயிருப்பேன்", காற்றோடு....!! பதறாதே' #என்றணைத்தாய் உன்னோடு.....!!! எண்ணுமுன்னே...

மருவூரார்!

மனமது நினைவினில்.. சுகமதில் மலருது!  தனிவழி உருள்வலம்  வருகிற எழில்மது.. இனிமையில் லயிக்குது! இருந்தாலும். . இறையனே...இதுஇனி.. உனதுடல் அயர்வினை.. உணர்ந்திடில் ஒருபுறம் அளவிலா அழுகையில்.. உளமது. .கதறுதே..! படுகிற மனமினி.. பரம்பொருள் இறைவனே.. இதுஇனி நிறுத்திடு.. எனமனம் உருகுதே! இதுநாள் வரையிலும்.. இடரறு துணையென.. இருந்தெமை  அணைத்தனை.. இனியுனை.. பார்த்தால் போதும்..நீ பார்த்தால் போதும்...! எங்களுடன்..நீ. இருந்தால் போதும்!  உன்னுடன் நாங்கள் இருந்தால் போதும் ..?? குருநாதா! ...சபா ஸ்ரீமுஷ்ணம்....

சொல்ல முடியுமா?

மருவூரார்! சொல்ல முடியுமா?  வெளியில்.. சொல்ல முடியுமா? சொல்லமுடியா  துயரங்களை சொல்லாமலே தீர்த்தநிலையை! மானம்போகும் என்றநிலையை மாற்றிமகிழ்வு தந்தமதியை! உன்னிடம்வந்து சொன்னாலும் உன்பெயரை  சொன்னாலும் மனமுருகி நின்றார்க்கு மழைபொழியும்  தன்னாலே! எத்தனையோ செய்துவிட்டாய் எதை சொல்வது? அத்தனையும் சொல்லிஎழுத இடம் உள்ளதா? குருவாக நீவந்த பெருமை சொல்லவா? கொற்றவனே..நீசெய்த மகிமை கொஞ்சமா? மருவத்தூர்  வந்தபின்தான் மாற்றம் வந்தது! மற்றவர்கள்  கேலி எல்லாம்  ஆட்டம் கண்டது! சொல்ல முடியுமா?  உலகில்.. சொல்ல முடியுமா? உனை நம்பாத கூட்டத்தில்  நானிதை சொல்ல முடியுமா? ? ......சபா ஸ்ரீமுஷ்ணம்

மருவூரார்!

எதிலும் மனம்  லயிக்கவில்லை.. இதயம் வலி.. பொறுக்கவில்லை... உண்ண முடியவில்லை.. உறங்க முடியவில்லை.. உனக்கு உடல்நிலையில். . சிறிது தொய்வு என்றால்.. எண்ண இயலவில்லை. . என்ன விளையாட்டு. ??? சித்தர்கள் தலைவனாய்... சித்துக்களின்  முதல்வனாய்... எத்தனை உயிர் காப்பாற்றி... எத்தனை நோய் சீராக்கி.... பித்தங்களை நேராக்கி... பிரிந்த குடும்பம்  ஒன்றாக்கி. ... அளப்பரியா அற்புதங்கள். . அனுதினமும் செய்திட்டு... மகிழ்வித்த மகானே... எங்கள்....

தெறிப்புகள்

கவிதைகள்