மொழியால் வழிபடுவது மந்திரம் உரைத்தல்…. மெய்யால் வழிபடுவது எளியவர்க்குத் தொண்டு செய்தல்.

இம் மூன்றில் நடுநாயகமாக விளங்குவது மந்திரம் படித்தல். இம் மந்திரங்களைப் படிப்பதால் பல்வேறு தெய்வ அனுபவங்கள் கிட்டும். மன அழுத்தமும் வருத்தமும் நீங்கி அமைதியும், மகிழ்வும் கிட்டும். இத்தகைய மந்திரங்களை உச்சரித்து வாழ்வில் மேன்மை அடைந்தோர் ஒன்றல்ல, இரண்டல்ல….. பலகோடி. இந்த மந்திரங்களும், அன்னையைப் போற்றுதற்குரிய பாரம்பரியம் மிக்க பாடல்களும் அடங்கிய மந்திரங்கள் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் தெய்வீக இசை மணம் கமழ வைக்கின்றது. நம் இல்லத்துக்கும், உள்ளத்துக்கும் மட்டுமல்ல, சுற்றுப் புறச் சூழலையும் ஈர்த்து நம்மை சுற்றியிருப்பவர்களையும் பண்படுத்தும். மொத்தத்தில் இயந்திர வாழ்க்கையை, இயற்கை மணமாக்கும் தன்மை கொண்டவை. அன்னையின் இந்த மந்திரங்கள் மனத்திற்கு மருந்தாகும். மனத்திற்கு மட்டுமல்ல … பல உடல் நோய்களைத் தீர்க்கும் ஆற்றலும் இவற்றுக்கு உண்டு. முக்கியமாக சரியாக உச்சரிப்பதன் மூலமே சரியான பலனை அடைய முடியும் என்பது அன்னையின் அருள்வாக்கு.
]]>