” தாயே ! ஆன்மா, ஆன்மா என்று அடிக்கடி சொல்கிறாயே ! ஆன்மா என்றால் என்ன ? விளக்கமாகச் சொல்ல வேண்டும் ” என்று தொண்டர் ஒருவர் கேட்டார். 
” மகனே எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது. பறவையின் ஒலியிலும், பாம்பின் ஒலியிலும் ” ஓம்” என்ற பிரணவ ஒலி உண்டு. ஆனால் உங்களுக்குப் புரியாது. ஆயினும் அ, உ , ம் என்ற மூன்றின் சேர்க்கையில் “ஓம்”என்ற ஒலி உண்டு.

குழந்தைக்கும் குழந்தையுள்ளம் பெற்ற ஞானிக்கும் ஆன்மா பற்றிய உணர்வு புலப்படும். குழந்தை சிரிக்கிறது. அழுகிறது. அதன் உள் நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது. வளர, வளர அக்குழந்தையின் போக்கும் நினைப்பும் மாற்றமடைகிறது . ஞானிக்கும், குழந்தைக்கும் தெரிகிற ஆன்ம உணர்ச்சி பிறருக்கு எட்டாது.

விருப்பு-வெறுப்பு, புகழ் – பழி , ஆடம்பரம்- அந்தஸ்து இவை பற்றிய உணர்ச்சி இல்லாதவனுக்கு ஆன்ம விளக்கம் தெரியும். இவ்வுணர்ச்சிகளைப் பெற்றவன் மேலான மகானாக இருந்தாலும் கீழ்நிலையில் உள்ள ஆன்மாவே ! ” என்றாள் அன்னை.

-தல வரலாறு பாகம் -1

]]>