சாப்பிடுவதற்காக மாம்பழம் வாங்கி வைக்கிறோம். அதை உண்ணாமல் வைத்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழுகி இறுதியில் உண்பதற்கே பயனில்லாது போய்விடுகிறது மகனே! அதை வீசி எறிகிறோம். உண்பதற்கு தகுதி அற்றது என வீசி எறியப்பட்டாலும் அந்தப் பழத்தின் கொட்டை பூமியில் புதைந்து, வேர் விட்டுச் செடியாகி ,மரமாகி மற்றவர்க்குப் பயன் தரத் தொடங்குகிறது மகனே!* அதுபோல நீ செய்த தொண்டு உனது சந்ததியைக் காப்பாற்றும் மகனே!

எத்தனையோ பக்தர்கள் என்னிடம் வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர்க்குத் தொண்டு என்னும் வழியைக் காட்டுகிறேன்.

*அவ்வாறு அவன் தொண்டு செய்து கொண்டே வந்தால் அவன் தேவைகளையும் நிரப்பிக் கொண்டே வருகிறேன். ஒவ்வொரு தேவையும் கிடைத்த பிறகு அவனவனும் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போகிறான்.*

சிலருக்குத் தேவைகள் பெருகப் பெருகத் தொண்டில் ஆர்வம் குறைந்து போகிறது மகனே! இவர்களுக்குத் தேவைகளை நிரப்பிக் கொள்வதிலேயே நாட்டம் இருப்பதால் அந்தத் தேவைகளாலேயே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அந்தப் பிரச்சனைகள் காரணமாக அவனவனும் மனமைதியும், மன நிம்மதியும் இழந்து போகிறான் மகனே!

*தேவைகள் பெருகப் பெருக மன அமைதியும், மன நிம்மதியும் கிடைக்காதடா மகனே! அந்த நிலையில் தொண்டுகளைக் கைவிட்டு என்னை நொந்து கொள்கிறான் மகனே!*

*எவன் எந்தத் தொண்டு செய்தாலும் ,அந்தத் தொண்டிற்குரிய பலன் என்றைக்கும் உண்டு மகனே!*

*தொண்டு செய்! தொடர்ந்து செய் !*

உத்தரவு !என்றாளாம் அன்னை.

*பரம்பொருள் அவதார நோக்குடன் வரும்போது தன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டே விளையாடுமாம்.* யாரோ ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தன் மகத்துவத்தை வெளிப்படுத்துமாம். அவதாரம் முற்றுப் பெற்ற பிறகே அதன் மகத்துவம் உலகமெங்கும் பரவுமாம்.

*கிடைக்கிற வாய்ப்பையும், கொடுக்கிற வாய்ப்பையும் நழுவ விடாதே!*

*என்னை விட்டு அகலாதே…. விட்டால் பிடிக்க முடியாது.*

என்றெல்லாம் சொல்லிக் காட்டுகிறாள் அன்னை. *அவ்வாறு சொல்வதில் ஆழமான அர்த்தம் உண்டு.*

]]>