மேட்டின் மேல் வண்டிச் சக்கரம் ஏறுகிறது. பாரம் அழுத்துகிறது. என்ன செய்வீர்கள்? எப்படியாவது மேட்டின்மேல் ஏறிவிட வேண்டும். அல்லது வண்டிச் சக்கரம் உடைந்தாவது போக வேண்டும் அதுவும் இல்லாத போது முயன்று ஏற வேண்டும். தலையில் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது!” வேள்வி முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்: ———————————————- “அம்மா இங்கே புதுப்புது வேள்வி முறைகளைச் சொல்கிறது. இங்கே வருபவர்கள் – பெண்கள் இவற்றையெல்லாம் பார்த்தும், கேட்டும் தலையாட்டுவதோடு சரி! கற்றுக் கொள்வது இல்லை. பயன்படுத்திக் கொள்வது கிடையாது. இவற்றையெல்லாம் யார் யாரோ கற்று வைத்துக் கொண்டு பயனடையப் போகிறார்கள். நீங்கள் ஏமாறப் போகிறீர்கள். பயன்படுத்திக் கொள்கிற புத்திசாலித்தனம் இல்லாமல் போனால் அதற்கு நானா பொறுப்பு? அம்மாவா பொறுப்பு? ஒவ்வொரு மன்றத்திலும் வேள்வி முறைகளைக் கற்றுக் கொண்ட தொண்டர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?” குரு உபதேசங்கள்

]]>