அதற்கு அந்த ஊர்க்காரர் கூறினார் “கிருஷ்ணமூர்த்தி என்பது மனிதரல்ல.கருடன்.கருடனைத்தான் இந்த ஊரில் கிருஷ்ணமூர்த்தி என்பார்கள்.ஊரில் மழை பெய்யாது,ஊரே காய்ந்து போய் கிடக்கிறது. கருடன் வருவது கடினம்.இதுதெரியாமல் நீங்கபாட்டுக்கு கிருஷ்ணமூர்த்தி வந்துவிடுவார் என்று கூறிவிட்டு வந்துவிட்டீர்கள் என்றார்.அதனை கேட்ட புலவர் தெரியாமல் கூறிவிட்டோமே என்று இரவு முழுவதும் நம் குருஅம்மாவை வேண்டிக்கொண்டு கும்பாபிடேக நிகழ்ச்சிக்குச் சென்றார்.எல்லோரும் வானத்தையே பார்த்தபடி இருந்தனர்.புலவர் குருஅம்மாவே துணை என்றிருந்தார்.அப்போது எங்கிருந்தோ 3 கருடன்கள் வானில் வட்டமடித்தன. கும்பாபிடேகம் நல்லபடியாக நடந்தது.பிறகு மருவத்தூருக்கு வந்து அம்மாவை சந்தித்த புலவரிடம் நம் பங்காரம்மா கூறினாள் “உன் வேண்டுதலுக்காக நான்தான் 3 கருடன்களை உருவாக்கி பறக்கச் செய்தேன்” என்று.]]>