காஞுஞுஞ்சீபுரம்,ராஜகுளம் என்ற ஊரில் செல்வராசு என்பவர் அன்னையின் பக்தர்.அவரும் அவர் நண்பரும் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள்.ஒருநாள் பள்ளிக்கு சைக்கிளில் இருவரும் சென்றுகொண்டு இருந்தனர்.தனக்கு குடும்ப வழக்கு ஒன்றிற்கு வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதாகவும்,வழக்கை எதிர்கொள்ளும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் செல்வராசுவின் நண்பர் வருத்தப்பட்டு கூறினார்.

செல்வராசு மருவத்தூர் அம்மா பல அற்புதங்களை நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறாள் என்றும்,உன் பிரச்சினை தீரும் என்றும் நண்பரிடம் கூறினார்.நண்பரோ,அம்மாவால் இந்த அளவு பூசணிக்காய் வரவழைத்துக் காட்ட முடியுமா? என்று கிண்டலடித்தார்.செல்வராசு இஷ்டப்பட்டால் வா.இவ்வாறெல்லாம் கிண்டல் செய்யாதே என்று கோபித்துக்கொண்டார்.அதற்கு நண்பர் விளையாட்டுக்காக கூறினேன் என்று கூறினார்.

இருவரும் மருவத்தூர் சென்றனர்.செல்வராசுவின் நண்பர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.அம்மா முன்பு அமர்ந்ததுமே,அம்மா,மகனே,நீயும் உன் நண்பனும் என்ன பேசிக் கொண்டீர்கள்?அம்மா பூசணிக்காய் வரவழைக்குமா என்றுதானே கேட்டாய்?கையை நீட்டு என்று சொல்லி,கையில் ஒரு வேப்பிலையை கிள்ளி வைத்தார்கள் நம் அம்மா.

மற்றொரு கையால் வேப்பிலையை மூடு என்றார்கள்.வேப்பிலை இவர் எந்த அளவு காட்டி கிண்டலடித்தாரோ அதே அளவு கல்யாண பூசணிக்காயாக மாறியது.அம்மா,இந்த பூசணிக்காயை மஞ்சள் துணியில் கட்டி,வீட்டு தெருவாசல்படியில் கட்டு.வழக்கில் வெற்றி வாங்கி தருகிறேன்.உத்தரவு.என்று கருணையோடு கூறினார்கள்.

நண்பர் கண்ணீரோடு அன்னையை வணங்கி வெளியே வந்து,செல்வராசுவிடம் நடந்ததை கூறினார்.நண்பர் அன்னை கூறியபடி பூசணிக்காய் கட்டி தொங்கவிட்டார்.மூன்றாம் நாள் வழக்கறிஞர் ஒருவர் வீட்டிற்கு வந்தார்.ஆவணங்கள் படித்துப்பார்த்து,உன் பக்கமே நியாயம் உள்ளதென்றும்,வழக்கை நானே எடுத்து நடத்துகிறேன் என்றும்,ஃபீஸ் வழக்கு வெற்றி பெற்றபிறகு கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார்.


கீழ் நீதிமன்றத்திலும்,உயர் நீதிமன்றத்திலும் இவருக்கு சாதகமாகவே வெற்றி கிடைத்தது.
நாம் எங்கிருந்து என்ன பேசினாலும்,என்ன செய்தாலும் தெய்வம் நம்மை கவனித்துக்கொண்டுதான் உள்ளது.


எங்கோ ஒரு இருட்டு மூலையில் இருந்துகொண்டு தொண்டு செய்தாலும்,அம்மாவுக்கும் தெரியும்.அடிகளாருக்கும் தெரியும்.

பாலில் தண்ணீர் கலந்தாலும் தெரியும்.தண்ணீரில் பாலை கலந்தாலும் தெரியும் என்று அன்னை கூறுகிறாள்.