சொல்வது யாராக இருந்தாலும் இவன் எந்த நிலையில் பேசுகிறான், எப்படிப் பேசுகிறான் என்ற குறிப்பறிந்து, அந்த நிலைக்பேற்ப வேஷம் போட வேண்டும். ஆனால் அதுவே விஷமாக மாறிவிடக்கூடாது. வேஷம் போடுவது தவறான நிலையைத் திருத்தி நல்ல வழிக்குக் கொண்டு வரத்தான் என்ற உள்ளுணா்வோடு செயல்பட வேண்டும். அவனது வார்த்தைகள் விஷமாக இருந்தாலும் அவனையும் நல்லவனாக மாற்றி வேடதாரியாக இல்லாமல் நல்லவனாகக் கொண்டு வரவேண்டும். இந்த ஆண்டு பொங்கல் நல்ல முறையில் வந்தால் கூட அதே நாள் அமாவசை வருகிறது. கிரகணம் வருகிறது. அவ்வாறு வருவது பல வருஷங்களுக்கு முன்பே சுவடிகளில் எழுதி வைத்ததுதான். அதைக் கடைப்பிடித்தாலே இந்த வருஷம் இது வருகிறது. அந்த வருஷம் அது வருகிறது என்பது தெரியும். அந்தப் பழைய சுவடிகளைக் கண்காணித்து நடப்பவர்கள், பழைய நல்ல நிலைக்கு வருகிறார்கள். இந்த உயிர் எங்கு சென்றது? எங்கு வந்தது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எல்லாருடைய உயிரும் ஒன்றுதான். அது உள்ளுக்குள்ளே இருக்கும் பொழுது, கண் இல்லாத குருடாகவும், காது செவிடாகவும் பிறக்கும் பொழுது, இவன் ஏன் இப்படிப் பிறந்தான், எதற்காகப் பிறந்தான் என்ற எண்ணம் வருகிறது. உன்னுடைய தருமத்திற்குக் கண் இல்லாதது போல், உன்னுடைய செயல்களுக்குக் காது இல்லாதது போல பாவித்துக் கொண்டு உன்னுடைய எண்ணங்களின்படி செயல்படுகிறாய். அந்த ஆத்மாவிற்காக இந்த ஆத்மா செயல்படும் பொழுது அந்த ஆத்மாவை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். நடப்பவை எல்லாம் சோதனைக்காக இருக்கலாம். சோதனையில் வெற்றி அடைந்துவிட்டால் அவனும் நல்ல ஆத்மாவாக அமைகிறான். அதை மாற்றி அமைத்தவனுக்கும் நல்ல பலன் கிடைக்கிறது. மனிதன் தான் போன பிறவியில் செய்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறான். இந்தப் பிறவியின் வாழ்க்கை போன பிறவியில் நீ செய்ததைப் பொறுத்து அமைகிறது. எனவே நீ இப்போது இருக்கிற பிறவியில் நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கிறாய். அதைப் பேச்சளவில் பேசி ஏட்டளவில் எழுதினால் போதாது. மேடையில் பேசுவது மட்டும் போதாது. அந்தப் பேச்சு செயல் ரூபமாக செயல்படும் போதுதான் அமைதி கிடைக்கும். கடல், கரையில் அடங்கி இருக்கும் போது அலை கரைக்குள் அடங்கி இருக்கிறது. அதுவே புயலாக வரும்பொழுது அலைகளும் மாறுகின்றன. அது ஒரு நிலைக்கு வரும்பொழுது வேகமாகிறது. கடல் சீற்றம் வரும்பொழுது அழிவுகள் வேகமெடுக்கின்றன. இயற்கை சீற்றம் வரும்பொழுது நெருப்பாலும் சரி, காற்றாலும் சரி அழிவுதானே! இப்பொழுது அனல் காற்று வீசுகிறது. பனிக்காற்று வீசுகிறது. விஞ்ஞானம் கண்டுபிடித்தது மின்சாரம். பனி பொழிந்து மின்சாரத்தையே நிறுத்துகிறது. அதற்கு நிறுத்த சுவிட்ச் எதுவும் கிடையாது. ஆனாலும் நிறுத்துகிறது. அதுபோல் விஞ்ஞானத்தால் கண்டுபிடித்த காரும் சரி, ரயிலும் சரி, ஆகாய விமானமும் சரி பனிப்பொழிவால் அவைகளின் ஓட்டமும் நிற்கின்றன. இயற்கையால் நிறுத்த முடிகிறது. இயற்கை எனும் தெய்வத்தை வழிபடும் பொழுதுதான் இவையெல்லாம் சரியாகும். மனிதனுடைய ரூபத்திலே ஆன்மாவுக்கு உருவம் கொடுக்கிறாய், சிலை வடிக்கிறாய், அந்த சிலைக்கு கண், மூக்கு வைக்கிறாய். அது ஆன்மாவால் உருவாக்கப்பட்ட சிலை.அதற்கு மனித ரூபம் கொடுத்து சக்தி கொடுத்து உருவம் கொடுக்கிறாய். அதற்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ அது மவுனத்தைக் கடைப்பிடிக்கிறது. வழிபாடு என்பது ஜம்புலனையும் ஒருமுகப்படுத்தி வணங்குவதுதான். ஒருவன் தாய் தந்தையை வணங்கும் போது சிலையைக் கூட வணங்க வேண்டியது கிடையாது. தாய் தந்தையை வணங்கும் போது, சிலையையும் கூடவே வணங்கும் போது மனதை ஒருமுகப்படுத்துகிறாய். சிலை பேசுமா என்கிறாய். கல் பேச ஆரம்பித்தால், சிலை பேச ஆரம்பித்தால் உன் நிலை என்ன? சிலை பேச ஆரம்பித்து விட்டால் உன்னுடைய நிலமை உன்ன? அது போல் மனிதனுடைய எண்ணங்கள் இயங்கும் போது உயிர் உன்னைத் துாண்டுகிறது. இயங்க வைக்கிறது. அந்த உயிரைத் தட்டித் தட்டி எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். உள்ளத்தை ஒருமுகப் படுத்த வேண்டும். செயலை ஒருமுகப் படுத்த வேண்டும். செய்வது நல்லதாகச் செய்ய வேண்டும். பிறரிடம் பேசும்போது கூட அன்பாகப் பேசு. வேகமாகப் பேசுகிறவனிடம் கூட அன்பாகப் பேசு. பேசுகிறவன் பேசிக் கொண்டே இருக்கட்டும். பொறுமையாக இரு. அதற்குப் பின் அடக்கம் வரும். அடக்கம் வரும் பொழுது சொன்ன வார்த்தை காதில் ஏறும். மனதில் அமரும். அது போல் செயல்படும் போது, உள்ளமும் மாறுபட்டு செயல்படுவதால்தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று உணர்ந்து தான் செய்வது புகழுக்காகவும், பெருமைக்காகவும் பிறர் கை தட்டலுக்காகவும் இல்லாமல் தான் பிறந்த தன்  குடும்பம் நல்ல நிலைக்கு வரணும், பரம்பரை நல்லா இருக்கணும், உள்ளம் நல்லா இருக்கணும் என்று செயல்படணும். மாட்டுப் பொங்கலும் சரி, பெரிய பொங்கலும் சரி மனித நேயத்திற்கும், நல்ல உள்ளத்திற்கும், நல்ல எண்ணங்களுக்கும் செயல் பட வேண்டியவைதான். புதிய ஆடையை விட சுத்தமான ஆடையே முக்கியம். அழுக்கு கூடாது. போதை உண்டாக்குகிற உணர்வுகளும், போதை உண்டாக்குகிற காட்சிப் பொருள்களும் அழிவுக்குத் தான் வழி வகுக்குமே தவிர நன்மைக்கு ஏற்படாது. அமைதி! அமைதி! அமைதி! இவை தான் இன்றைய தேவை. எப்படி கடல் அமைதியோடு இருந்து காற்று வீசுகிறதோ, எப்படி நிலம் அமைதியோடு இருந்து நமக்குப் பயிர் தருகிறதோ, எப்படி வானம் அமைதியோடு இருந்து மழை தருகிறதோ அது போல் அமைதியாக வாழ்ந்து நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். பருவத்தோடு மழை பெய்தால் நல்ல பலன் கிடைக்கிறது. உன்னுடைய நிலை மாறும் பொழுதுதான் பருவ நிலையும் மாறுகிறது. அது இயற்கையுடைய நிழல்தானே தவிர இயற்கை அல்ல. இயற்கை போல் உருவாக்கப்பட்ட நிழல். மனிதனுக்கு நிழல் இருப்பது போல அதற்கும் நிழல் உண்டு. அதுவாக ஆடாது. அதுவாகப் பாடாது. நீ ஆடும் போது அது ஆடுகிறது. நீ பாடும் போது அது பாடுகிறது. இயற்கையை ஒரு தெய்வமாக வழிபாடு செய்யும்போது இயற்கையுடைய நிழல்தான் நிதானமாகவும், யோகாவாகவும், தியானமாகவும், உடற்பயிற்சியாகவும் செயல் பட வைக்கிறது. அது இயற்கையுடைய நிழல்தான். மனிதனுடைய சூழ்நிலை மற்றும் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் செயல் அமைகிறது. அதே போல் உள்ளம்,,, பருவ காலத்தில் மழை பெய்ய வேண்டிய பொழுது வெய்யில் அடிக்கிறது. வெய்யில் காலத்தில் மழை பெய்கிறது. nகண்ணாடிக்குள் இருந்து பேசும் போது ஒலி கேட்பது கிடையாது. வெளியிலிருந்து பேசும் போது ஒலி கேட்கிறது. உள்ளத்தில் இருக்கிற ஒலி உள்ளத்தின் எண்ணங்களுக்குள்ளும் செயல்களுக்குள்ளும் அடங்குகிறது. ஒரு பறவை இருக்குமிடத்தில் குரங்கு சென்றாலும் சரி மனிதன் சென்றாலும் சரி அது கூச்சலிட்டு செயல்படுகிறது. பறவை குணங்களும், மிருக குணங்களும் அனைத்தும் நல்லதாக உள்ளன. நமக்கு ஏன் அந்தக் குணம் வரவில்லை? அக்கம்பக்கத்திற்கும், குடும்பத்தில் உள்ளவர்கடகும், பெற்ற தாய் தந்தையருக்கும் கூட அமைதி தரும் நிலையில் சிலர் இல்லை. இந்த ஆண்டு கடினமான ஆண்டாக இருந்தாலும் கூட எப்படியும் வருடம் வருடம் தான். விஞ்ஞானம் தேவை தான். செல்போன், டிவி தேவைதான். அவை பற்றிய சில கருத்துக்களையும் நல்லதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மைதான். அதையே சிறப்பு என்று மொத்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உலகம் உருண்டை என்று இருந்தாலும், கலாச்சாரம் மாறுபட்டாலும் மக்கள் ஒன்றுதான். கண், காது, மூக்கு, தண்ணீர் எல்லாமே ஒன்றுதான். அந்த நிலையான உணர்வு ஏற்படும் போதுதான் நல்லது, கெட்டது என்ற தன்மை ஏற்படுகிறது. உள்ளத்தில் அவயங்கள் உள்ளதால் அந்த தன்மைக்கு ஏற்ப அது நன்மை என்றும் தீமை என்றும் தருகிறது. நீ இறந்த பிறகும் இன்று நீ செய்கிற செயலும், நீ செய்கிற தர்மமும் உன் பரம்பரைக்கும் பலன் தரும். எப்பொழுது தாய் தந்தையரை ஒருவன் வணங்குகிறானோ, எப்போது சகோதரத்துவம் என்பதை மனம் ஏற்கிறதோ அதுவே மனிதனுக்கு நல்ல நாள். பொது மக்களுக்கும், செவ்வாடைத் தொண்டர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். அம்மாவின் ஆசி! ஓம் சக்தி! ஆதிபராசக்தி!  

நன்றி சக்தி ஒளி பிப்ரவரி 2010 பக்கம் 25 -29

   ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here