” உங்க பாவங்களை ஏத்துக்கிட்டு இருக்கேன். அதான் வீங்கி இருக்கு. சில நேரங்களில் கீழே கால் ஊன முடியாத அளவுக்கு வலிக்க ஆரம்பிச்சிடுது. பொறுத்துக்கிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் தான் என்னாலயும் முடியும். எனக்கும் எல்லை இருக்கு. நியதிகள் இருக்கு. எப்ப வேணாலும் நிறுத்திடுவேன். வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்திக்கோ !! என்றார்கள். 1 . பாதபூஜையை அம்மா ஏற்றுக் கொள்வதற்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும். பாதபூஜையின் போது மானசீகமாக நன்றி செலுத்தி பூக்களை பாதங்களில் சமர்ப்பிக்கவேண்டும். 2. எங்கள் பாவங்களை மன்னியுங்கள் அம்மா என மனதிற்குள் பிரார்த்தனை செய்ய வேண்டும். 3 . ஏற்கனவே பாதபூஜை செய்து கொண்டு இருக்கும் நாம் தொடர்ந்து தவறாமல் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் செய்யலாம். 4 . இதுவரை செய்யாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம். 5 . ஊழ்வினையால் துன்பப்படுபவர்களுக்கு , நம் மன்றங்களையும், சக்தி பீடங்களையும் , தேடி வரும் பக்தர்களுக்கு பாதபூஜையின் மகிமையை எடுத்துக் கூறி வழிகாட்டலாம். அருட்திரு அம்மா அவர்களைச் சிறிதளவும் சிரமப்படுத்தாமல் பாதபூஜை செய்ய வேண்டும். அம்மாவின் அருள் கூடத்தின் கதவுகள் திறந்து இருக்கின்றன. இன்னும் எத்தனை நாட்களோ இந்த வாய்ப்பு ? ஓம் சக்தி சக்தி ஒளி ஜனவரி, 2017 .

]]>