நம்மைத் தாங்கி நிற்பது அம்மாதான்

-அமைதியாக வாழ்ந்து விட்டுப் போ. வெளியில் இருப்பவன் உள்ளே வருவான். -உள்ளே இருப்பவன் வெளியில் போகாமல் பார்த்துக் கொள். -ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களில் சென்று வழிபட்டாலே பயன் உண்டு. -ஆன்மிகத்தில் தொண்டுதான் முக்கியம். -அடிக்கடி தூசு தட்டுவது போல, தொண்டு, தருமம் உள்ளம் ஆகியவற்றை தட்டி எழுப்ப வேண்டும். -தருமம், தொண்டு செய்து வந்தால் எந்த ஆபத்தும் இல்லை.ஆனால் பொறாமையும் அழுக்கும் சேர்ந்தால் ஆபத்து. -அம்மா இருக்கிறாள் என்று பாம்பு, தேள் இருக்கும் இடத்தில் கை வைக்கக் கூடாது. -அம்மா சொல்லிவிட்டார்களே என்று கடனே என்றும் செய்யக் கூடாது. -சாதாரண நிலையிலும் நான் அடிகளாரோடு இருப்பேன். -ஆயிரத்தெட்டு முறை பாலகன் பார்வை எவன் எவன் மீது படுகின்றதோ அவனுக்கெல்லாம் ஜென்ம சாபல்யமடா. -நீ அடிகளாரிடம் கற்றுக்கொள்ள முடியாததை வேறெங்கும் சென்று கற்றுக்கொள்ள முடியாது. -நம் சித்தர் பீடத்தில் ஏழை பணக்காரன் அனைவரும் சமம். -இவ்விடத்தில் பெண் சக்திகட்கு முன்னுரிமை உண்டு. -இங்கே வந்தால் உங்கட்குப் பணம் காசு கிடைக்கிறதோ இல்லையோ, மன அமைதி நிச்சயம் கிடைக்கிறது. -பக்தர்கட்கு அம்மாவின் பிரசாதங்களான குங்குமம், திருநீறு கொடுக்கும்போது, பயபக்தியுடன் கொடுக்க வேண்டும். எடுத்து வீசுவது போல் வழங்கக் கூடாது.]]>