மேலோட்டமான நம்பிக்கை! வெற்று நம்பிக்கை. எத்தனை பிரச்சனைகள் எதிர் வந்தாலும், சோதனைகள் வந்தாலும் அம்மா இருக்கிறாள்! என்று மனக்கவலைகளை உதறிப் போட்டுவிட்டுக் கவலைப்படாமல் தொண்டு செய்கிறானே அவன்தான் திட நம்பிக்கை கொண்டவன். அந்தத் திட நம்பிக்கை நம்மிடம் இருக்கிறதா? என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள். திட நம்பிக்கை உடையவன்: திட நம்பிக்கை உடையவன் எதற்கும் கவலைப்பட மாட்டான். பிரச்சனைகள் அழுத்தும் போது சோர்ந்து விடமாட்டான். துவண்டு போக மாட்டான். எப்போதும் உற்சாகமாகவே இருப்பான். அம்மா பார்த்துக்கொள்வாள் என்று அலட்டிக் கொள்ளாமல் இருப்பான். தோல்வி வந்தாலும் சரி; அம்மாவின் தெய்வ சங்கல்பம் இது! நாம் என்ன செய்ய முடியும்? நடக்கட்டும்! நடக்கட்டும்! எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்வான். கட்டுரைத் தொடரின் ஓர் பகுதி…

]]>