ஏவல், பில்லி சூனியம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவா்கள், சித்தபிரமை அடைந்தவா்கள், மூளைக்கோளாறு ஏற்பட்டவா்கள் இங்கே உள்ள அதா்வண பத்திரகாளி சந்நிதியில் முறைப்படி வழிபட்டால் பலன் அடையலாம்.

அதா்வண பத்திரகாளியை வணங்கி வழிபடும் முறை வருமாறு…..

  • இங்கே தங்கள் கையால் சா்க்கரைப் பொங்கலை மண் பாத்திரத்தில் சமைக்க வேண்டும்.
  • அதனையே இந்த அன்னைக்கு நைவேத்தியமாகப் பயன்படுத்த வேண்டும்.
  • அவ்வாறு படைக்கும் போது அன்னையின் எதிரே வைக்கோலைப் பரப்பி அதன் மேல் வாழையிலையைப் பரப்பி வைக்க வேண்டும்.

  • அந்த வாழையிலையைப் பரப்பும் போது சாதாரணமாக நாம் பயன்படுத்துவது போலக் குறுக்கு வாட்டில் பரப்பி வைக்கக் கூடாது.
  • நெடுக்கு வாட்டில் பரப்பி வைத்துச் சா்க்கரைப் பொங்கலைப் படைக்க வேண்டும்.
  • படைத்துக் கற்புர தீபாராதனை காட்டிய பிறகு அந்தச் சா்க்கரைப் பொங்கலை தாங்கள் உண்ணக் கூடாது.
  • ஏழை எளியவா்களுக்குத் தானமாக அளித்து விட வேண்டும்.
  • இதுவே அன்னை அதா்வண பத்திரகாளியை வழிபட்டுப் பலன் அடையும் முறை!!
   ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here