2

பருப் பொருளாய் இருக்கும் அனைத்தும் அணுக்களின் சேர்க்கைதான். அணுவுக்குள் இருக்கும் இயக்கம் பொருள்களுள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நாம் புறத்தே காணமுடிவதில்லை. புறத்தே காண முடியாது என்பதனால் இயக்கம் இல்லை என்று கூறிவிடலாமா? இயக்கம் என்பதே சக்தியின் தொழிற்பாடுதான். சக்தி உள்ளடங்கி நிற்கையில் அதற்கு உள்ளடங்கு ஆற்றல் என்ற பெயர் உண்டு என்று கண்டோம் அல்லவா? எல்லாப் பொருள்களிலும் உள்ள அணுக்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்துவதில்லை. ஓர் அணுவுக்குள் பாமாணுவைச் சுற்றி மின் அணுக்குள் சலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அணுவின் ஆற்றல் உள்ளடங்கு ஆற்றலாய் இருக்கிறது. ஒருமுறை பலத்த இடியுடன் பளிச்சிடும் மின்னல் உண்டாக்கும். மின்சக்தி சென்னை போன்ற நகரத்தின் பல நாளைய மின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். இந்த மனின்லும் இடியும் மேகங்களில் உரசலால்தானே ஏற்படுகின்றன. ஆனால் சிலசமயங்களில் தான் இந்த உரசலின் மூலம் சக்தி வெளிப்படுகிறது. இடியில் வெளிப்படும் சக்தி, அணு பிளந்து வெளிப்படும் சக்தி, பேய்க்காற்றின் சக்தி, தீயின் சக்தி என்பவை பெயர்களால் மாறுபடினும் மூலம் ஒன்றுதான். எல்லாப் பருப்பொருளும் முற்றிலும் சக்தியாக மாறமுடியும் என்ற மாபெரும் உண்மையை இந்த உலகுக்கு விஞ்ஞான ரீதியில் தந்தவர் மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஆவார். இந்தப் பேருண்மையை நம்முன்னோர்கள் வேறு விதமாகக் கூறினார்கள். மண், புனல், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பெரும்பூதங்களும் நீயே என்று இறைவனைப் பார்த்துக் கூறினர்.

இதுவரை நாம் கண்டுவந்தது பருப்பொருளாக நமக்குப் புலப்படும் ஜடப் பொருள்கள் நுண்மையாக இருந்தும், நாம் அதன் தொழிற்பாட்டை அறியக் கூடிய மின்சக்தி அணுசக்தி போன்ற நுண்பொருள்கள் ஆகியவற்றின் சக்தி பற்றியே ஆகும். இவை அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியும் உண்டு. இந்தச் சக்திகளை ஓரளவு அடக்கி ஆள்வதுடன் தேவை ஏற்படும் போது இந்தச் சக்திகள் வெளிப்பட்டுத் தொழிற்படுமாறு ஏவுகின்ற ஒரு ஒப்பற்ற சக்தியும் உண்டு. இந்தச் சக்தி பிறசக்திகளைப் போல் எங்கும் பரந்து வியாபித்து இருப்பதுடன் மனிதனிடம் நிறைந்து உள்ளது. இதனை ஆன்ம சக்தி (Spiritual Energy) என்று கூறலாம். இந்த ஆன்ம சக்தி வெளிப்பட்டு விட்டால் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்யலாம். எல்லா உயிர்களிலும் உள்ளடங்கு ஆற்றலாக இந்த சக்தி இருப்பது போலவே, மனிதனிடமும் உள்ளடங்கு ஆற்றலாகவே உள்ளது. பலர் தம்மிடம் இத்தகைய சக்தி இருக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்வதில்லை.

இந்த ஆத்ம சக்திக்குப் பணிந்து பணிபுரிவது மனசக்தி அல்லது எண்ண சக்தி (Mental Energy) என்று கூறப் பெறும் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் பலரும் இந்த மனசக்தியை ஓரளவு அறிந்திருப்பர். இன்றைய விஞ்ஞானம் இந்த சக்தியைப் பற்றிக்கூறும் பொழுது சில வினோதமான புதுமைகளை வெளிப்படுத்துகிறது. உலகமேதை என்று கூறப் பெறும் ஐன்ஸ்டீன் போன்ற மாபெரும் அறிவாளி கூட, அவரிடம் அடங்கி இருக்கும் இந்த மனசக்தியில் இரண்டு அல்லது மூன்று சதவிகிதத்திற்கு மேல் பயன்படுத்தவில்லையாம்.

ஒருவரிடம் அடங்கியுள்ள மனசக்தியில் மூன்று சதவிகிதம் பயன்படுத்தினாலே ஐன்ஸ்டீன் ஆகலாம் என்றால் எண்பது அல்லது தொண்ணூறு சதவீதம் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்ற வியப்புத் தோன்றுகிறது அல்லவா? இதற்கும் மேலே உள்ள ஆத்ம சக்தியைப் பயன்படுத்தினால் அதனால் என்ன ஆகலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? ஆம்! இந்த ஆத்ம சக்தியைப் பயன்படுத்தகிறவர்கள் நாயன்மார்களாகவும் ஆழ்வார்களாகவும், நபிகள் நாயகமாகவும் இயேசுவாகவும், புத்தராகவும், மகா வீரராகவும் ஆயினார்கள். இவர்கள் அனைவரும் இவ்வாறு ஆனதற்கு ஒரே காரணம் இவர்களிடம் மறைந்திருந்த ஆத்ம சக்தியை வெளிப்படுத்தினமையே ஆகும். இந்த ஆத்ம சக்தி வேறு! ஜடப் பொருள்களில் உறைந்து வெளிப்படும் சக்தி வேறு என்று எண்ண வேண்டாம். எங்கும் எல்லா பொருள்களிலும் ஆகாயத்திலும் வெளியிலும் நிறைந்திருப்பது ஒரே சக்திதான். தண்ணீர் ஒன்றே என்றாலும், ஆற்று நீர், ஊற்றுநீர், கிணற்று நீர், கடல் நீர், நீராவி, பனிக்கட்டி என்ற பல பெயர்களைப் பெறுகிறது. அந்த நீர் தங்கியுள்ள இடம், அது கொள்ளும் வடிவம் என்பவற்றிற்கேற்ப நீர் பல்வேறு பெயர்களைப் பெற்று விளங்குவது போல இந்த சக்தியும் இருக்கும் இடம் இயல்பு என்பவற்றிற்கேற்பப் பல்வேறு பெயர்களைப் பெறுகிறது. பேராற்றலும், நுண்மையும் தலை சிறந்து நிற்கும் போது ஆன்ம சக்தி என்ற பெயரைப் பெறுகிறது. இந்த ஆன்ம சக்தியின் மற்றொரு பெயர்தான் ஆதிபராசக்தி.

பெரும்பாலும் மேலே கூறப்பெற்ற சக்திகள் ஒரு பொருளைப்பற்றி நின்றே வெளிப்படும். ஆன்ம சக்தி ஒன்று மட்டும் எவ்விதப் பற்றுக்கோடும் இல்லாமல் தனித்து இயங்கவல்லது. இதே சக்தி மனிதனைப் பற்றி நிற்கையில் ஆத்ம சக்தி என்றும், பற்ற முடியாத ஒன்றைப் பற்றி அதனுள் அடங்கி நிற்கையில் சிவசக்தி என்றும் கூறப் பெறுகிறது. இது கருதியே சிவத்தை ஜடம் என்று, கூறுகிறார்கள். சக்தி உள்ளடங்கி நிற்கையில் சுத்த சிவமாக எவ்விதத் தொழிற்பாடும் இல்லாமல் பேர் அமைதியில் திளைக்கிறது அதுவே அதுவான சுத்த சிவம். இந்நிலையில் அதனைப் பரசிவம் என்றுங் கூறுவார்கள்.

இப்பரசிவத்துள் அடங்கி நிற்கும் மகாசக்தி வெளிப்பட்டுத் தொழிற்படும் பொழுது அந்தச் சிவமும் இதனுள் அடங்கி விடுகிறது. முற்றிலும் சக்தியாக வெளிப்படும் நிலை இதுவே, இந்தத் தத்துவக் கருத்து முற்றிலும் உண்மையானது என்பதை விஞ்ஞான ரீதியாக E-MC2 என்று விளக்கியவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஆவார். பரசிவம் உட்பட அனைத்தையும் தன்னுள் அடக்கி முற்றிலும் ஆற்றல் வடிவாகவே விளங்குகையில் இந்தப் பேராற்றலை ‘‘ஆதிபராசக்தி” என்று கூறுகிறோம். சக்தி யார்? அணு, அண்டம் அவற்றில் நிறைந்துள்ள பொருள்கள் இடைவெளி (Space) ஆகிய யாண்டும் நீக்கமற நிறைந்து வெளிப்படாமல் மறைந்தும், தேவை ஏற்படும் போது வெளிப்பட்டும், படைத்தல், காத்தல், அழித்தல், அளித்தல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்யும் ஒன்றை ‘‘ஆதிபராசக்தி” என்று கூறுகிறோம். இது ஆணா? பெண்ணா? ஆவியா? எல்லாங் கடந்த அதனை விளக்குதற்கு வார்த்தைகள் இல்லை. எனவேதான் நாம் புரிந்துகொள்வதற்காக அதனைப் பெண்ணாக உருவகித்து ஆதிபராசக்தி என்று கூறுகிறோம்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 23-25

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here